Qurani·قرآني
தமிழ்

குஸ்ல் (மூழ்காட்டு இஸ்னான்)

46 ஹதீஸ்கள் · #248–293

ஹதீஸ் 258 — Sahih al Bukhari 5:11
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَىْءٍ نَحْوَ الْحِلاَبِ، فَأَخَذَ بِكَفِّهِ، فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக (கடமையான குளியல்) குளிக்கும் போது, பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து (தமது கையில் நீர் அள்ளித்) தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார் கள்; பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (நீர் அள்ளி) தலையின் நடுவில் ஊற்றுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 259 — Sahih al Bukhari 5:12
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنَا مَيْمُونَةُ، قَالَتْ صَبَبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ، فَلَمْ يَنْفُضْ بِهَا‏.‏
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து, பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். பிறகு தமது முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.6 அத்தியாயம் :
ஹதீஸ் 260 — Sahih al Bukhari 5:13
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الْحَائِطَ ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ‏.‏
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காகக் குளித்தபோது (முதலில்) தமது மர்ம உறுப்பைக் கையால் கழுவினார்கள். பிறகு கையைச் சுவரில் தேய்த்துக் கழுவி னார்கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 261 — Sahih al Bukhari 5:14
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளி) குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும். அத்தியாயம் :
ஹதீஸ் 262 — Sahih al Bukhari 5:15
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَهُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது (முத-ல்) கைகளைக் கழுவிக்கொள் வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 263 — Sahih al Bukhari 5:16
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ مِثْلَهُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்கான குளியலை ஒரே பாத்திரத்தி-ருந்து நிறைவேற்றினோம்.. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 264 — Sahih al Bukhari 5:17
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمَرْأَةُ مِنْ نِسَائِهِ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ‏.‏ زَادَ مُسْلِمٌ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ مِنَ الْجَنَابَةِ‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்பார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸ்-ம் (பின் இப்ராஹீம் - ரஹ்), வஹ்ப் (பின் ஜரீர் - ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் தொடர்களில், ‘பெருந்துடக்கிற்காக (குளிப் பார்கள்)’ என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 265 — Sahih al Bukhari 5:18
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَاءً يَغْتَسِلُ بِهِ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا مَرَّتَيْنِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ غَسَلَ رَأْسَهُ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى مِنْ مَقَامِهِ فَغَسَلَ قَدَمَيْهِ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு முன்கைகள்மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது தண்ணீர் ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைத் தரையில் தேய்த்(துச் சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தையும் ((முழங்கை வரை) இரண்டு கைகளையும் கழுவினார் கள்; தலையை மூன்று முறை (தண்ணீர் ஊற்றிக்) கழுவினார்கள். பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள் இரண்டையும் கழுவினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 266 — Sahih al Bukhari 5:19
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غُسْلاً وَسَتَرْتُهُ، فَصَبَّ عَلَى يَدِهِ، فَغَسَلَهَا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ـ قَالَ سُلَيْمَانُ لاَ أَدْرِي أَذَكَرَ الثَّالِثَةَ أَمْ لاَ ـ ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ أَوْ بِالْحَائِطِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ، ثُمَّ صَبَّ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ خِرْقَةً، فَقَالَ بِيَدِهِ هَكَذَا، وَلَمْ يُرِدْهَا‏.‏
மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து, அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தமது கையில் தண்ணீர் ஊற்றி, அதை ‘ஒரு முறை’ அல்லது ‘இரு முறை’ கழுவினார்கள் -“அறிவிப்பாளர் சா-ம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் ‘மூன்று முறை’ என்றும் சொன்னார்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரிய வில்லை” என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் - ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை ‘பூமியில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்; முகத்தையும் (முழங்கைவரை) இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தேன். அப்போது ‘வேண்டாம்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 267 — Sahih al Bukhari 5:20
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ ذَكَرْتُهُ لِعَائِشَةَ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَيَطُوفُ عَلَى نِسَائِهِ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا يَنْضَخُ طِيبًا‏.‏
முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அ(ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் வாசனைத் திரவியங் களைப் பயன்படுத்திக் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவனாக இருக்க விரும்ப வில்லை” எனக் கூறிய)து பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் குறிப்பிட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்திய உறவு கொண்டு)விட்டு வருவார்கள். பிறகு காலையில் நறுமணம் கமழக் கமழ ‘இஹ்ராம்’ கட்டியிருப்பார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.