Qurani·قرآني
தமிழ்

ஈமான்

51 ஹதீஸ்கள் · #8–58

ஹதீஸ் 48 — Sahih al Bukhari 2:41
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ عَنِ الْمُرْجِئَةِ،، فَقَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ ‏"‏‏.‏
ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் (ஷகீக் பின் உபைதில்லாஹ் - ரஹ்) அவர்களிடம் ‘முர்ஜிஆக்கள்’ (‘இறைநம்பிக்கையாளர் கள் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது’ என்று கூறுவது) பற்றிக் கேட்டேன். அப்போது அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவனுடன் போரிடு வது (அல்லது கொலை செய்வது) இறை மறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும்” என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.37 அத்தியாயம் :
ஹதீஸ் 49 — Sahih al Bukhari 2:42
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ ‏ "‏ إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمُ الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ ‏"‏‏.‏
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ (கண்ணியமிக்க இரவு) பற்றி (‘அது ரமளான் மாதத்தில் எந்த இரவு’ என்று) அறிவிப்பதற்காக(த் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்ன மனிதரும் இன்ன மனிதரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். (அவர் களை விலக்கிவிடச் சென்றேன்.) எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவி லிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்க லாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதைத் தேடிக்கொள் ளுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 50 — Sahih al Bukhari 2:43
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ مَا الإِيمَانُ قَالَ ‏"‏ الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَبِلِقَائِهِ وَرُسُلِهِ، وَتُؤْمِنَ بِالْبَعْثِ ‏"‏‏.‏ قَالَ مَا الإِسْلاَمُ قَالَ ‏"‏ الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ‏"‏‏.‏ قَالَ مَا الإِحْسَانُ قَالَ ‏"‏ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ‏"‏‏.‏ قَالَ مَتَى السَّاعَةُ قَالَ ‏"‏ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ اللَّهُ ‏"‏‏.‏ ثُمَّ تَلاَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏{‏إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ‏}‏ الآيَةَ‏.‏ ثُمَّ أَدْبَرَ فَقَالَ ‏"‏ رُدُّوهُ ‏"‏‏.‏ فَلَمْ يَرَوْا شَيْئًا‏.‏ فَقَالَ ‏"‏ هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள்முன் (வெளிப்படையாக) வந்தி ருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஈமான் என்பது, அல்லாஹ்வை யும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அடுத்து அவர், “இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வழிபடுவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அடுத்து “இஹ்ஸான் என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வழிபடுவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வழிபடுவதாகும்)” என்றார்கள்.39 அடுத்து அவர் “மறுமை (நாள்) எப்போது?” என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இதைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டவர் (அதாவது நான்), கேள்வி கேட்பவரைவிட (அதாவது உம்மைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (ஆயினும்,) மறுமையின் அடையாளங்கள் சிலவற்றை உமக்கு அறிவிக்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளனைப் பெற்றெடுத்தல்;40 கறுப்பு நிற (மட்டமான) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்” என்று கூறிவிட்டு, “உலக முடிவு பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது...” (31:34) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இ(ப்போது வந்துபோன)வர்தான் (வானவர்) ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தை (தீன்) கற்றுத்தர வந்திருந்தார்” என்றார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையின் (‘தீன்’) அம்சங்களாகவே கருதினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 51 — Sahih al Bukhari 2:44
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ سَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ، فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ‏.‏ وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ، لاَ يَسْخَطُهُ أَحَدٌ‏.‏
(கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தம்மிடம் சொன்னதாக அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உம்மிடம் “(தம்மை இறைத்தூதர் என்று கூறும்) அவ(ரைப் பின்பற்றுப)வர் கள் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின் றனரா? அல்லது குறைந்து வருகின்ற னரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “அவர்கள் அதிகரித்தே வருகின்றனர்” என்று கூறினீர். அவ்வாறுதான் இறை நம்பிக்கை நிறைவடையும்வரை (வளர்ந்து கொண்டேதான்) இருக்கும். நான் உம்மிடம் “அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் யாரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது அதைக் குறித்து யாருமே அதிருப்தி அடையமாட்டார். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41 அத்தியாயம் :
ஹதீஸ் 52 — Sahih al Bukhari 2:45
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيِنِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ‏.‏ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ‏.‏ أَلاَ وَهِيَ الْقَلْبُ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார் கள். எனவே, யார் சந்தேகத்திற்கு இடமான வற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற் கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடு கிறார்.) வேலியோரங்களில் (கால்நடை களை) மேய்ப்பவரைப் போன்று. அவர் (ஒரு நாள்) வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) விட்டுவிட நேரும். அறிக! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பெற்றவையே. அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்துவிட்டால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம்.42 இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 53 — Sahih al Bukhari 2:46
