Qurani·قرآني
தமிழ்

உயிர்த் தண்டம் (அத்-தியாத்)

57 ஹதீஸ்கள் · #6861–6917

ஹதீஸ் 6881 — Sahih al Bukhari 87:20
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ فِي بَنِي إِسْرَائِيلَ قِصَاصٌ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ فَقَالَ اللَّهُ لِهَذِهِ الأُمَّةِ ‏{‏كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى‏}‏ إِلَى هَذِهِ الآيَةِ ‏{‏فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ‏}‏‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَالْعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي الْعَمْدِ، قَالَ ‏{‏فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ‏}‏ أَنْ يَطْلُبَ بِمَعْرُوفٍ وَيُؤَدِّيَ بِإِحْسَانٍ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்துவிட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவேதான், அல்லாஹ் (தனது வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி, இறைநம்பிக்கை கொண்டோரே! கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம் போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட் டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாக பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் இறைவனிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் அருளும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் எல்லைமீறினால் அவருக்கு வதைக்கும் வேதனைதான் கிடைக்கும். (2:178) என்று கூறுகின்றான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘மன்னிப்பு அளித்தல்’ (‘அஃப்வ்’) என்பது, வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்பதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 6882 — Sahih al Bukhari 87:21
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக் குள் பெரும் பாவம் புரிகின்றவன்.2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச்செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6883 — Sahih al Bukhari 87:22
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، هُزِمَ الْمُشْرِكُونَ يَوْمَ أُحُدٍ‏.‏ وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ صَرَخَ إِبْلِيسُ يَوْمَ أُحُدٍ فِي النَّاسِ يَا عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ‏.‏ فَرَجَعَتْ أُولاَهُمْ عَلَى أُخْرَاهُمْ حَتَّى قَتَلُوا الْيَمَانَ فَقَالَ حُذَيْفَةُ أَبِي أَبِي‏.‏ فَقَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ‏.‏ قَالَ وَقَدْ كَانَ انْهَزَمَ مِنْهُمْ قَوْمٌ حَتَّى لَحِقُوا بِالطَّائِفِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின் (தொடக்கத்தின்) போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக் கப்பட்டார்கள். பின்னர் மக்களிடையே இப்லீஸ் (புகுந்து), “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூவினான். எனவே, முஸ்லிம்களில் முன்அணியினர் பின்அணியினரை நோக்கித் திரும்பி (அவர்களைத் தாக்கத் தொடங்கி)னர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான் (ரலி) அவர்களைக் கொன்றுவிட்டனர். உடனே (அவருடைய புதல்வர்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், “என் தந்தை, என் தந்தை” என்று கூறினார். (ஆயினும் எதிரி என்று நினைத்து) அவருடைய தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று (கொலை செய்தவர்களை நோக்கிக்) கூறினார்கள். தோல்வியுற்றவர்(களான இணைவைப்பாளர்)களில் சிலர் தாயிஃப் நகருக்குச் சென்றுவிட்டனர்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6884 — Sahih al Bukhari 87:23
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ يَهُودِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ هَذَا أَفُلاَنٌ أَفُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِالْيَهُودِيِّ فَاعْتَرَفَ، فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ‏.‏ وَقَدْ قَالَ هَمَّامٌ بِحَجَرَيْنِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமி யிடம், “உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் அச்சிறுமி (‘ஆம் ; அவன்தான்’ என்று) தலையால் சைகைசெய்தாள். ஆகவே, அந்த யூதன் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டான். (அவனிடம் விசாரிக்கப்பட்டபோது) அவன் (குற்றத்தை) ஒப்புக்கொண்டான். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவனது தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவனது தலை கல்லால் நசுக்கப்பட்டது.20 ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “இரு கற்களால் (நசுக்கப்பட்டது)” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 6885 — Sahih al Bukhari 87:24
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَتَلَ يَهُودِيًّا بِجَارِيَةٍ قَتَلَهَا عَلَى أَوْضَاحٍ لَهَا‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடு மாறு நபி (ஸல்) அவர்கள் ஆணையிட் டார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 6886 — Sahih al Bukhari 87:25
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَدَدْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ فَقَالَ ‏"‏ لاَ تَلُدُّونِي ‏"‏‏.‏ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ‏.‏ فَلَمَّا أَفَاقَ قَالَ ‏"‏ لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلاَّ لُدَّ، غَيْرَ الْعَبَّاسِ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட் டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். உடனே அவர்கள், “எனது வாயில் மருந்தூற்றாதீர் கள்” என்று (சைகையால்) கூறினார்கள். அப்போது நாங்கள், “நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)” என்று சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “(என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று நான் தடுத்தும் நீங்கள் கேட்காததற்குப் பகரமாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் (இந்த வீட்டிலுள்ள) அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால் அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், மருந்தூற்றும்போது உங்களுடன் அவர் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 6887 — Sahih al Bukhari #6887
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏ وَبِإِسْنَادِهِ ‏"‏ لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களும் ஆவோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 6888 — Sahih al Bukhari 87:26
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏ وَبِإِسْنَادِهِ ‏"‏ لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களும் ஆவோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25 அத்தியாயம் :
ஹதீஸ் 6889 — Sahih al Bukhari 87:27
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ،، أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا‏.‏ فَقُلْتُ مَنْ حَدَّثَكَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ‏.‏
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டுசென்றார்கள்” என்று ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஹுமைத் (ரஹ்) அவர்கள், “அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்தான் (அறிவித்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.26 அத்தியாயம் :
ஹதீஸ் 6890 — Sahih al Bukhari 87:28
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ أَخْبَرَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ‏.‏ فَرَجَعَتْ أُولاَهُمْ، فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي‏.‏ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ‏.‏ قَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ‏.‏ قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةٌ حَتَّى لَحِقَ بِاللَّهِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நாளில் (ஆரம்பத் தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக் கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!” என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன்அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள்தான் பின்னால் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின்அணிப் படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக்கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை” என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்றபின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் அவர்கள் இறைவனை அடையும்வரை (அவர் களது வாழ்க்கையில்) நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.28 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.