Qurani·قرآني
தமிழ்

ஜும்உஆ தொழுகை

66 ஹதீஸ்கள் · #876–941

ஹதீஸ் 916 — Sahih al Bukhari 11:40
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ إِنَّ الأَذَانَ يَوْمَ الْجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ ـ رضى الله عنه ـ وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الْجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ‏.‏
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு), அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்குமுன்) சொற்பொழிவு மேடைமீது அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை உயர்ந்தபோது, உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட்டார்கள். ஆகவே, (மதீனாவின் கடைவீதியிலுள்ள) ‘அஸ்ஸவ்ரா’ எனுமிடத்தில் தொழுகை அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு ஒரு இகாமத் எனும்) அந்த நடைமுறை நிலைபெற்றுவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 917 — Sahih al Bukhari 11:41
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ، أَنَّ رِجَالاً، أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ، وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ ـ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ـ ‏"‏ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ ‏"‏‏.‏ فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَيْهَا، وَكَبَّرَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏"‏ أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي ‏"‏‏.‏
அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து, ‘(நபி (ஸல்) அவர்களது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது என்பது தொடர் பாகச் சர்ச்சை செய்தனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது எதனால் செய்யப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதைப் பார்த்திருக்கி றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது அமர்ந்த முதல் நாளிலேயே (நான் அதைப் பார்த்திருக்கி றேன்)” என்று கூறிவிட்டு (அது பற்றிய முழுத் தகவலையும் பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம், -அப்பெண்மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்- ஆளனுப்பி, “நான் மக்களிடையே உரையாற்றும்போது அமர்ந்துகொள்வதற்கு (ஏற்ற வகையில்) எனக்காக (சொற்பொழிவு மேடைக்குத் தேவையான) மரச்சட்டங்களைச் செய்து தரும்படி தச்சு வேலை தெரிந்த உன் அடிமைக்குக் கட்டளையிடுவாயாக!” என்று சொல்-யனுப்பினார்கள். அவ்வாறே அப்பெண்மணி அந்த அடிமைக்குக் கட்டளையிட, அவர் (மதீனா அருகிலுள்ள) ‘அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தினால் அதைச் செய்து அப்பெண்மணியிடம் கொண்டு வந்தார். அதை அப்பெண்மணி அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, இதோ இந்த இடத்தில் அது வைக்கப்பட்டது. அதன் பிறகு நான் பார்த்தேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன்மீது நின்று தொழு(வித்)தார்கள். (அதாவது) அதன் மீது நின்று தக்பீர் கூறினார்கள்; அதன் மீது ருகூஉ செய்தார்கள். பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் அடிக்கட்டைப் பகுதியில் சஜ்தா செய்தார் கள். பிறகு பழையபடி (மேடைக்கே) சென்றார்கள். தொழுது முடித்ததும், மக்களை முன் னோக்கி, “மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்” என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 918 — Sahih al Bukhari 11:42
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَنَسٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا وُضِعَ لَهُ الْمِنْبَرُ سَمِعْنَا لِلْجِذْعِ مِثْلَ أَصْوَاتِ الْعِشَارِ حَتَّى نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ‏.‏ قَالَ سُلَيْمَانُ عَنْ يَحْيَى أَخْبَرَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ أَنَّهُ سَمِعَ جَابِرًا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும்போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்டபோது, அந்தக் கட்டையி-ருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் முனகல் சப்தத்தைப் போன்று நாங்கள் செவியுற்றோம். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரி-ருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்து வதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்துகொண்டேயிருந்தது.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 919 — Sahih al Bukhari 11:43
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَقَالَ ‏ "‏ مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்றபடி, “ஜுமுஆ தொழு கைக்கு வருபவர் குளித்துக்கொள்ளட்டும்” என்று கூறியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