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ كُنْتُ أَقْعُدُ مَعَ ابْنِ عَبَّاسٍ، يُجْلِسُنِي عَلَى سَرِيرِهِ فَقَالَ أَقِمْ عِنْدِي حَتَّى أَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي، فَأَقَمْتُ مَعَهُ شَهْرَيْنِ، ثُمَّ قَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمَّا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنِ الْقَوْمُ أَوْ مَنِ الْوَفْدُ ‏"‏‏.‏ قَالُوا رَبِيعَةُ‏.‏ قَالَ ‏"‏ مَرْحَبًا بِالْقَوْمِ ـ أَوْ بِالْوَفْدِ ـ غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى ‏"‏‏.‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ نَأْتِيَكَ إِلاَّ فِي شَهْرِ الْحَرَامِ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَىُّ مِنْ كُفَّارِ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ، نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا، وَنَدْخُلْ بِهِ الْجَنَّةَ‏.‏ وَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ‏.‏ فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ، أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ وَحْدَهُ‏.‏ قَالَ ‏"‏ أَتَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ ‏"‏‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ ‏"‏ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصِيَامُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ الْمَغْنَمِ الْخُمُسَ ‏"‏‏.‏ وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ عَنِ الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ‏.‏ وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ‏.‏ وَقَالَ ‏"‏ احْفَظُوهُنَّ وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَرَاءَكُمْ ‏"‏‏.‏
அபூஜம்ரா (நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ - ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். அவர்கள் என்னைத் தமது கட்டிலில் அமரவைத்திருந்தார்கள். அப்போது அவர்கள், “என்னிடம் நீங்கள் (பாரசீகத்தில் மொழிபெயர்ப்பவராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது, ‘இம்மக்கள் யார்?’ அல்லது ‘இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று கேட்டார் கள். அதற்கு மக்கள், ‘ரபீஆ (குடும்பத்தார்)’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்திற்குள்ளாகாமலும் (தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்ற நிலையில்) வருகை புரிந்துள்ள ‘சமுதாயமே’ அல்லது ‘தூதுக் குழாமே’ வருக!” என்று வரவேற்றார்கள். அத்தூதுக் குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. (காரணம்) எங்களுக் கும் உங்களுக்கும் இடையே (எதிரிகளான) ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (தடையாக) உள்ளனர். ஆகவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள். அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக் கும் தெரிவிப்போம். அ(தைச் செயல் படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்றார்கள். அதையொட்டி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சில வகை குடிபானங் களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்; நான்கு விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். 1. அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது; 3. ஸகாத் வழங்குவது; 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (இவையன்றி) போரில் கிடைக்கும் பொருட்களி லிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை நீங்கள் வழங்க வேண்டும். (மது ஊற்றிவைக்கப் பயன்படும்) மண்சாடி, சுரைக்காய் குடுவை, மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கையும் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை செய்தார்கள். மேலும், “இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்போருக்குத் தெரிவித்துவிடுங்கள்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 54 — Sahih al Bukhari 2:47
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது புலம் பெயர்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்து வதை) நோக்கமாகக் கொண்டு அமைகி றதோ, அவரது புலம்பெயர்தல் (உடைய பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். யார், தாம் அடைய விரும்பும் உலக (ஆதாய)த் திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக புலம்பெயர்கிறாரோ, அவரது புலம்பெயர்தல் (உடைய பலனும்) அதுவாகத்தான் இருக்கும். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.45 அத்தியாயம் :
ஹதீஸ் 55 — Sahih al Bukhari 2:48
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் (இறைவனிடம் கிடைக் கும்) நன்மையை நாடித் தம் குடும்பத் தாருக்குச் செலவு செய்தால், அதுவும் அவருக்குத் தர்மம் ஆகும். இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 56 — Sahih al Bukhari 2:49
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அன்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 57 — Sahih al Bukhari 2:50
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுகையைக் கடைப் பிடிப்பேன்; ஸகாத் வழங்குவேன்; ஒவ் வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவேன் என்று உறுதிமொழி (பைஅத்) அளித்தேன். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.