حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَقَالَ رَجُلٌ مِنْهُمْ أَسْمِعْنَا يَا عَامِرُ مِنْ هُنَيْهَاتِكَ. فَحَدَا بِهِمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنِ السَّائِقُ " قَالُوا عَامِرٌ. فَقَالَ " رَحِمَهُ اللَّهُ ". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلاَّ أَمْتَعْتَنَا بِهِ. فَأُصِيبَ صَبِيحَةَ لَيْلَتِهِ فَقَالَ الْقَوْمُ حَبِطَ عَمَلُهُ، قَتَلَ نَفْسَهُ. فَلَمَّا رَجَعْتُ وَهُمْ يَتَحَدَّثُونَ أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَجِئْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ. فَقَالَ " كَذَبَ مَنْ قَالَهَا، إِنَّ لَهُ لأَجْرَيْنِ اثْنَيْنِ، إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، وَأَىُّ قَتْلٍ يَزِيدُهُ عَلَيْهِ ".
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரரிடம்) “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?” என்று கூறினார். ஆகவே, ஆமிர் (ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகவோட்டி யார்?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்துகொண்ட) மக்கள், “அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (அல்லாஹ்வின் தூதரே!)?” என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் (அடுத்த நாள்) காலையில் (தமது முழங்காலில் தமது வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன; அவர் (தமது வாளால் தம்மைத்தாமே குத்திக்கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்” என்று பேசினர். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது “ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின” என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன என்று மக்கள் கருதுகின்றனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனைவிட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?” என்று கேட்டார்கள்.30 அத்தியாயம் :
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை அவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டி ருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6893 — Sahih al Bukhari 87:31
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒரு மனிதர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தமது கையை விடுவிக்கும்போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6894 — Sahih al Bukhari 87:32
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ ابْنَةَ النَّضْرِ، لَطَمَتْ جَارِيَةً، فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ بِالْقِصَاصِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளது முன்பல்லை உடைத்துவிட்டார். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு)வந்தார்கள். அப்போது நபியவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6895 — Sahih al Bukhari 87:34
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆவாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரை யும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்” என்று சொன்னார்கள். ஹகீம் அஸ்ஸன்ஆனீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்று விட்டனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்” என்று வந்துள்ளது. கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூபக்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), அலீ (ரலி), சுவைத் பின் முகர்ரின் (ரலி) ஆகியோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர். சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர் (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ (ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், சாட்டையால் அடித்ததற்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6897 — Sahih al Bukhari 87:36
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ لَدَدْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ، وَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا " لاَ تَلُدُّونِي ". قَالَ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ بِالدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ " أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي ". قَالَ قُلْنَا كَرَاهِيَةٌ لِلدَّوَاءِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَبْقَى مِنْكُمْ أَحَدٌ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் என்று தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் கூறிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, “என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள் “மருந்து உட்கொள்ளப் பிடிக்காமல்தான் (அவ்வாறு சைகை செய்தீர்கள்)” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நான் தடுத்தும் கேட்காததற்குப் பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக்கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும்போது) அவர் உங்களுடன் கலந்துகொள்ளவில்லை” என்று கூறினார்கள்.35 அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித்தனியாகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள், “எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினர். (அந்த யூத) மக்கள் “நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை. (அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை” என்று கூறினர். ஆகவே, (கைபர் சென்ற) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்” என்று கூறினர். அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களை நோக்கி) நபி (ஸல்) அவர்கள், “பெரியவர்களைப் பேசவிடு! பெரியவர்களைப் பேசவிடு!” என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!” என்று கூறினார்கள். அவர்கள், “எங்களிடம் சாட்சியில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்” என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள், “யூதர்களின் சத்தியத்தை (நம்பி) ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்.38 அத்தியாயம் :
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம் பேசுவதற்காகத் தமது ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உள்ளே வந்தனர். பின்னர் (அவர்களிடம்) “அல்கசாமா சத்தியம் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்கசாமா மூலம் பழிவாங்கிடல் உண்டு என்றே கருதுகிறோம். கலீஃபாக்கள் அதைக் கொண்டு பழிவாங்கியுள்ளனர்” என்று கூறினர். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மக்களின் பார்வையில் நான் படும்வகையில் என்னை நிறுத்தி வைத்து என்னிடம், “அபூகிலாபா அவர்களே! (இது குறித்து) நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களிடம் படைத் தளபதி(களான ஆளுநர்)களும் அரபுத் தலைவர்களும் உள்ளனர். இவர்களில் ஐம்பது பேர் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரிலுள்ள திருமணமான ஒரு மனிதர் குறித்து, அவரைப் பார்க்காமலேயே அவர் விபசாரம் புரிந்துவிட்டதாகச் சாட்சியம் அளித்தால் அவருக்கு நீங்கள் கல்லெறி தண்டனை வழங்கிவிடுவீர்களா, சொல்லுங்கள்?” என்று கேட்டேன். உமர் (ரஹ்) அவர்கள் “இல்லை” என்று சொன்னார்கள். நான், “இவர்களில் ஐம்பது பேர் ஹிம்ஸ் (சிரியா) நாட்டிலுள்ள ஒரு மனிதர் திருடிவிட்டார் என்று அவரைப் பார்க்காமலேயே அவருக்கெதிராகச் சாட்சியம் அளித்தால் அவரது கையை நீங்கள் துண்டித்துவிடுவீர்களா, சொல்லுங்கள்!” என்று கேட்டேன். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “இல்லை” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காக தவிர (வேறு எதற்காகவும்) எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை” என்று கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு:) 1. மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு)கொலை செய்தவர். (அதற்குத் தண்டனையாக) அவர் கொல்லப்படுவார். 2. திருமணமான பின்னர் விபசாரம் புரிந்த மனிதர். 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர்புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து (வெளியேறி இறைமறுப்பிற்குத்) திரும்பிச் சென்றுவிட்ட மனிதர். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில திருடர்க(ளின் கை கால்க)ளைத் துண்டித்துக் கண்களில் சூடிட்டுப் பிறகு அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நான், “உங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதை(ப் பின்வருமாறு) தெரிவித்தேன்:39 ‘உக்ல்’ எனும் குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி வழங்கினர். அப்போது (மதீனா) பூமியின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆதலால் அவர்களின் உடல்நலம் பாதித்தது. எனவே, இது குறித்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நம் மேய்ப்பருடன் சென்று அவரிடமுள்ள (முஸ்லிம்களுக்குச் சொந்தமான) ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தலாமே!” என்று (யோசனை) கூறினார்கள். உக்ல் குலத்தார், ‘சரி’ என்று சொல்லிவிட்டு அங்கு சென்றனர். அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி உடல் நலம் தேறினர். பிறகு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பிவைத்தார்கள். ஆகவே, அவர்கள் பிடிக்கப்பட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுமாறும் அவர்களின் கண்களில் சூடிடுமாறும் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும்வரை அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள்.40 நான், “இந்த உக்ல் குலத்தார் செய்ததை விடக்கொடிய செயல் வேறேது? அவர்கள் இஸ்லாத்திலிருந்து (இறைமறுப்பிற்கு) திரும்பிச்சென்றுவிட்டார்கள்; கொலை செய்தார்கள்; கொள்ளையடித்தார்கள்” என்று சொன்னேன். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (உம்மிடம் இதைச் செவியுற்றது)போல் ஒருபோதும் நான் செவியுற்றதில்லை” என்று கூறினார்கள். உடனே நான், “அன்பஸா! என் செய்தியை நீங்கள் மறுக்கின்றீர்களா?” என்று கேட்டேன். அவர், “இல்லை (நான் மறுக்கவில்லை). மாறாக, இச்செய்தியை நீங்கள் உள்ளபடி கூறினீர்கள்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணயாக! இந்த (ஷாம்) மாகாணத்தாரிடையே இந்த மூதறிஞர் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை மக்கள் நன்மையில் நீடிப்பர்” என்று (என்னைக் குறித்துக்) கூறினார்கள். நான், “இந்த (கசாமா) விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து முன்மாதிரி கிடைத்துள்ளது” என்றேன். (அதாவது) அன்சாரிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் (மட்டும் முன்பே கைபர் செல்வதற்காக) வெளியேறினார். (அங்கு) அவர் கொல்லப்பட்டார். பிறகு அவருக்குப் பின்னால் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் தம் தோழர் இரத்த (வெள்ள)த்தில் மிதப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுடன் பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பர் எங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றார். நாங்கள் சென்று பார்த்தபோது அவர் இரத்த (வெள்ள)த்தில் மிதக்கிறார்” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறிச்சென்று, “இவரை யார் கொலை செய்திருப்பார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யூதர்கள்தான் இவரைக் கொலை செய்திருப்பார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (யூதர்கள் வந்ததும் அவர்களை நோக்கி) “நீங்களா இவரைக் கொலை செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வாதிகளான அன்சாரிகளை நோக்கி) “யூதர்களில் ஐம்பதுபேர் ‘நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை’ என்று சத்தியம் செய்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு (தாங்கள் கொலை செய்யவில்லையென) சத்தியம் செய்யக்கூட யூதர்கள் தயங்கமாட்டார்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களைப் பார்த்து), “உங்களில் ஐம்பதுபேர் (யூதர்களே கொலையாளிகள் என்று) சத்தியம் செய்வதன் மூலம் இழப்பீட்டுத் தொகைக்கு உரிமை பெறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “நாங்கள் சத்தியம் செய்வதற்கு (தயாராக) இல்லை” என்று பதிலளித்தனர். ஆகவே, கொல்லப்பட்டவருக்காக நபி (ஸல்) அவர்களே தமது தரப்பிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள்.41 அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: மேலும், நான் (பின்வருமாறும்) கூறினேன்: ஹுதைல் குலத்தார் அறியாமைக் காலத்தில் தாம் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்த ஒருவனிடம் ஒப்பந்த முறிவுப் பிரகடனத்தை வெளியிட்டனர். ஆகவே, அந்த ஒப்பந்த முறிவுக்குள்ளானவன் (மக்காவிலுள்ள) ‘பத்ஹா’ எனுமிடத்திலிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை இரவு நேரத்தில் தாக்கிக் கொள்ளையடிக்க முற்பட்டான். அப்போது அவர்களில் ஒருவர் அவனைக் கண்டு விழித்துக்கொண்டு அவனை நோக்கி வாளை வீசி அவனைக் கொன்றுவிட்டார். உடனே ஹுதைல் குலத்தார் வந்து அந்த யமன்வாசியைப் பிடித்துக்கொண்டனர். பின்னர் ஹஜ் காலத்தில் அவரை (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்து நிறுத்தி, “இவர் எங்கள் (ஒப்பந்த) நண்பரைக் கொன்றுவிட்டார்” என்று கூறினர். அதற்கு அந்த யமன்வாசி, “(நான் திருடனைத்தான் கொலை செய்தேன்.) ஹுதைல் குலத்தார் அவனுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டுவிட்டனர்” என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், “ஹுதைல் குலத்தாரில் ஐம்பதுபேர் ‘(நாங்கள்) அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவில்லை’ எனச் சத்தியம் செய்யட்டும்” என்றார்கள். ஆகவே, அவர்களில் நாற்பத்தொன்பது பேர், (நாங்கள் அந்த மனிதருடனான ஒப்பந்தத்தை முறிக்கவில்லை என்று பொய்ச்) சத்தியம் செய்தனர். அப்போது ஹுதைல் குலத்தாரில் ஒருவர் ஷாம் நாட்டிலிருந்து வந்தார். (ஐம்பதாவது நபராக) அவரையும் சத்தியம் செய்திடுமாறு ஹுதைல் குலத்தார் கோரினர். ஆனால், அவர் தமது சத்தியத்திற்குப் பதிலாக ஆயிரம் திர்ஹங்களை அவர்களிடம் வழங்கினார். (சத்தியம் செய்வதிலிருந்து விலகிக் கொண்டார்.) இதையடுத்து அவரது இடத்தில் மற்றொருவரை அவர்கள் சேர்த்துக் கொண்டதுடன், அந்த (ஐம்பதாவது) நபரைக் கொலையுண்டவரின் சகோதரரிடம் ஒப்படைத்தும்விட்டனர். அவரது கை இவரது கையுடன் பிணைக்கப்பட்டது. பின்னர் அவர்களிருவரும் சத்தியம் செய்த ஐம்பது (49) பேரும் புறப்பட்டார்கள். அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘நக்லா’ எனுமிடத்தை அடைந்தபோது மழை பிடித்துக்கொண்டது. எனவே, அவர்கள் அங்கிருந்த ஒரு மலையின் குகைக்குள் நுழைந்துகொண்டார்கள். அப்போது அந்தக் குகை (பொய்ச் சத்தியம் செய்த) அந்த ஐம்பது பேர்மீது இடிந்து விழுந்து அவர்கள் அனைவரும் மாண்டுபோயினர். (கை கோத்துவிடப்பட்ட) அந்த இரு நண்பர்களும் தப்பித்துக்கொண்டனர். அப்போது அவர்களை ஒரு கல் தொடர்ந்து வந்து கொலையுண்டவருடைய சகோதரரின் காலை முறித்துவிட்டது. பிறகு அவர் ஓராண்டு காலம் வாழ்ந்து பிறகு மரணித்தார்.42 (தொடர்ந்து அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) அப்துல் மலிக் பின் மர்வான் ‘அல்கசாமா’வைக் கொண்டு ஒருவரை பழிவாங்கிடுமாறு ஆணையிட்டார். பிறகு தமது செயல் குறித்து அவர் வருந்தினார். ஆகவே, சத்தியம் செய்த ஐம்பதுபேரின் பெயர்களை (படை வீரர்களின்) பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கியதுடன் அவர்களை ஷாம் நாட்டிற்கு நாடு கடத்தவும் செய்தார். அத்தியாயம் :
ஹதீஸ் 6900 — Sahih al Bukhari 87:39
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ بِمَشَاقِصَ وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப்பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையால்’ அல்லது ‘கூர்முனைகளால்’ அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள்.43 அத்தியாயம் :