حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ}. قَالَ سُفْيَانُ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ وَنَادَوْا يَا مَالِ.
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமேல் (உரையாற்றியபோது) ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரிடம்) யியா மாலிக்’ (மாலிக்கே!) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் (யியா மாலிக்’ என்பதற்குப் பதிலாக) யியா மாலி’ என்றுள்ளது” எனக் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(தாங்கள் காயமடைந்த) உஹுத் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன்.41 அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங் களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா’ (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.42 ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பிய படி எனக்குப் பதிலளிக்கவில்லை.43 ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப் பட்ட திசையில் நடந்தேன். யிகர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு, ‘‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலும் உள்ள) இந்த இரு மலைகளை யும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பி னாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். அப்போது, ‘‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல் களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன். அத்தியாயம் :
அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கி னார்கள்.44 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : ‘‘நிச்சயமாக, அவர் தம் இறைவனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்” (53:18)எனும் இறைவசனத்தின் பொருள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீலை லி அடிவானத்தை அடைத்துக்கொண்ட ஒரு பச்சை விரிப்புமீது (அல்லது அவர் தமது இறக்கையை விரித்தபடி அதனால் அடி வானத்தை அடைத்துக் கொண்டு விரித்த படி நிற்கக்) கண்டார்கள்” என்பதாகும். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்” என்று கூறுபவர் பெரிய தவறு புரிந்துவிட்டார்; எனினும், அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களின் (சொந்த) உருவிலும் அமைப்பிலும் அடிவானத்திற்கு இடைப்பட்டதை அடைத்தபடி (தோற்ற மளிக்கக்) கண்டார்கள். அத்தியாயம் :
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், யிபிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப்போல் அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது’ (53:8,9) எனும் இறைவசனம் எங்கே?” என்று கேட்டேன்.45 அதற்கு அவர்கள், ‘‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால்தான் அவர் அடிவானத்தையே அடைத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3236 — Sahih al Bukhari 59:47
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ، وَهَذَا مِيكَائِيلُ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக்கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46 அத்தியாயம் :
ஹதீஸ் 3237 — Sahih al Bukhari 59:48
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ ". تَابَعَهُ شُعْبَةُ وَأَبُو حَمْزَةَ وَابْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதனால் அவள் மீது கோபம் கொண்டவராக அவர் இரவைக் கழித்தாரென்றால் அவளை, விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதன் முதலாக யிஹிரா’ குகையில் எனக்கு வேதஅறிவிப்பு கொண்டுவந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. (அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை) நான் (பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். அப்போது என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே யிஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகிவிட்டேன். அதையடுத்து (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்துவிட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து மக்களை) அச்சுறுத்தி எச்சரிப்பீராக! உம்முடைய இறைவனின் பெருமையை எடுத்துரைப்பீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கிவிடுவீராக!” எனும் (74:1லி5) வசனங் களை அருளினான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47 அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இங்கு ‘அசுத்தம்’ (ருஜ்ஸ்) என்பது சிலைகளைக் குறிக்கும். அத்தியாயம் :
ஹதீஸ் 3239 — Sahih al Bukhari 59:50
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلاً آدَمَ طُوَالاً جَعْدًا، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى رَجُلاً مَرْبُوعًا مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ، سَبْطَ الرَّأْسِ، وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ ". وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ، فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ. قَالَ أَنَسٌ وَأَبُو بَكْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " تَحْرُسُ الْمَلاَئِكَةُ الْمَدِينَةَ مِنَ الدَّجَّالِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில்48 மூசா (அலை) அவர்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிற முடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர் களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர் களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. ‘‘நீர் அவரை (மூசாவை)ச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.” (32:23) இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ‘‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்களும் அபூபக்ரா (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.49 அத்தியாயம் :