Qurani·قرآني
தமிழ்

படைப்பின் தொடக்கம் (பத்உல் கல்க்)

136 ஹதீஸ்கள் · #3190–3325

ஹதீஸ் 3190 — Sahih al Bukhari 59:1
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ يَا بَنِي تَمِيمٍ، أَبْشِرُوا ‏"‏‏.‏ قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا‏.‏ فَتَغَيَّرَ وَجْهُهُ، فَجَاءَهُ أَهْلُ الْيَمَنِ، فَقَالَ ‏"‏ يَا أَهْلَ الْيَمَنِ، اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ ‏"‏‏.‏ قَالُوا قَبِلْنَا‏.‏ فَأَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحَدِّثُ بَدْءَ الْخَلْقِ وَالْعَرْشِ، فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ، رَاحِلَتُكَ تَفَلَّتَتْ، لَيْتَنِي لَمْ أَقُمْ‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ தமீம் கூட்டத்தாரே! நற்செய்தி பெறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள் (அது மட்டும் போதாது). அவ்வாறே எங்களுக்கு (தர்மமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.2 அப்போது யமன் நாட்டினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.3 நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன்வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்” என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் படைப் பின் ஆரம்பத்தைக் குறித்தும் இறை அரியணை (அர்ஷ்) குறித்தும் பேசலானார் கள். அப்போது ஒரு மனிதர் வந்து (என்னிடம்), ‘‘இம்ரானே! உமது ஊர்தி ஒட்டகம் ஓடிவிட்டது” என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.4 அத்தியாயம் :
ஹதீஸ் 3191 — Sahih al Bukhari 59:2
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَقَلْتُ نَاقَتِي بِالْبَابِ، فَأَتَاهُ نَاسٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ ‏"‏ اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ ‏"‏‏.‏ قَالُوا قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا‏.‏ مَرَّتَيْنِ، ثُمَّ دَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ ‏"‏ اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ ‏"‏‏.‏ قَالُوا قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالُوا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ هَذَا الأَمْرِ قَالَ ‏"‏ كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ ‏"‏‏.‏ فَنَادَى مُنَادٍ ذَهَبَتْ نَاقَتُكَ يَا ابْنَ الْحُصَيْنِ‏.‏ فَانْطَلَقْتُ فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாயில் அருகே கட்டிப்போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி அளித் தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுங்கள்” என்று (இருமுறை) கூறி னார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (அவர் களிடமும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக்கொள்ள வில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பதில் கூறினர். பிறகு ‘‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது எனும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள்.5 அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப்போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காணமுடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! யிநான் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே! (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)› என்று நான் ஆசைப்பட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 3192 — Sahih al Bukhari 59:3
وَرَوَى عِيسَى، عَنْ رَقَبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَامَ فِينَا النَّبِيُّ صلى الله عليه وسلم مَقَامًا، فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الْخَلْقِ حَتَّى دَخَلَ أَهْلُ الْجَنَّةِ مَنَازِلَهُمْ، وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ، حَفِظَ ذَلِكَ مَنْ حَفِظَهُ، وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ‏.‏
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே ஓரிடத்தில் (சொற்பொழிவு மேடைமீது) எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத் தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும்வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினை வில் வைத்துக்கொண்டார்; அதை மறந்த வர் மறந்துவிட்டார். அத்தியாயம் :
ஹதீஸ் 3193 — Sahih al Bukhari 59:4
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ أَبِي أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُرَاهُ ‏ "‏ يَقُولُ اللَّهُ شَتَمَنِي ابْنُ آدَمَ وَمَا يَنْبَغِي لَهُ أَنْ يَشْتِمَنِي، وَتَكَذَّبَنِي وَمَا يَنْبَغِي لَهُ، أَمَّا شَتْمُهُ فَقَوْلُهُ إِنَّ لِي وَلَدًا‏.‏ وَأَمَّا تَكْذِيبُهُ فَقَوْلُهُ لَيْسَ يُعِيدُنِي كَمَا بَدَأَنِي ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செய லாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதுதான் அவன் என்னை ஏசுவதாகும். யிநான் அவனை ஆரம்பமாகப் படைத்த தைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டுவர முடியாது’ என்று அவன் கூறுவதுதான் அவன் என்னை நம்ப மறுப்பதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3194 — Sahih al Bukhari 59:5
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَمَّا قَضَى اللَّهُ الْخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ، فَهْوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (யிலவ்ஹுல் மஹ்ஃபூழ்’ எனும்) பதிவேட்டில் லிஅது அரியணைக்கு மேலே அவனிடம் உள்ளதுலி ‘‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3195 — Sahih al Bukhari 59:6
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ، فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ، فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏"‏‏.‏
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூசலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக்கொள்வீராக! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யியார் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக்கொள்கி றாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி மறுமை நாளில்) மாலையாக மாட்டப்படும்’ எனக் கூறியுள் ளார்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
ஹதீஸ் 3196 — Sahih al Bukhari 59:7
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَخَذَ شَيْئًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத் காரமாக) எடுத்துக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகள்வரை புதைந்து போகும்படிச் செய்யப்படுவார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8 அத்தியாயம் :
ஹதீஸ் 3197 — Sahih al Bukhari 59:8
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. யிஆண்டு’ என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.9 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3198 — Sahih al Bukhari 59:9
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ خَاصَمَتْهُ أَرْوَى فِي حَقٍّ زَعَمَتْ أَنَّهُ انْتَقَصَهُ لَهَا إِلَى مَرْوَانَ، فَقَالَ سَعِيدٌ أَنَا أَنْتَقِصُ مِنْ حَقِّهَا شَيْئًا، أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏"‏‏.‏ قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قَالَ قَالَ لِي سَعِيدُ بْنُ زَيْدٍ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறைவைத்துவிட்டதாகக் கருதி (மதீனா வின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) நான், ‘‘அவரது உரிமையில் எதையும் நான் குறை வைப்பேனா? யிஎவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மறுமை நாளில் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னேன்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 3199 — Sahih al Bukhari 59:10
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتِ الشَّمْسُ ‏"‏ تَدْرِي أَيْنَ تَذْهَبُ ‏"‏‏.‏ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ الْعَرْشِ، فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنَ لَهَا، وَيُوشِكُ أَنْ تَسْجُدَ فَلاَ يُقْبَلَ مِنْهَا، وَتَسْتَأْذِنَ فَلاَ يُؤْذَنَ لَهَا، يُقَالُ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ‏.‏ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى ‏{‏وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ ‏}‏‏"‏‏.‏
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்குக் கீழே சிரவணக்கம் செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறை வனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒருநாள்) அது சிரவணக்கம் செய்ய, அந்த சிரவணக்கம் ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம்போலக்) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘‘வந்த வழியே திரும்பிவிடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.14 ‘‘இதைத்தான், யிசூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ (36:38) எனும் இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.