حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ " أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ ". وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ. وَأَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِقَتْلَى أُحُدٍ " أَىُّ هَؤُلاَءِ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى رَجُلٍ قَدَّمَهُ فِي اللَّحْدِ قَبْلَ صَاحِبِهِ. وَقَالَ جَابِرٌ فَكُفِّنَ أَبِي وَعَمِّي فِي نَمِرَةٍ وَاحِدَةٍ. وَقَالَ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنَا مَنْ، سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه.

ஹதீஸ் 1348 — Sahih al Bukhari 23:102

ஹதீஸ் 1349 — Sahih al Bukhari 23:103
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " حَرَّمَ اللَّهُ مَكَّةَ، فَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي وَلاَ لأَحَدٍ بَعْدِي، أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، لاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلاَّ لِمُعَرِّفٍ ". فَقَالَ الْعَبَّاسُ ـ رضى الله عنه ـ إِلاَّ الإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا. فَقَالَ " إِلاَّ الإِذْخِرَ ". وَقَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لِقُبُورِنَا وَبُيُوتِنَا ". وَقَالَ أَبَانُ بْنُ صَالِحٍ عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ. وَقَالَ مُجَاهِدٌ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لِقَيْنِهِمْ وَبُيُوتِهِمْ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கி யுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக் கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப் படவில்லை; எனக்குப் பின்பும் யாருக் கும் அனுமதிக்கப்படமாட்டாது. எனக் குக்கூட பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது. எனவே, இனி மக்காவில் உள்ள புற்கள் பிடுங்கப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம் சவக்குழிகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் தேவைப்படு கின்றதே?” என்றதும் நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிர” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நம் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்கள். ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நம் உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்” என்று கூறியதாக தாவூஸ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பில் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1350 — Sahih al Bukhari 23:104
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، فَاللَّهُ أَعْلَمُ، وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيصًا. قَالَ سُفْيَانُ وَقَالَ أَبُو هَارُونَ وَكَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَمِيصَانِ، فَقَالَ لَهُ ابْنُ عَبْدِ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ، أَلْبِسْ أَبِي قَمِيصَكَ الَّذِي يَلِي جِلْدَكَ. قَالَ سُفْيَانُ فَيُرَوْنَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَلْبَسَ عَبْدَ اللَّهِ قَمِيصَهُ مُكَافَأَةً لِمَا صَنَعَ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை (மரணித்து) சவக்குழிக்குள் வைக்கப்பட்டபிறகு அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்; அவரது சடலத்தை வெளியே எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டது. உடனே அதைத் தம் முழங்கால்கள்மீது வைத்து, அதன்மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித்தார்கள். (இவ்வாறு நபியவர்கள் செய்ததற்குக் காரணம் என்ன என்பதை) அல்லாஹ்வே நன்கறிவான். (இருந்தாலும், நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (அவர் பத்ரில் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு ஆடையின்றி இருந்தபோது) அப்துல்லாஹ் பின் உபை ஓர் மேலங்கியை அணிவித்தார் (என்பது காரணமாக இருக்கலாம்). இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சுஃப்யான் பின் உயைனா, அபூஹாரூன் (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பதாவது: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இரு மேலங்கிகள் இருந்தன. அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உபையின் (முஸ்லிமான) புதல்வர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மேனி யைத் தழுவியுள்ள உங்களது மேலங்கியை என் தந்தைக்கு அணிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். “அப்துல்லாஹ் பின் உபைக்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அணிவித்தது, அவர் (பத்ர் போரின் போது கைதான அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரம்தான் என்றே பலரும் கருது கின்றனர் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1351 — Sahih al Bukhari 23:105
حَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَىَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَإِنَّ عَلَىَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا. فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். எனக்குப்பின் நான் விட்டுச்செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிரவுள்ள மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரிய வராகக் கருதவில்லை. என்மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்” என்றார்கள். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொரு வரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் என் தந்தை அடக்கத் தலத்தில் இருப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் அடக்கத் தலத்திலிருந்து வெளியில் எடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர்போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1352 — Sahih al Bukhari 23:106
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ فَلَمْ تَطِبْ نَفْسِي حَتَّى أَخْرَجْتُهُ فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார்; ஆயினும், எனது மனம் அதை விரும்பவில்லை. எனவே, அவரது உடலை வெளியில் எடுத்து, அதைத் தனி கப்றில் அடக்கம் செய்தேன். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு நபர்களாகச் சேர்த்து, (ஒரே ஆடையில் கஃபன் இட்டுவிட்டு), “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்ட தும், அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள். பிறகு “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அவர் களை அடக்குமாறு கட்டளையிட்டார் கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் நீராட்டவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1354 — Sahih al Bukhari #1354
