Qurani·قرآني
தமிழ்

ஜனாஸா (இறுதிச் சடங்குகள்)

158 ஹதீஸ்கள் · #1237–1394

ஹதீஸ் 1367 — Sahih al Bukhari 23:119
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مَا وَجَبَتْ قَالَ ‏"‏ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ‏"‏‏.‏
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مَا وَجَبَتْ قَالَ ‏"‏ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ‏"‏‏.‏
ஹதீஸ் 1368 — Sahih al Bukhari 23:120
حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ بِهِمْ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ‏.‏ ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ‏.‏ فَقَالَ أَبُو الأَسْوَدِ فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ ‏"‏‏.‏ فَقُلْنَا وَثَلاَثَةٌ قَالَ ‏"‏ وَثَلاَثَةٌ ‏"‏‏.‏ فَقُلْنَا وَاثْنَانِ قَالَ ‏"‏ وَاثْنَانِ ‏"‏‏.‏ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ‏.‏
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந் தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) மக்களைக் கடந்து சென்றது. அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்துரைக்கப்பட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு இன்னொரு பிரேதம் கடந்து சென்றது. அப்போது அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு மூன்றாவது பிரேதம் கடந்து சென்றது. அவருடைய தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசப்பட்டது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். நான் “இûறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் கூறினால், அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், லி“மூவர் சாட்சியாயிருந் தால்...?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “மூன்று பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...?” என நாங்கள் கேட்டதற்கு, “இரண்டு பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1369 — Sahih al Bukhari 23:121
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا أُقْعِدَ الْمُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ، ثُمَّ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ ‏{‏يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ‏}‏ ‏"‏‏.‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا وَزَادَ ‏{‏يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا‏}‏ نَزَلَتْ فِي عَذَابِ الْقَبْرِ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அடக்கத் தலத்தில் ஓர் இறைநம்பிக்கை யாளர் (அடக்கம் செய்யப்பட்டபின்) எழுப்பி அமரவைக்கப்படுவார்; (அவரிடம் இரு வானவர்கள்) கொண்டுவரப்(படுவர். கேள்வி கேட்கப்)படும். பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்” என உறுதி கூறுவார். இதையே அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான சொல்மூலம் இம்மை வாழ்க்கையிலும் மறுமை (வாழ்க்கை)யிலும் அல்லாஹ் நிலை கொள்ளச்செய்வான்” (14:27) எனக் குறிப்பிடுகின்றான். இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இந்த வசனம் சவக்குழி (கப்று) வேதனை தொடர்பாகவே அருளப்பட்டது” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1370 — Sahih al Bukhari 23:122
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أَهْلِ الْقَلِيبِ فَقَالَ ‏"‏ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ‏"‏‏.‏ فَقِيلَ لَهُ تَدْعُو أَمْوَاتًا فَقَالَ ‏"‏ مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ وَلَكِنْ لاَ يُجِيبُونَ ‏"‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ர் போரில் கொல்லப்பட்ட எதிரி களின் உடல்கள் ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் உண்மை யாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்துகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். “இறந்துவிட்டவர்களை அழைக்கின் றீர்களே?” என அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு “அவர்களைவிட நீங்கள் அதிகம் செவியுறுபவர்களல்லர்; ஆயினும், அவர்கள் பதிலளிக்கமாட் டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1371 — Sahih al Bukhari 23:123
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّهُمْ لَيَعْلَمُونَ الآنَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ حَقٌّ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى‏}‏‏"‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறந்தவர் களின் விஷயத்தில்), “நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என் பதை இப்போது அவர்கள் அறிகிறார் கள்” என்றுதான் கூறினார்கள். (செவி யுறுகிறார்கள் என்று கூறவில்லை; ஏனெனில்) “நிச்சயமாக நீர் மரித் தோரைக் கேட்கச்செய்ய முடியாது” (27:80) என அல்லாஹ் கூறுகின்றான். அத்தியாயம் :
ஹதீஸ் 1372 — Sahih al Bukhari 23:124
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، سَمِعْتُ الأَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ يَهُودِيَّةً، دَخَلَتْ عَلَيْهَا، فَذَكَرَتْ عَذَابَ الْقَبْرِ، فَقَالَتْ لَهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ‏.‏ فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَذَابِ الْقَبْرِ فَقَالَ ‏"‏ نَعَمْ عَذَابُ الْقَبْرِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ صَلَّى صَلاَةً إِلاَّ تَعَوَّذَ مِنْ عَذَابِ الْقَبْرِ‏.‏ زَادَ غُنْدَرٌ ‏"‏ عَذَابُ الْقَبْرِ حَقٌّ ‏"‏‏.‏
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை உண்டு” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மண்ணறை வேதனை உண்மை தான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1373 — Sahih al Bukhari 23:125
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ تَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ الْقَبْرِ الَّتِي يَفْتَتِنُ فِيهَا الْمَرْءُ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ الْمُسْلِمُونَ ضَجَّةً‏.‏
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றி னார்கள். அப்போது அடக்கத் தலத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, (அங்கிருந்த) முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1374 — Sahih al Bukhari 23:126
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ فَيَقُولاَنِ مَا كُنْتَ تَقُولُ فِي الرَّجُلِ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏ فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ‏.‏ فَيُقَالُ لَهُ انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ، قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا ‏"‏‏.‏ قَالَ قَتَادَةُ وَذُكِرَ لَنَا أَنَّهُ يُفْسَحُ فِي قَبْرِهِ‏.‏ ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ أَنَسٍ قَالَ ‏"‏ وَأَمَّا الْمُنَافِقُ وَالْكَافِرُ فَيُقَالُ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ فَيَقُولُ لاَ أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ‏.‏ فَيُقَالُ لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ‏.‏ وَيُضْرَبُ بِمَطَارِقَ مِنْ حَدِيدٍ ضَرْبَةً، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ، غَيْرَ الثَّقَلَيْنِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் மண்ணறையில் அடக் கம் செய்யப்பட்டு அவருடைய தோழர் கள் திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையைச் செவியுறுவார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். இறைநம்பிக்கையாளர், “இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்” என்பார். அவரிடம் “(நீர் கெட்டவராய் இருந்திருந் தால் உமக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உமது இருப்பிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உமக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி யுள்ளான்” எனக் கூறப்படும். இரண்டை யும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார். அவருக்கு அடக்கத் தலம் (கப்று) விசாலமாக்கப்படும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்து இந்த ஹதீஸின் அறிவிப் பாளரான அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நயவஞ்சகர் மற்றும் இறைமறுப்பாளரி டம், “இந்த மனிதர் விஷயத்தில் நீர் என்ன கருதிக்கொண்டிருந்தீர்?” என்று கேட்கப்படும். அதற்கு “எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என அவர் விடையளிப்பார். உடனே “நீர் அறிந்திருக்கவு மில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவர் கடுமையாக அடிக்கப்படுவார். அப்போது அவரை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவர் அலறுவார். அத்தியாயம் :
ஹதீஸ் 1375 — Sahih al Bukhari 23:127
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهم ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ وَجَبَتِ الشَّمْسُ، فَسَمِعَ صَوْتًا فَقَالَ ‏ "‏ يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا ‏"‏‏.‏ وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَوْنٌ، سَمِعْتُ أَبِي، سَمِعْتُ الْبَرَاءَ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்துவிட்டிருந்தபோது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, “யூதர் கள் அவர்களின் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1376 — Sahih al Bukhari 23:128
حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَتْنِي ابْنَةُ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ‏.‏
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையைவிட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய புதல்வியார் (உம்மு காலித்) கூறுகிறார். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.