Qurani·قرآني
தமிழ்

ஈமான்

51 ஹதீஸ்கள் · #8–58

ஹதீஸ் 28 — Sahih al Bukhari 2:21
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏ "‏ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்பு களி)ல் சிறந்தது எது?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக் கும் ‘சலாம்’ சொல்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 29 — Sahih al Bukhari 2:22
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ ‏"‏‏.‏ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ ‏"‏ يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “(நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. நரகவாசிகளில் அதிகம்பேர் பெண்களாகவே இருந்தனர். பெண்கள் நிராகரிக்கின்றனர்” என்று கூறினார்கள். அப்போது “இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக் கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவி களுக்கு நன்றி செய்ய மறுக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், ‘உன்னி டமிருந்து எந்த நலனையும் நான் கண்ட தேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” எனப் பதிலளித்தார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 30 — Sahih al Bukhari 2:23
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ، قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً، فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ ‏"‏‏.‏
மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதைப் போன்றே) அவருடைய அடிமைமீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் உரிமையாளரும் ஒரே விதமான உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயைக் கொண்டு அவரை இழிவு படுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் வைத்துள்ளான். எனவே, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 31 — Sahih al Bukhari 2:24
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ‏.‏ قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ ‏"‏ إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ ‏"‏‏.‏
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (முஸ்லிம்களிடையே நடந்த ‘ஜமல்’ போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவி செய்வ தற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து “எங்கே செல்கிறீர்?” எனக் கேட்டார்கள். நான் “இந்த மனிதருக்கு உதவி செய்யப்போகிறேன்” என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் “நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களை ஏந்தி சண்டையிட்டுக்கொண்டால், அதில் கொன்றவரும் கொல்லப்பட்டவரும் நரகத்திற்குத் தான் செல்வார்கள்’ என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் ‘அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?’ என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 32 — Sahih al Bukhari 2:25
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، ح‏.‏ قَالَ وَحَدَّثَنِي بِشْرٌ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ ‏{‏الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ‏}‏ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ ‏{‏إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ‏}‏‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தமது இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (6:82) எனும் இறைவசனம் அருளப்பெற்ற போது, நபித்தோழர்கள் “எங்களில் யார்தான் தமக்குத்தாமே அநீதி இழைக் காதவர்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், “இணை கற்பிப்பதுதான் மிகப்பெரும் அநீதியாகும்” (31:13) எனும் வசனத்தை அருளினான்.32 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 33 — Sahih al Bukhari 2:26
حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனு மொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 34 — Sahih al Bukhari 2:27
حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ‏"‏‏.‏ تَابَعَهُ شُعْبَةُ عَنِ الأَعْمَشِ‏.‏
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் எவனிடம் உள்ள னவோ அவன் அப்பட்டமான நயவஞ்ச கன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத் தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக் கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத் தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்).33 இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 35 — Sahih al Bukhari 2:28
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் மகத்துவமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் நின்று வழிபடு கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 36 — Sahih al Bukhari 2:29
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لاَ يُخْرِجُهُ إِلاَّ إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ، وَلَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது வழியில் (அறப்போர் புரிய) புறப்பட்டுச் சென்றவருக்கு அல்லாஹ் விரைவாக நற்பலன் வழங்குவான். அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் கொண்ட நம்பிக்கையாலேயே அவர் புறப்பட்டிருக்க வேண்டும். அவர் அடையும் நன்மையுடன், அல்லது போர்ச் செல்வங்களுடன் அவரைத் திரும்பச் செய்வதற்கோ, அல்லது அவரைச் சொர்க் கத்தில் அனுமதிப்பதற்கோ (அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்). என் சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால், (நான்) அனுப்பும் எந்தப் படைப்பிரிவுக்குப் பின்னரும் (ஊரில்) நான் அமர்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (இறைவழியில்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (அவ்வழியில்) கொல்லப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய) வேண்டும் என்றே விரும்புகிறேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 37 — Sahih al Bukhari 2:30
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.