இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறுவனாகவும், என் தாயார் பெண்ணாகவும் இருந்ததால் நானும் என் தாயாரும் (சமுதாயத்தின்) பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களாக (மக்காவில்) இருந்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 1358 — Sahih al Bukhari 23:111
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ ابْنُ شِهَابٍ يُصَلَّى عَلَى كُلِّ مَوْلُودٍ مُتَوَفًّى وَإِنْ كَانَ لِغَيَّةٍ، مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِطْرَةِ الإِسْلاَمِ، يَدَّعِي أَبَوَاهُ الإِسْلاَمَ أَوْ أَبُوهُ خَاصَّةً، وَإِنْ كَانَتْ أُمُّهُ عَلَى غَيْرِ الإِسْلاَمِ، إِذَا اسْتَهَلَّ صَارِخًا صُلِّيَ عَلَيْهِ، وَلاَ يُصَلَّى عَلَى مَنْ لاَ يَسْتَهِلُّ مِنْ أَجْلِ أَنَّهُ سِقْطٌ، فَإِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه – {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا} الآيَةَ.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துவிட்ட எல்லாக் குழந்தை களுக்கும் இறுதித் தொழுகை நடத்தப் படும். அது விபசாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில், அது இயற்கையாகவே இஸ்லாத்தில்தான் பிறக்கிறது. குழந்தையின் பெற்றோர் முஸ்லிம் களாக இருந்து, அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து, அவர்களின் குழந்தை பிறந்தபோது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு இறுதித் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில், அது குறைபேறு (கருச்சிதைவு) ஆகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” (30:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1359 — Sahih al Bukhari 23:112
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ}
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர் கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களா கவோ கிறித்தவர்களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடு கின்றனர்.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்” (30:30) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1360 — Sahih al Bukhari 23:113
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي طَالِبٍ " يَا عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ، حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْكَ ". فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ {مَا كَانَ لِلنَّبِيِّ} الآيَةَ.
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “என் தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி யம் கூறுவேன்” எனக் கூறினார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல் லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூ தாலிபே! (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக் கப்போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசிப் பேச்சாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக் கின்றேன்)” என்று கூறியதோடு, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பாளர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகாது” (9:113) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத் தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர் களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொரு வரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள். பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார் கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மையவாடியில் ஒரு பிரேத நல்லடக்கத்தில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும், நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். “உங்களில் ‘யாரும்’ அல்லது ‘பிறந்து விட்ட எந்த உயிரும்’ தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா என்று எழுதப்படாமலிருப்பதில்லை; அவ்வாறே, அது நற்பேறற்றதா, நற்பேறு பெற்றதா என்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை” எனக் கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின், ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நற்செயல்கள் புரியாமல் நாங்கள் இருந்துவிடமாட்டோமா? ஏனெனில், நம்மில் யார் நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் அந்த நல்லவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்; யார் நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் அந்தக் கெட்டவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் நற்பேறு பெற்றவர்களோ அவர்களுக்கு நற்செயல் எளிதாக்கப்படும்; யார் நற்பேறற் றவர்களோ அவர்களுக்குக் கெட்ட செயல் எளிதாக்கப்படும்” என்று கூறினார்கள். பிறகு “எவர் தானதர்மம் கொடுத்து, இறையச்சத்துடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ...” என்று தொடங்கும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1363 — Sahih al Bukhari #1363
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ". وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ".
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ". وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ".
ஹதீஸ் 1364 — Sahih al Bukhari 23:116
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ". وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ".
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ". وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ ـ رضى الله عنه ـ فِي هَذَا الْمَسْجِدِ فَمَا نَسِينَا، وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَانَ بِرَجُلٍ جِرَاحٌ فَقَتَلَ نَفْسَهُ فَقَالَ اللَّهُ بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ ".
ஹதீஸ் 1365 — Sahih al Bukhari 23:117
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ، وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: “யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்தி லும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1366 — Sahih al Bukhari 23:118
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنهم ـ أَنَّهُ قَالَ لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ عَلَيْهِ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَبْتُ إِلَيْهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتُصَلِّي عَلَى ابْنِ أُبَىٍّ وَقَدْ قَالَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا ـ أُعَدِّدُ عَلَيْهِ قَوْلَهُ ـ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " أَخِّرْ عَنِّي يَا عُمَرُ ". فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ قَالَ " إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ، لَوْ أَعْلَمُ أَنِّي إِنْ زِدْتُ عَلَى السَّبْعِينَ فَغُفِرَ لَهُ لَزِدْتُ عَلَيْهَا ". قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ انْصَرَفَ، فَلَمْ يَمْكُثْ إِلاَّ يَسِيرًا حَتَّى نَزَلَتِ الآيَتَانِ مِنْ {بَرَاءَةٌ} {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} إِلَى {وَهُمْ فَاسِقُونَ} قَالَ فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்ததும் அவருக்கு (இறுதி)த் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்கத் தயாரானபோது நான் குதித்தெழுந்து அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் பின் உபைக்கு (இறுதித்) தொழுகை நடத்தப்போகிறீர்களா? அவர் இன் னின்ன நாட்களில் இன்னின்னவாறெல் லாம் பேசியுள்ளார்” என, அவர் பேசிய வற்றை நபியவர்களிடம் எடுத்துக் கூறி னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, “உமரே! என்னைவிட்டு விலகி நிற்பீராக!” எனக் கூறினார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்திய தும் அவர்கள், “(பாவமன்னிப்புக் கோரல், கோராமல் இருத்தல் ஆகிய இரண்டில் ஒன்றைச் செய்ய) எனக்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எழுபது தடவை களுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப் புக் கோரினால் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என நான் அறிந்தால், அவ்வாறே நான் அதிகமாகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுவித்துவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாவதற்குள், ‘பராஅத்’ (9ஆவது) அத்தியாத்தில், “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) என்று தொடங்கி இறுதிவரையிலான வசனம், அதற்கு முன்னுள்ள (9:80ஆவது) வசனம் ஆகிய இரு வசனங்கள் அருளப்பெற்றன. பிறகுதான் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களிடம் நான் காட்டிய துணிச்சலை எண்ணி வியந்துபோனேன். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கு அறிந்தவர்கள். அத்தியாயம் :