حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الدَّانَاجُ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ الْقِيَامَةِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து)விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3201 — Sahih al Bukhari 59:12
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான் றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.15 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3202 — Sahih al Bukhari 59:13
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக் காகவும் அவற்றின் கிரகணம் ஏற்படுவ தில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவுகூருங்கள். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழு கைக்காக நின்று யிதக்பீர்’ கூறி நீண்ட நேரம் (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி, ‘‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்த வனின் புகழுரையை அல்லாஹ் செவியுற் றான்) என்று கூறினார்கள். அப்படியே நின்று நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார் கள். அது முதல் தடவை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். அது முதல் ருகூஐவிடச் சிறியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பிறகு அடுத்த ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். அதற்குள் (கிரகணம் முடிந்து) சூரியன் வெளிப்பட்டுவிட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி, ‘‘அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காக வும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் அவற்றைக் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று சொன்னார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 3204 — Sahih al Bukhari 59:15
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الشَّمْسُ وَالْقَمَرُ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனிலும் சந்திரனிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள். இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3205 — Sahih al Bukhari 59:16
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘ஸபா’ என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள் ளேன்; யிஆத்’ சமூகத்தார் (யிதபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப் பட்டனர்.18 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3206 — Sahih al Bukhari 59:17
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَى مَخِيلَةً فِي السَّمَاءِ أَقْبَلَ وَأَدْبَرَ وَدَخَلَ وَخَرَجَ وَتَغَيَّرَ وَجْهُهُ، فَإِذَا أَمْطَرَتِ السَّمَاءُ سُرِّيَ عَنْهُ، فَعَرَّفَتْهُ عَائِشَةُ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا أَدْرِي لَعَلَّهُ كَمَا قَالَ قَوْمٌ {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ} ". الآيَةَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார் கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர் களின் முகம் மாறிவிடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். ஆகவே, (ஒருமுறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டுவந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆத் சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்துகொண்டு), ‘‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேக மாகும்” (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக்கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னி டம் கொண்டுவரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ‘ஸம்ஸம்’ நீரால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கை யாலும் நிரப்பப்பட்டது.20 மேலும், கோவேறுக் கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான யிபுராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் (அதில் ஏறி வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித் தார். ‘‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘ஆம்” என்றார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்க, ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத் ‘‘ என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈசா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வர வாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. யிஜிப்ரீல்’ என்று பதிலளிக் கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத் தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம்..’ஞீயார் அது?” என்று கேட்கப் பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப் பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘யிமுஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப் பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். ‘‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘‘இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப் பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன் னார்கள். பிறகு, ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் (வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘‘இதுதான் ‘அல்பைத்துல் மஅமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்” என்று சொன்னார். பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) யிசித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) யிஹஜ்ர்’ எனுமிடத்தின் (தயாரிக்கப்படும்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப்போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. (சல்சபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே ஓடிக்கொண்டிருந்தன; மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே ஓடின. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூசா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘என்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் இஸ்ரவேலர் களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள் ளேன். உங்கள் சமுதாயத்தார் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனி டம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களி டம் சென்றேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர் கள்?” என்று கேட்க, ‘‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக்கொண்டுவிட்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை செயல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) எளிதாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது ‘அல்பைத்துல் மஅமூர்’ தொடர்பாக அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார்.21 பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டைபோல் கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப்பிண்டமாக மாறுகிறது.22 பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வான வருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக் கப்படுகின்றன. (அவை:) அதன் செயல்பாடு, வாழ்வாதாரம், வாழ்நாள், நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா என்று எழுதுமாறு அந்த வானவருக்குச் சொல்லப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான், உங்களில் ஒருவர் (நற்)செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொண்டுவிடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்துவிடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்துவிடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரே யொரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசி களின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) அத்தியாயம் :
ஹதீஸ் 3209 — Sahih al Bukhari 59:20
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَتَابَعَهُ أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ. فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ. فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீரும் அவரை நேசிப்பீராக!” என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண் ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார் கள். உடனே, விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமி யிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :