حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ " أَمَّا بَعْدُ ". تَابَعَهُ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுவதற்காக) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி ‘அம்மா பஅத்’ என்று கூறி (உரையைத் துவக்கி)யதை நான் செவியுற்றேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 927 — Sahih al Bukhari 11:51
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ، قَالَ حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمِنْبَرَ وَكَانَ آخِرَ مَجْلِسٍ جَلَسَهُ مُتَعَطِّفًا مِلْحَفَةً عَلَى مَنْكِبَيْهِ، قَدْ عَصَبَ رَأْسَهُ بِعِصَابَةٍ دَسِمَةٍ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " أَيُّهَا النَّاسُ إِلَىَّ ". فَثَابُوا إِلَيْهِ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّ هَذَا الْحَىَّ مِنَ الأَنْصَارِ يَقِلُّونَ، وَيَكْثُرُ النَّاسُ، فَمَنْ وَلِيَ شَيْئًا مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَاسْتَطَاعَ أَنْ يَضُرَّ فِيهِ أَحَدًا أَوْ يَنْفَعَ فِيهِ أَحَدًا، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيِّهِمْ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி (அமர்ந்து)கொண்டார்கள். அதுவே அவர்கள் அமர்ந்த இறுதி அமர்வாக அமைந்தது -அப்போது அவர்கள் தம் தோள்கள்மீது ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டிருந்தார்கள்; தலையில் கறுப்புத் துணியொன்றால் கட்டுப் போட்டிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “மக்களே! என்னை நெருங்கி வாருங்கள்” என்று கூறியதும், மக்கள் அவர்கள் அருகில் திரண்டனர். பிறகு ‘அம்மா பஅத்’ (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) (இதோ) இந்த அன்சாரிக் கூட்டத்தார் குறைந்துவிடுவார் கள்; (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். முஹம்மதின் சமுதாயத்தில் ஓர் அதிகாரப் பொறுப்பை ஏற்பவர், (தமது பொறுப்பைப் பயன்படுத்தி) ஒருவருக்கு நன்மை புரியவோ அல்லது யாரேனும் ஒருவருக் குத் தீங்கு செய்யவோ சக்தி பெற்றால், அன்சாரிகளில் நன்மை புரிகின்றவரின் நன்மையை ஏற்றுக்கொள்ளட்டும்; அவர் களில் தவறிழைப்பவரை (பெருந்தன்மை யோடு) மன்னித்துவிடட்டும்!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 928 — Sahih al Bukhari 11:52
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ خُطْبَتَيْنِ يَقْعُدُ بَيْنَهُمَا.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை ஜுமுஆவில்) இரண்டு சொற்பொழிவு (‘குத்பா’க்)கள் நிகழ்த்துவார்கள்; அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாச-ன் நுழைவாயி-ல் நின்று கொண்டு, முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர் களை) எழுதிப் பதிவு செய்துகொண்டி ருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆவுக்கு) வருப வரது நிலை ஓர் ஒட்டகத்தை ‘குர்பானி’ கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டை ‘குர்பானி’ கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றோர் ஆவர். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால், வானவர்கள் தங்கள் (பதிவு) ஏடுகளைச் சுருட்டி (வைத்து)விட்டு (அவரது) உரையைச் செவிதாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு உரையாற்றிக்கொண்டி ருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே! தொழுதுவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார். “எழுந்து, (இரண்டு ரக்அத்கள்) தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 931 — Sahih al Bukhari 11:55
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، قَالَ دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ " أَصَلَّيْتَ ". قَالَ لاَ. قَالَ " فَصَلِّ رَكْعَتَيْنِ ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), “நீர் தொழுது விட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இல்லை’ என்றார். “(எழுந்து) இரண்டு ரக்அத்கள் (சுருக்கமாகத்) தொழுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒரு (கிராமப்புற) மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்துவிட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந் தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு முறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக்கொண்டி ருந்தபோது, ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக் காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழை மேகத்தையும் வானத்தில் நாங்கள் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையைக் கீழே விடுவதற்கு முன்பாகவே மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையைவிட்டு இறங்கியிருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துகொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ள நீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங் கள்” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார் களோ அம்மேகம் விலகிச் செல்லாமல் இருக்கவில்லை. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் வானில்) வட்டமான பள்ளம் ஏற்பட்டதைப் போன்று மாறியது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றும்போது உமக்கு அருகிலிப்பவரிடம் நீ ‘மௌனமாக இரு’ என்று கூறினாலும், நீர் வீண்பேச்சு பேசியவர் ஆவீர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில், “வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்-ம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ் விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை.” என்று கூறினார்கள். (அந்த நேரத்தைப் பற்றிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள். அத்தியாயம் :