حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَانْكَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجُرُّ رِدَاءَهُ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلْنَا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، حَتَّى انْجَلَتِ الشَّمْسُ فَقَالَ صلى الله عليه وسلم " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا، وَادْعُوا، حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ ".
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக்கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்க ளும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு, “யாருடைய இறப்புக்காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால், உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும்வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் யாருடைய இறப்புக்காக வும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. ஆயினும், அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்று களாகும். எனவே, அவற்றை நீங்கள் கண் டால் எழுந்து, (இறையைத்) தொழுங்கள். இதை அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர் - ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1042 — Sahih al Bukhari 16:3
حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يُخْبِرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَصَلُّوا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய இறப்புக்காகவும் பிறப்புக் காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவதில்லை. ஆயினும், அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1043 — Sahih al Bukhari 16:4
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ أَبُو مُعَاوِيَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ كَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ فَصَلُّوا وَادْعُوا اللَّهَ ".
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினம் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாருடைய இறப்புக்காகவும் யாருடைய பிறப்புக்காகவும் சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்படுவ தில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) தொழுங் கள்; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து) எழுந்து நின்றார்கள். அந்த நிலையை நீண்ட நேரம் செய்தார்கள். -இந்த நிலையானது முதல் நிலையை விடச் சிறியதாகவே இருந்தது.- பிறகு (மீண்டும்) ருகூஉ செய்தார்கள். அதை நீண்ட நேரம் செய்தார்கள் -அது முதல் ருகூவைவிடக் குறைவாக இருந்தது- பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். பிறகு அவர்கள் மக்களுக்கு உரை யாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால், அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங் கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, “முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அறிவதை யெல்லாம் நீங்களும் அறிந்தால் குறை வாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர் கள்!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1045 — Sahih al Bukhari 16:6
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمِ بْنِ أَبِي سَلاَّمٍ الْحَبَشِيُّ الدِّمَشْقِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نُودِيَ إِنَّ الصَّلاَةَ جَامِعَةٌ.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகை நடைபெறுகிறது) என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது ஜீவிய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி, நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். ஆனால், இது முத-ல் ஓதியதைவிடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதல் ருகூஉவைவிடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது. பின்னர் ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ என்று கூறி (எழுந்து)விட்டு, சஜ்தா செய்தார்கள். பிறகு இதைப் போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- இவ்வாறு நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)களில் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்குமுன் (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, இறைவனை அவனுக்குத் தகுதியான தன்மைகளைக் கூறிப் போற்றி(யபின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள் (தமது உரையில்), “(சூரியன் மற்றும் சந்திரன்) இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் (கிரகணத்) தொழுகையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (எனக்கு இதை அறிவித்த) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், “மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட தினம் உங்கள் சகோதரர் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் - ர-) (தலா ஒரு ருகூஉ கொண்ட) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக்காமல் சுப்ஹு தொழுகை போன்று தொழுவித்தார்களே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “ஆம்! (அவர் அவ்வாறு தொழுவித்தார்.) அவர் நபிவழியைத் தவறவிட்டார்” என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாகவும் இதுபோன்ற ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவை கஸீர் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக வந்துள்ளன. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் (ஹசஃபத்) ஏற்பட்டபோது தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் நின்று ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறி முன்பு போன்றே நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். இ(ப்போது அவர்கள் ஓதிய)து முன்பு ஓதியதைவிடக் குறைவானதாகவே இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். இந்த ருகூஉ முதலில் செய்த ருகூஉவைவிடக் குறைவானதாகவே இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பின்னர் இதைப் போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். பிறகு (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் ‘சலாம்’ கொடுத் தார்கள். பிறகு அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். சூரிய, சந்திர கிரகணங் கள் பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், “அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக, அவற்றின் மூலம் உயர்ந்தோன் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக் கிறான்.7 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர் களிடமிருந்து அப்துல் வாரிஸ் (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), கா-த் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்புகளில், “அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கிறான்” எனும் வாக்கியம் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1049 — Sahih al Bukhari #1049
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ يَهُودِيَّةً جَاءَتْ تَسْأَلُهَا فَقَالَتْ لَهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَيُعَذَّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ. ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا، فَخَسَفَتِ الشَّمْسُ، فَرَجَعَ ضُحًى، فَمَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ ظَهْرَانَىِ الْحُجَرِ، ثُمَّ قَامَ يُصَلِّي، وَقَامَ النَّاسُ وَرَاءَهُ، فَقَامَ قِيَامًا طَوِيلاً، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلاً، وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً، وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَسَجَدَ، ثُمَّ قَامَ فَقَامَ قِيَامًا طَوِيلاً، وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلاً وَهْوَ دُونَ الْقِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ فَسَجَدَ وَانْصَرَفَ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ.
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்த படி வந்தாள். அப்போது அவள் என்னி டம், “மண்ணறையின் (கப்று) வேதனை யி-ருந்து உம்மை அல்லாஹ் காப்பாற்று வானாக!” என்று கூறினாள். ஆகவே, நான் இதுபற்றி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “மனிதர் கள் தம் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து நானும் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :