حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، وَحُصَيْنٌ، وَمُغِيرَةُ، وَأَشْعَثُ، وَمُجَالِدٌ وَإِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ وَدَاوُدُ كُلُّهُمْ عَنِ الشَّعْبِيِّ، قَالَ دَخَلْتُ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فَسَأَلْتُهَا عَنْ قَضَاءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهَا فَقَالَتْ طَلَّقَهَا زَوْجُهَا الْبَتَّةَ . فَقَالَتْ فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي السُّكْنَى وَالنَّفَقَةِ - قَالَتْ - فَلَمْ يَجْعَلْ لِي سُكْنَى وَلاَ نَفَقَةً وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ ابْنِ أُمِّ مَكْتُومٍ .
ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்கு தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உறைவிடமோ ஜீவனாம்சமோ வழங்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் "இத்தா" மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட தகவல் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது வேறு இடத்திற்கு இடம்மாறிச் செல்ல நான் விரும்பினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அதற்காக அனுமதி கோரினேன்.) நபி (ஸல்) அவர்கள் "நீ இடம்பெயர்ந்து, உன் தந்தையின் சகோதரர் புதல்வர் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கு "இத்தா" இரு" என்று கூறி னார்கள். அத்தியாயம் :
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை" என அறிவித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங்கிருந்த) அஸ்வத் (ரஹ்) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: "உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்திகளை அறிவிக்கிறீரே? உமர் (ரலி) அவர்கள், "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா, அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" (65:1) என்று கூறியுள்ளான்"என்றார்கள். - மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي، الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، تَقُولُ إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلاَثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُكْنَى وَلاَ نَفَقَةً قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَلَلْتِ فَآذِنِينِي " . فَآذَنْتُهُ فَخَطَبَهَا مُعَاوِيَةُ وَأَبُو جَهْمٍ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا مُعَاوِيَةُ فَرَجُلٌ تَرِبٌ لاَ مَالَ لَهُ وَأَمَّا أَبُو جَهْمٍ فَرَجُلٌ ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ أُسَامَةُ بْنُ زَيْدٍ " . فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا أُسَامَةُ أُسَامَةُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ " . قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ .
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர் மூலம்) உறைவிடமும் ஏற்படுத்தவில்லை; ஜீவனாம்சமும் ஏற்படுத்தவில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உன் "இத்தா"க் காலத்தை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக" என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆவியாவோ, ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உசாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்த மானவர்)" என்றார்கள். உடனே நான் "உசாமா; (பெரிய) உசாமா" என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லது" என்றார்கள். பின்னர் உசாமாவையே நான் மணந்துகொண்டேன். நான் பெருமிதம் அடைந்தேன். அத்தியாயம் :
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து "ஸாஉ" பேரீச்சம் பழமும் ஐந்து "ஸாஉ" தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், "எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் "இத்தா" இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ் அவர்கள், "இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)" என்று சொல்லிவிட்டார். உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?" என்று கேட்டார்கள். நான் "மூன்று (தலாக்)" என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் "இத்தா"க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி" என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், "முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப் பிடித்துக்கொள்" என்றார்கள். அத்தியாயம் :