அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இறைநம்பிக்கையோடும் நன் மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத் துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங் கள்; நற்செய்தி பெறுங்கள்; (கூடுதல் வழிபாடுகளை உற்சாகத்துடனும் நிரந்தர மாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக்கொள்ளுங்கள்.34 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்பத்தில் ‘தம் பாட்டனார்களி(ன் வமிசாவளியினரி)டத்தில்’ அல்லது ‘அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வமிசாவளியினரி)டத்தில்’ தங்கியிருந்தார் கள். நபி (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தி லுள்ள) பைத்துல் மக்திஸை, நோக்கி ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித் தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது. கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்துகொண்டிருந்தனர். உடனே அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்” என்று சொல்ல, அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதுவந்தது, யூதர்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்துவந்தது. (தொழுகையில்) தமது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பியபோது அதை அவர்கள் வெறுத்தார்கள். மற்றோர் அறிவிப்பில், “(புதிய கிப்லா வான கஅபாவுக்கு) கிப்லா மாற்றப்படு வதற்குமுன் (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவை நோக்கித் தொழுத காலத்தி லேயே சிலர் இறந்து விட்டிருந்தனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை (அதாவது தொழுகையை) பாழ்ப்படுத்தப் போவதில்லை’ (2:143) எனும் வசனத்தை அருளினான்” என்று இடம்பெற்றுள்ளது.35 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும் புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால், அவர் அதற்குமுன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்துவிடுகின்றான். அதற்குப் பின்னர் (அவர் செய்யும் நன்மை, தீமைகள்) நிகருக்கு நிகராக இருக்கும். (நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் கிடைக்கும். அதிலும்) ஒரு நன்மைக்கு அது போன்ற பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். (ஆனால்,) ஒரு பாவத்திற்கு அதைப் போன்ற ஒன்றே (தண்டனையாகக்) கிடைக்கும். அதையும் அல்லாஹ் மன்னித்துவிட்டால் (எந்தத் தண்டனையும்) கிடையாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக்கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கி லிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ் வொரு தீமைக்கும் அத்தீமை போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?” என்று கூறிவிட்டு, அவரது தொழுகையைப் பற்றி (சிலாகித்து)க் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து! (வழிபாடுகளில்) உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும், மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை, ஒருவர் நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். யார் தமது உள்ளத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நன்மை’ என்பதற்குப் பதிலாக ‘இறை நம்பிக்கை’ (‘ஈமான்’) என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.36 அத்தியாயம் :
தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள்மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக முழுமை யாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாள் எங்களுக்குப் பண்டிகை நாள்தான்)” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 46 — Sahih al Bukhari 2:39
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم " خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَصِيَامُ رَمَضَانَ ". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْلَحَ إِنْ صَدَقَ ".
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்” என்றார்கள். அவர் “இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், ‘இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்து ரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதேனும் என்மீது (கடமையாக் கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை (பிரேதத்தை)ப் பின் தொடர்ந்து சென்று, அதற்காக (இறுதி)த் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும்வரை அதனுடன் இருந்தாரோ அவர் இரண்டு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு ‘கீராத்’தும் ‘உஹுத்’ மலை போன்றதாகும். யார் அதற்காக (இறுதி)த் தொழுகையை மட்டும் முடித்துவிட்டு, அதை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :