Qurani·قرآني
தமிழ்

படைப்பின் தொடக்கம் (பத்உல் கல்க்)

136 ஹதீஸ்கள் · #3190–3325

ஹதீஸ் 3210 — Sahih al Bukhari 59:21
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ الْمَلاَئِكَةَ تَنْزِلُ فِي الْعَنَانِ ـ وَهْوَ السَّحَابُ ـ فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ، فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ، فَتَسْمَعُهُ فَتُوحِيهِ إِلَى الْكُهَّانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகத்தில் இறங்கி, விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் திருட்டுத்தனமாக (ஒளிந் திருந்து) அவற்றை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக்கு அவற்றை (உள்ளுதிப்பாக) அறிவித்துவிடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.23 இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3211 — Sahih al Bukhari 59:22
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ باب مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ الْمَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக் கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்துகொண்டு) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம், சொற்பொழிவு மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரது உபதேச) உரையைச் செவியுற்ற வண்ணம் வானவர்கள் (உள்ளே) வருவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3212 — Sahih al Bukhari 59:23
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ مَرَّ عُمَرُ فِي الْمَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ، فَقَالَ كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) அவர்களை நோக்கி ™மைதியாக இருக்குமாறு சைகை செய்தார்கள்.) அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், ‘‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக்கொண்டிருந் தேன்” என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி, ‘‘அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவி களுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்குத் தூய ஆன்மா(வான வானவர் ஜிப்ரீல்) மூலம் துணை புரிவாயாக!› என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 3213 — Sahih al Bukhari 59:24
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَسَّانَ ‏ "‏ اهْجُهُمْ ـ أَوْ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ ‏"‏‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ‘‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக்கவி பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3214 — Sahih al Bukhari 59:25
وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ حُمَيْدَ بْنَ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى غُبَارٍ سَاطِعٍ فِي سِكَّةِ بَنِي غَنْمٍ‏.‏ زَادَ مُوسَى مَوْكِبَ جِبْرِيلَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகின்ற புழுதியை (இன்றும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(வானவர்) ஜிப்ரீல் அவர் களின் படைகள் கிளப்பிய’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.26 அத்தியாயம் :
ஹதீஸ் 3215 — Sahih al Bukhari 59:26
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُ قَالَ ‏ "‏ كُلُّ ذَاكَ يَأْتِي الْمَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهْوَ أَشَدُّهُ عَلَىَّ، وَيَتَمَثَّلُ لِي الْمَلَكُ أَحْيَانًا رَجُلاً، فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக்கொண்ட நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று என் முன் தோன்றி காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 3216 — Sahih al Bukhari 59:27
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَتْهُ خَزَنَةُ الْجَنَّةِ أَىْ فُلُ هَلُمَّ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு ஜோடி (பொருட்களை) அல்லாஹ் வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் யிஇன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 3217 — Sahih al Bukhari 59:28
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏ "‏ يَا عَائِشَةُ، هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ ‏"‏‏.‏ فَقَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ‏.‏ تَرَى مَا لاَ أَرَى‏.‏ تُرِيدُ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஆயிஷாவே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று கூறினார்கள். நான், ‘‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” (அவர்மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங் களும் பொழியட்டும்.) (அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கி றீர்கள்” என்று கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘நீங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார். அத்தியாயம் :
ஹதீஸ் 3218 — Sahih al Bukhari 59:29
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، ح قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِجِبْرِيلَ ‏"‏ أَلاَ تَزُورُنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا ‏"‏ قَالَ فَنَزَلَتْ ‏{‏وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا‏}‏ الآيَةَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்கமாட்டீர்களா?” என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, ‘‘(நபியே!) நாம் உங்கள் இறைவனின் உத்தரவின்றி இறங்கு வதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை” (19:64) எனும் இறைவசனம் அருளப்பட்டது.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3219 — Sahih al Bukhari 59:30
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகரித்துக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவுக்கு வந்து நின்றது.30 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.