رَوَاهُ أَبَانُ بْنُ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لِلَّهِ تَعَالَى عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்-மும் உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.9 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 899 — Sahih al Bukhari 11:23
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளியுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்களின் துணைவி யரில் ஒருவர் (ஆத்திகா பின்த் ஸைத்) சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழச் செல்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு நீங்கள் செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப் படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந் தும் நீங்கள் ஏன் (பள்ளிவாசலுக்குச்) செல்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படியானால், (என்னைப் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாமென்று கூற விடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வ தைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது” என்று பதில் வந்தது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப் பாளர் (முஅத்தின்) இடம், “(பாங்கில்) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்’ என்று கூறியதும், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், ‘ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்’ (உங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்று சொன்னார்கள். (இவ்வாறு அவர்கள் கூறியதை) மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “என்னைவிட மிகவும் சிறந்த வ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும்கூட இவ்வாறு தான் செய்தார்கள். களி மண்ணிலும் (வழுக்கும்) சகதியிலும் உங்களை நடக்க விட்டு, உங்களுக்குச் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை (எனவேதான், வீடுகளிலேயே தொழுதுகொள்ளச் சொன்னேன்)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 902 — Sahih al Bukhari 11:26
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالْعَوَالِي، فَيَأْتُونَ فِي الْغُبَارِ، يُصِيبُهُمُ الْغُبَارُ وَالْعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ الْعَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنْسَانٌ مِنْهُمْ وَهْوَ عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا ".
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் வெள்ளிக்கிழமை அன்று தங்கள் குடியிருப்புகளி-ருந்தும் (மதீனா வைச் சுற்றியுள்ள) மேட்டுப் புறக் கிராமங் களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆ தொழுகைக்கு) வந்துகொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள்மீது புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உட-)-ருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தபோது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றைய நாளுக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்: (நபி (ஸல்) காலத்து) மக்கள் உழைப் பாளிகளாக இருந்தனர். அவர்கள் (வேலைகளில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும் நேரம் ஜுமுஆ தொழுகைக்காக வரும்போது, அதே கோலத்தில் வந்துவிடு வார்கள். இதனால்தான் அவர்களிடம் “நீங்கள் குளித்திருக்கலாமே!” என்று கூறப்பட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 904 — Sahih al Bukhari 11:28
حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் நேரத்தில் ஜுமுஆ தொழுகை தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஜுமுஆ தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விடுவோம். ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம். அத்தியாயம் :