حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الأَسْوَدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا، وَسَجَدَ مَنْ مَعَهُ، غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا. فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண் ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 1068 — Sahih al Bukhari 17:2
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ} السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், ‘ஹல் அத்தா அலல் இன்ஸான்’ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.3 அத்தியாயம் :
ஹதீஸ் 1069 — Sahih al Bukhari 17:3
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ {ص} لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘ஸாத்’ அத்தியாயத்தில் உள்ள (24ஆவது) வசனம் கட்டாயமாக (ஓதலுக் கான) சஜ்தா செய்ய வேண்டிய வசனங் களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1070 — Sahih al Bukhari 17:4
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ بِهَا، فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلاَّ سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ، فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا، فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தை (53:62) ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். ஒரேயொரு மனிதரைத் தவிர, அங்கிருந்த மக்கள் அனைவரும் (நபியவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தனர். அவர் ஒரு கையளவு பொடிக் கற்களையோ மண்ணையோ எடுத்துத் தனது நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்’ என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1071 — Sahih al Bukhari 17:5
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஜின்களும் மனிதர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :
ஹதீஸ் 1072 — Sahih al Bukhari 17:6
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ، سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ فَزَعَمَ أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم {وَالنَّجْمِ} فَلَمْ يَسْجُدْ فِيهَا.
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் (‘அந்நநஜ்ம்’ அத்தியாயத்தில் சஜ்தா செய்வது பற்றிக்) கேட்டேன். அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதிக்காட்டி னேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய வில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1073 — Sahih al Bukhari 17:7
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ قَرَأْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم {وَالنَّجْمِ} فَلَمْ يَسْجُدْ فِيهَا.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அந் நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள் சஜ்தா செய்யவில்லை.7 அத்தியாயம் :
ஹதீஸ் 1074 — Sahih al Bukhari 17:8
حَدَّثَنَا مُسْلِمٌ، وَمُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالاَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَرَأَ {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَسَجَدَ بِهَا فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، أَلَمْ أَرَكَ تَسْجُدُ قَالَ لَوْ لَمْ أَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ لَمْ أَسْجُدْ.
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ அத்தியாயத்தை ஓதி, அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சிரவணக்கம் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “அபூ ஹுரைரா அவர்களே! நீங்கள் சிர வணக்கம் செய்வதை நான் பார்த்தேனே (ஏன்)?” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், (இந்த அத்தியாயத் தில்) சிரவணக்கம் செய்வதை நான் பார்த்திராவிட்டால், நானும் சிரவணக்கம் செய்திருக்கமாட்டேன்” என்று பதிலளித் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1075 — Sahih al Bukhari 17:9
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ فِيهَا السَّجْدَةُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சஜ்தா வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். உடனே நாங்களும் சஜ்தா செய்வோம். அப்போது எங்களில் சிலருக்கு நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.8 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது, அவர்கள் சஜ்தா வசனத்தை ஓதுவார்கள். அப்போது அவர்கள் சஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சஜ்தா செய்வாம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு சஜ்தாவில் நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது. அத்தியாயம் :