ஹதீஸ் 920 — Sahih al Bukhari 11:44
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ ثُمَّ يَقُومُ، كَمَا تَفْعَلُونَ الآنَ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் இப்போது செய்துவருவதைப் போன்றே, நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 921 — Sahih al Bukhari 11:45
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى الْمِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 922 — Sahih al Bukhari 11:46
وَقَالَ مَحْمُودٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَالنَّاسُ يُصَلُّونَ قُلْتُ مَا شَأْنُ النَّاسِ فَأَشَارَتْ بِرَأْسِهَا إِلَى السَّمَاءِ‏.‏ فَقُلْتُ آيَةٌ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَىْ نَعَمْ‏.‏ قَالَتْ فَأَطَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِدًّا حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ وَإِلَى جَنْبِي قِرْبَةٌ فِيهَا مَاءٌ فَفَتَحْتُهَا فَجَعَلْتُ أَصُبُّ مِنْهَا عَلَى رَأْسِي، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، وَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ ‏"‏‏.‏ قَالَتْ وَلَغِطَ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ، فَانْكَفَأْتُ إِلَيْهِنَّ لأُسَكِّتَهُنَّ فَقُلْتُ لِعَائِشَةَ مَا قَالَ قَالَتْ قَالَ ‏"‏ مَا مِنْ شَىْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلاَّ قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، وَإِنَّهُ قَدْ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ ـ أَوْ قَرِيبَ مِنْ ـ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، يُؤْتَى أَحَدُكُمْ، فَيُقَالُ لَهُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوْ قَالَ الْمُوقِنُ شَكَّ هِشَامٌ ـ فَيَقُولُ هُوَ رَسُولُ اللَّهِ، هُوَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى فَآمَنَّا وَأَجَبْنَا وَاتَّبَعْنَا وَصَدَّقْنَا‏.‏ فَيُقَالُ لَهُ نَمْ صَالِحًا، قَدْ كُنَّا نَعْلَمُ إِنْ كُنْتَ لَتُؤْمِنُ بِهِ‏.‏ وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوْ قَالَ الْمُرْتَابُ شَكَّ هِشَامٌ ـ فَيُقَالُ لَهُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ ‏"‏‏.‏ قَالَ هِشَامٌ فَلَقَدْ قَالَتْ لِي فَاطِمَةُ فَأَوْعَيْتُهُ، غَيْرَ أَنَّهَا ذَكَرَتْ مَا يُغَلِّظُ عَلَيْهِ‏.‏
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், தமது தலையால் வானை நோக்கி சைகை செய்தார்கள். “இது ஏதேனும் அடையாளமா?” என்று கேட் டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ எனத் தலை அசைத்தார்கள். அப்போது எனக்குத் தலைசுற்றல் ஏற்படும் அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள். எனக்குப் பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (தலை சுற்றல் நிற்க) என் தலைமீது சிறிது தண்ணீரை நான் ஊற்றலானேன். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பிறகு இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்...) என்று சொன்னார்கள். அன்சாரிப் பெண்கள் சிலர் ஆரவாரமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்து வதற்காக நான் அவர்களை நோக்கிச் சென்றேன். பிறகு நான் (திரும்பி வந்து) ஆயிஷா (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்: நான் இதோ இந்த இடத்தில் (தொழுத வாறு) நின்றுகொண்டிருந்தபோது சொர்க் கம், நரகம் உட்பட இதுவரை எனக்குக் காட்டப்பட்டிராத அனைத்தையும் நான் பார்த்தேன். நீங்கள் (உங்கள்) அடக்கத் தலங்களில் மகா குழப்பவாதியான தஜ்ஜா -ன் குழப்பத்தைப் போன்ற, அல்லது அதற்கு நிகரான குழப்பத்துக்கு உள்ளாக் கப்படுவீர்கள் என எனக்கு அறிவிக்கப் பட்டது. (நீங்கள் அடக்கத் தலங்களில் இருக் கும்போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?” என்று வினவப் படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளர், அல்லது ‘(இறைத்தூதின் மீது) உறுதிகொண்டிருந்தவர்’- (இந்த இடத்தில் அறிவிப்பாளர் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்)- “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் எங்களிடம் சான்றுகளையும் நல்வழியையும் கொண்டுவந்தார். நாங்கள் (அவரை) நம்பினோம்; பதிலளித்தோம்; பின்பற்றினோம்; மெய்மைப்படுத்தினோம்” என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், “நலமுடன் உறங்குவீராக!” நீர் (உலகில் வாழ்ந்த காலத்தில்) இவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம்” எனக் கூறப்படும். ‘நயவஞ்சகன்’ அல்லது ‘சந்தேகத்துடன் இருந்தவனிடம்’ “இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?” என்று கேட்கப்படும். அவன், “(‘இவரை) எனக்குத் தெரியாது; மக்கள் ஒன்றைச் சொல்லக் கேட்டேன். நானும் அதையே சொன்னேன்” என்று பதிலளிப்பான். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இவ்வாறு) ஃபாத்திமா பின்த் அல் முன்திர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்ததை நான் மனனமிட்டுக் கொண்டேன். ஆயினும், அவர் நபி (ஸல்) அவர்கள் கூறிய கடினமான செய்தியையே குறிப்பிட்டார். அத்தியாயம் :
