Qurani·قرآني
தமிழ்

குஸ்ல் (மூழ்காட்டு இஸ்னான்)

46 ஹதீஸ்கள் · #248–293

ஹதீஸ் 248 — Sahih al Bukhari 5:1
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக குளிக்க முற்பட்டால், முத-ல் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார் கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து, அவற்றால், தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள். பிறகு தமது தலையின் மீது மூன்று முறை கைகளால் தண்ணீரை அள்ளி ஊற்றுவார்கள். பிறகு தமது மேனி முழுவதிலும் தண்ணீரை ஊற்றுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 249 — Sahih al Bukhari 5:2
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற் காகக் குளிக்கும்போது) தம்மிரு கால்களை விட்டுவிட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். மேலும், தமது மர்ம உறுப்பையும் உட-ல் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள். பிறகு தம் (உடல்)மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று, தம் கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந்துடக்கிற்காக நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 250 — Sahih al Bukhari 5:3
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து குளித்தோம். அந்தப் பாத்திரத்திற்கு ‘ஃபரக்‘ என்று கூறப்படும்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 251 — Sahih al Bukhari 5:4
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ دَخَلْتُ أَنَا وَأَخُو، عَائِشَةَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا أَخُوهَا عَنْ غُسْلِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَتْ بِإِنَاءٍ نَحْوًا مِنْ صَاعٍ، فَاغْتَسَلَتْ وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَنَا وَبَيْنَهَا حِجَابٌ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ وَبَهْزٌ وَالْجُدِّيُّ عَنْ شُعْبَةَ قَدْرِ صَاعٍ‏.‏
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற் குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களின் குளியல் பற்றி (‘அவர்கள் எப்படிக் குளிப்பார்கள்?’ என்று) கேட்டார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸாஉ’ போன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்-க் குளித்துக்காட்டினார்கள். தமது தலைமீது தண்ணீரை ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது. இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர் களின் ஓர் அறிவிப்பில் (‘ஸாஉ போன்ற’ என்பதற்குப் பதிலாக) ‘ஸாஉ அளவு’ என இடம்பெற்றுள்ளது அத்தியாயம் :
ஹதீஸ் 252 — Sahih al Bukhari 5:5
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ، وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الْغُسْلِ،‏.‏ فَقَالَ يَكْفِيكَ صَاعٌ‏.‏ فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي‏.‏ فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ، ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ‏.‏
அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறுசிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். “ஒரு ‘ஸாஉ’ தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு (மான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 253 — Sahih al Bukhari 5:6
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَيْمُونَةَ كَانَا يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ ابْنُ عُيَيْنَةَ يَقُولُ أَخِيرًا عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، وَالصَّحِيحُ مَا رَوَى أَبُو نُعَيْمٍ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமாôன) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தி-ருந்து குளிப்பது வழக்கம். ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்தி-ருந்து)’ என இடம்பெற்றுள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்கள் குளிக்கும்போது அவர்களைத் தாம் பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும், (என் ஆசிரியர்) அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும். அத்தியாயம் :
ஹதீஸ் 254 — Sahih al Bukhari 5:7
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا ‏"‏‏.‏ وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا‏.‏
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானோ (குளிக்கும்போது) மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன்” என்று கூறி, தம்மிரு கைகளாலும் (தண்ணீர் அள்ளுவதைப் போன்று) சைகை செய்து காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 255 — Sahih al Bukhari 5:8
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مِخْوَلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثًا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தம்மிரு கைகளால் அள்ளி) மூன்று முறை தமது தலையில் தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 256 — Sahih al Bukhari 5:9
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مَعْمَرُ بْنُ يَحْيَى بْنِ سَامٍ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، قَالَ قَالَ لِي جَابِرٌ أَتَانِي ابْنُ عَمِّكَ يُعَرِّضُ بِالْحَسَنِ بْنِ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ قَالَ كَيْفَ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ فَقُلْتُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْخُذُ ثَلاَثَةَ أَكُفٍّ وَيُفِيضُهَا عَلَى رَأْسِهِ، ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ‏.‏ فَقَالَ لِي الْحَسَنُ إِنِّي رَجُلٌ كَثِيرُ الشَّعَرِ‏.‏ فَقُلْتُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ مِنْكَ شَعَرًا‏.‏
அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் -ஹசன் பின் முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- வந்து, “பெருந்துடக் கிற்காகக் குளிப்பது எப்படி?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி, அதைத் தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள்” என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள், “நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே)?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் உம்மைவிட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந் ததே?) என்று கூறினேன். அத்தியாயம் :
ஹதீஸ் 257 — Sahih al Bukhari 5:10
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில் தண்ணீரை ஊற்றித் தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்) கையை பூமியில் தேய்த்(து சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தமது உடல்மீது (ஒரு முறை) தண்ணீர் ஊறறினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சிறிது நகர்ந்து நின்று, இரு பாதங்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.