அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்ந்து, அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3845 — Sahih Muslim #3845
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3846 — Sahih Muslim 21:42
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லாமல் அங்கேயே விற்றதற்காக அடிக்கப்பட்டனர். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கியபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்கள்: என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருளை வாங்குவார்கள். பின்னர் அதை (அங்கேயே விற்றுவிடாமல்) தம் வீட்டாரிடம் எடுத்துச் சென்று விடுவார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அளவு தெரிந்த பேரீச்சம் பழத்திற்குப் பகரமாக அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஹதீஸின் இறுதியில் "பேரீச்சம் பழத்திற்கு" எனும் குறிப்பு இல்லை. ("அளவு தெரிந்த பொருளுக்கு" என்று பொதுவாகவே இடம்பெற்றுள்ளது.) அத்தியாயம் :