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ انْطَلَقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي رَهْطٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ الْحُلُمَ فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ ثُمَّ قَالَ لاِبْنِ صَيَّادٍ " تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ ". فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ. فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَرَفَضَهُ وَقَالَ آمَنْتُ بِاللَّهِ وَبِرُسُلِهِ. فَقَالَ لَهُ " مَاذَا تَرَى ". قَالَ ابْنُ صَيَّادٍ يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ " ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا ". فَقَالَ ابْنُ صَيَّادٍ هُوَ الدُّخُّ. فَقَالَ " اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ ". فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ ". وَقَالَ سَالِمٌ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأُبَىُّ بْنُ كَعْبٍ إِلَى النَّخْلِ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ ابْنُ صَيَّادٍ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ، يَعْنِي فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ أَوْ زَمْرَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ يَا صَافِ ـ وَهْوَ اسْمُ ابْنِ صَيَّادٍ ـ هَذَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم. فَثَارَ ابْنُ صَيَّادٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ تَرَكَتْهُ بَيَّنَ ". وَقَالَ شُعَيْبٌ فِي حَدِيثِهِ فَرَفَصَهُ رَمْرَمَةٌ، أَوْ زَمْزَمَةٌ. وَقَالَ إِسْحَاقُ الْكَلْبِيُّ وَعُقَيْلٌ رَمْرَمَةٌ. وَقَالَ مَعْمَرٌ رَمْزَةٌ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் சென்றபோது, அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். பருவ வயதை நெருங்கிவிட்டிருந்த இப்னு ஸய்யாத் ‘பனூ மஃகாலா’ குலத் தாரின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களு டன் விளையாடிக்கொண்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகின்ற வரை, (நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் வந்திருப்பதை) அவன் உணரவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனி டம், “நான்தான் இறைத்தூதர் என நீ உறுதிகூறுகின்றாயா?” எனக் கேட்டார் கள். இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர் களை நோட்டமிட்டுவிட்டு, “நீர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் நபி என நான் உறுதிகூறுகின்றேன்” என்று சொன்னான். பிறகு இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் உறுதிகூறுகின்றீரா?” எனக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள் (எதுவும் கேட்காமல்) அவனை விட்டுவிட்டு, “நான் அல்லாஹ்வையும் அவனு டைய தூதர்களையும் நம்பியுள்ளேன்” எனக் கூறினார்கள். பிறகு “(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், “எனக்கு மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன” என்றான். நபி (ஸல்) அவர்கள், “உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, “நான் (உனக்காக) ஒன்றை மனதில் மறைத்துவைத்துள்ளேன் (அது யாது)?” எனக் கேட்டார்கள். (அப்போது நபியவர்கள் ‘அத்துகான்’ எனும் (44ஆவது) அத்தியாயத்தின் 10ஆவது வசனத்தை மனதிற்குள் நினைத்துக்கொண்டார்கள்.) அதற்கு இப்னு ஸய்யாத், “அது (‘அத்துகான்’ என்பதை) ‘துக்’ என (அரைகுறையாக)ச் சொன்னான். உடனே நபி (ஸல்) அவர்கள், “தூர விலகிப் போ! நீ உனது எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்றார்கள்.29 அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்! இவனது கழுத்தை வெட்டிவிடு கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்பட வில்லை; இவன் அவனாக இல்லை யெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை” எனக் கூறினார்கள். பின்னர் (மற்றொரு சந்தர்ப்பத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருக்கும் பேரீச்சம் தோட்டத்திற்குச் சென்றனர். இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதை யேனும் செவியேற்க வேண்டும் என நபியவர்கள் திட்டமிட்டார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு எதையோ முணுமுணுத்தபடி படுத்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாதின் தாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈச்ச மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்துவிட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம், “ஸாஃபியே! -இது அவனுடைய பெயர்- “இதோ, முஹம்மத் (வந்து விட்டார்)” என்று கூறியதும், இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண், அவனை(ப் பேச)விட்டி ருந்தால் அவன் (தனது நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், (‘அவனை விட்டுவிட்டார் கள்’ என்பதைக் குறிக்க ‘ரஃபள’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘ரஃபஸ’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. (‘முணுமுணுப்பு’ என்பதைக் குறிக்க சில அறிவிப்புகளில்) ‘ரம்ரமா’ என்றும், ‘ஸம்ஸமா’ என்றும், வேறுசில அறிவிப்புகளில் ‘ரம்ஸா’ என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1355 — Sahih al Bukhari 23:108

ஹதீஸ் 1356 — Sahih al Bukhari 23:109
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ وَهْوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ " أَسْلِمْ ". فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهْوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم. فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ يَقُولُ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவர் திடீரென நோயுற்றார். எனவே, அவரை நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றபோது, அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்” என்றார்கள். உடனே அவர் தம்மருகிலிருந்த தந்தையைப் பார்த்தார். அப்போது அவர், “அபுல்காசிம் (நபி (ஸல்) அவர்களின்) சொல்லுக்குக் கட்டுப்படு!” என்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறி னார்கள். அத்தியாயம் :