ஹதீஸ் 923 — Sahih al Bukhari 11:47
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِمَالٍ أَوْ سَبْىٍ فَقَسَمَهُ، فَأَعْطَى رِجَالاً وَتَرَكَ رِجَالاً فَبَلَغَهُ أَنَّ الَّذِينَ تَرَكَ عَتَبُوا، فَحَمِدَ اللَّهَ ثُمَّ أَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ ‏ "‏ أَمَّا بَعْدُ، فَوَاللَّهِ إِنِّي لأُعْطِي الرَّجُلَ، وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَىَّ مِنَ الَّذِي أُعْطِي وَلَكِنْ أُعْطِي أَقْوَامًا لِمَا أَرَى فِي قُلُوبِهِمْ مِنَ الْجَزَعِ وَالْهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْغِنَى وَالْخَيْرِ، فِيهِمْ عَمْرُو بْنُ تَغْلِبَ ‏"‏‏.‏ فَوَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ‏.‏ تَابَعَهُ يُونُسُ‏.‏
அம்ர் பின் தஃக்-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘சில பெருôட்கள்’ அல்லது ‘கைதிகள் சிலர்’ கொண்டுவரப் பட்டபோது, அவற்றை நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத் தார்கள். அப்போது அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். யாருக்குக் கொடுக் காமல் விட்டுவிட்டார்களோ அவர்கள் குறைகூறியது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில்) உரையாற்றினார்கள். (ஆரம்பமாக) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘அம்மா பஅத்’ (இறை வாழ்த்துக்குப்பின்...) எனக் கூறி “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சிலருக்குக் கொடுக்கிறேன் (சிலருக்குக் கொடுப்பதில்லை). நான் யாருக்குக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேனோ அவர், நான் யாருக்குக் கொடுக்கிறேனோ அவரைவிட என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருப்பார். எனினும், சிலரது உள்ளத்தில் பதற்றத்தையும் கலக்கத்தையும் நான் காண்பதால் அவர்களுக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் அமைத்துள்ள தன்னிறைவையும் (பொறுமையும் தன்மானமும் உடைய) ந(ல்ல மனப்பா)ன்மையையும் நம்பி(க் கொடுக்காமல் விட்டு)விடுகிறேன். இத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் அம்ர் பின் தஃக்-பும் ஒருவராவார்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் பாராட்டுக்குப் பகரமாக (விலை உயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் (எனக்குக்) கிடைப்பதாக இருந்தாலும் நான் அதை விரும்பமாட்டேன். அத்தியாயம் :
ஹதீஸ் 924 — Sahih al Bukhari 11:48
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ ذَاتَ لَيْلَةٍ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي الْمَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا فَكَثُرَ أَهْلُ الْمَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ الْمَسْجِدُ عَنْ أَهْلِهِ حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الْفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ ثُمَّ قَالَ ‏ "‏ أَمَّا بَعْدُ فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَىَّ مَكَانُكُمْ، لَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ فَتَعْجِزُوا عَنْهَا ‏"‏‏.‏ تَابَعَهُ يُونُسُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டி-ருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயி னர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றி மக்கள் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிக மானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது, மக்கள் கூட்டத்தால் பள்ளிவாசல் இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்...) எனக் கூறிவிட்டு, “நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும், (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான், நேற்றிரவு நான் பள்ளிவாசலுக்கு வரவில்லை)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 925 — Sahih al Bukhari 11:49
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَشِيَّةً بَعْدَ الصَّلاَةِ، فَتَشَهَّدَ وَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ ‏"‏‏.‏ تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ وَأَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حُمَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ ‏"‏‏.‏ تَابَعَهُ الْعَدَنِيُّ عَنْ سُفْيَانَ فِي أَمَّا بَعْدُ‏.‏
அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மாலையில் தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதி மொழி கூறி அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.