Qurani·قرآني
தமிழ்

படைப்பின் தொடக்கம் (பத்உல் கல்க்)

136 ஹதீஸ்கள் · #3190–3325

ஹதீஸ் 3220 — Sahih al Bukhari 59:31
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ‏.‏ وَعَنْ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَعْمَرٌ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ‏.‏ وَرَوَى أَبُو هُرَيْرَةَ وَفَاطِمَةُ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தைவிட) அதிகமாக வாரி வழங்கு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள்.31 ஜிப்ரீல் (அலை) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது நபியவர்கள் (மழைக்)காற்றைவிட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ் வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு குர்ஆன் முழுவதையும் (வானவர்) ஜிப்ரீல் ஓதிக் காட்டிவந்தார்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர். அத்தியாயம் :
ஹதீஸ் 3221 — Sahih al Bukhari 59:32
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ‏.‏ قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ‏"‏‏.‏ يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ‏.‏
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அஸ்ர் தொழுகையைச் சிறிது தாமதப்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸ்ரை இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள், ‘‘உர்வா!” என்று சொன்னார்கள். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுவிக்க, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழு தேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்” என்று தம் விரல்களால் ஐந்து தொழுகை களை எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டதாக பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்” என்றார்கள்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 3222 — Sahih al Bukhari 59:33
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ قَالَ لِي جِبْرِيلُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، أَوْ لَمْ يَدْخُلِ النَّارَ، قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ ‏"‏‏.‏
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.33 அத்தியாயம் :
ஹதீஸ் 3223 — Sahih al Bukhari 59:34
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ الْمَلاَئِكَةُ يَتَعَاقَبُونَ، مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَالْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ، فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ ‏{‏عِبَادِي‏}‏ فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ يُصَلُّونَ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகை யிலும் அஸ்ருடைய தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு, அல்லாஹ் லிஅவனோ மிகவும் அறிந்தவன்லி அவர்களிடம், ‘‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘‘அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களி டம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப் பார்கள்.34 அத்தியாயம் :
ஹதீஸ் 3224 — Sahih al Bukhari 59:35
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَشَوْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وِسَادَةً فِيهَا تَمَاثِيلُ كَأَنَّهَا نُمْرُقَةٌ، فَجَاءَ فَقَامَ بَيْنَ الْبَابَيْنِ وَجَعَلَ يَتَغَيَّرُ وَجْهُهُ، فَقُلْتُ مَا لَنَا يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ مَا بَالُ هَذِهِ الْوِسَادَةِ ‏"‏‏.‏ قَالَتْ وِسَادَةٌ جَعَلْتُهَا لَكَ لِتَضْطَجِعَ عَلَيْهَا‏.‏ قَالَ ‏"‏ أَمَا عَلِمْتِ أَنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، وَأَنَّ مَنْ صَنَعَ الصُّورَةَ يُعَذَّبُ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ أَحْيُوا مَا خَلَقْتُمْ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத்தொடங்கியது. நான், ‘‘நாங்கள் என்ன (தவறு) செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தலையணையின் நிலை என்ன?” என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், ‘‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக்கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.37 அத்தியாயம் :
ஹதீஸ் 3225 — Sahih al Bukhari 59:36
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3226 — Sahih al Bukhari 59:37
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ، حَدَّثَهُ أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ حَدَّثَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ وَمَعَ، بُسْرِ بْنِ سَعِيدٍ عُبَيْدُ اللَّهِ الْخَوْلاَنِيُّ الَّذِي كَانَ فِي حَجْرِ مَيْمُونَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَهُمَا زَيْدُ بْنُ خَالِدٍ أَنَّ أَبَا طَلْحَةَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ‏"‏‏.‏ قَالَ بُسْرٌ فَمَرِضَ زَيْدُ بْنُ خَالِدٍ، فَعُدْنَاهُ فَإِذَا نَحْنُ فِي بَيْتِهِ بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ، فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلاَنِيِّ أَلَمْ يُحَدِّثْنَا فِي التَّصَاوِيرِ فَقَالَ إِنَّهُ قَالَ ‏"‏ إِلاَّ رَقْمٌ فِي ثَوْبٍ ‏"‏‏.‏ أَلاَ سَمِعْتَهُ قُلْتُ لاَ‏.‏ قَالَ بَلَى قَدْ ذَكَرَهُ‏.‏
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அறிவிப்பாளர் புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர் களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர் களின் வீட்டில் ஒரு திரையைக் கண்டோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. ஆகவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல்கவ்லானீ அவர்களிடம், ‘‘இவர்கள் (ஸைத் (ரலி) அவர்கள்) நமக்கு உருவங் களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். ஆனால், ஸைத் (ரலி) அவர்கள் (அதை அறிவிக்கும்போது) யிதுணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று (ஸைத் (ரலி) அவர்கள்) சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; அவர்கள் அவ்வாறுதான் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.38 அத்தியாயம் :
ஹதீஸ் 3227 — Sahih al Bukhari 59:38
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ وَعَدَ النَّبِيَّ صلى الله عليه وسلم جِبْرِيلُ فَقَالَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தாம் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். (ஆனால், வர வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்டபோது) ‘‘உருவப் படமுள்ள வீட்டி லும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர் களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3228 — Sahih al Bukhari 59:39
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ‏.‏ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் (தொழுகையில்), ‘‘சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான்) என்று கூறும்போது நீங்கள், ‘‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து” (இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள். ஏனெனில், யாருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த் தைக்கு (நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:39 அத்தியாயம் :
ஹதீஸ் 3229 — Sahih al Bukhari 59:40
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ أَحَدَكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، وَالْمَلاَئِكَةُ تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ‏.‏ مَا لَمْ يَقُمْ مِنْ صَلاَتِهِ أَوْ يُحْدِثْ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும்வரை, அல்லது அவருக்கு துடக்கு ஏற்படாதிருக்கும்வரை வானவர்கள், ‘‘இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்கி றார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.