حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ ـ هُوَ خَالِدُ بْنُ دِينَارٍ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ، يَعْنِي الْجُمُعَةَ. قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ فَقَالَ بِالصَّلاَةِ، وَلَمْ يَذْكُرِ الْجُمُعَةَ. وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ صَلَّى بِنَا أَمِيرٌ الْجُمُعَةَ ثُمَّ قَالَ لأَنَسٍ ـ رضى الله عنه ـ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது தொழுகையை -அதாவது ஜுமுஆ தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும்போது தொழு கையை -அதாவது ஜுமுஆ தொழு கையை- வெப்பம் தணிந்தபின் தொழு வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஜுமுஆ தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொது வாக) ‘தொழுகை’ என்றே இடம்பெற் றுள்ளது. பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எங்களுக்கு (ஆட்சித்) தலைர் ஜுமுஆ தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.) பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்?’ என்று கேட்டார். (அப்போதுதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்)” என்று அபூகல்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜுமுஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ர-) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 908 — Sahih al Bukhari 11:32
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் ஓடிவராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 909 — Sahih al Bukhari 11:33
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنِي أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ـ لاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِيهِ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால் அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணாதவரை எழாதீர்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, தம்மால் இயன்ற வரை தூய்மைப் படுத்திக்கொண்டு, பிறகு எண்ணெய்யோ நறுமணமோ பூசிக்கொள்கிறார். பிறகு அவர் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து, (சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியுற) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 911 — Sahih al Bukhari 11:35
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் சகோதரரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து எழுப்பி விட்டு, அந்த இடத்தில் தாம் அமர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “ஜுமுஆவின்போதா (இப்படிச் செய்யக் கூடாது)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 912 — Sahih al Bukhari 11:36
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ النِّدَاءُ يَوْمَ الْجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى الْمِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ عُثْمَانُ ـ رضى الله عنه ـ وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் வெள்ளிக்கிழமை அன்று இமாம் சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததும் முதலாவது பாங்கு சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோது, ‘அஸ்ஸவ்ரா’ எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 913 — Sahih al Bukhari 11:37
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، أَنَّ الَّذِي، زَادَ التَّأْذِينَ الثَّالِثَ يَوْمَ الْجُمُعَةِ عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ، وَلَمْ يَكُنْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مُؤَذِّنٌ غَيْرَ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَعْنِي عَلَى الْمِنْبَرِ.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத் தியவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களே ஆவார்கள்.- மதீனாவாசி களின் எண்ணிக்கை அதிகமானபோது (இவ்வாறு செய்தார்கள்.)- (ஜுமுஆ நாளில் பாங்கு சொல்ல) நபி (ஸல்) அவர்களிடம் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) மட்டுமே இருந்தார். (ஆரம்பக் காலத்தில்) இமாம் அமரும்போதுதான்- அதாவது சொற்பொழிவு மேடையின் மீது அமரும்போதுதான்- ஜுமுஆ நாளில் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.11 அத்தியாயம் :
அபூஉமாமா (அஸ்அத்) பின் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருந்தபோது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்தார். அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறியதும், முஆவியா (ரலி) அவர்களும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று (பதில்) சொன்னார்கள். தொழுகை அறிவிப்பாளர் ‘அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன்) எனக் கூறியதும், ‘நானும் அவ்வாறே கூறுகிறேன்’ (வ அன) என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர் பாங்கு சொல்- முடித்ததும் “மக்களே! தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னபோது இதே இடத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதைப் போன்றே (பாங்கிற்குப் பதில்) சொல்லிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள். அத்தியாயம் :
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அன்று மற்றொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட் டார்கள்.- பள்ளிவாச-ல் மக்கள் அதிகரித்தபோதே (இவ்வாறு செய்தார்கள்). -(அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடைமீது) அமரும்போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது. அத்தியாயம் :