حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நான் அடக்கத் தலத்தின் வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகிய வற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனப் பிரார்த்திப்பவர் களாக இருந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1378 — Sahih al Bukhari 23:130
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ " إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ مِنْ كَبِيرٍ ـ ثُمَّ قَالَ ـ بَلَى أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ، وَأَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ ". قَالَ ثُمَّ أَخَذَ عُودًا رَطْبًا فَكَسَرَهُ بِاثْنَتَيْنِ ثُمَّ غَرَزَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى قَبْرٍ، ثُمَّ قَالَ " لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு மண்ணறைகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்படு கிறார்கள்; ஆனால், ஒரு பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. ஒருவர் கோள்சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்ளாத வர்” என்று கூறினார்கள். பிறகு ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரு மண்ணறை களிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள்.30 அத்தியாயம் :
ஹதீஸ் 1379 — Sahih al Bukhari 23:131
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). மேலும், “இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் அல்லாஹ் உன்னை மறுமை நாளில் எழுப்பி இங்குதான் அனுப்புவான்” என்றும் கூறப்படும். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1380 — Sahih al Bukhari 23:132
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا. يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الإِنْسَانُ لَصَعِقَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருந்தால், “நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இவ்வாறு கூறும் அதன் சப்தத்தை, மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1381 — Sahih al Bukhari 23:133
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنَ النَّاسِ مُسْلِمٌ يَمُوتُ لَهُ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் முஸ்லிமான ஒருவருக் குப் பருவமடையாத மூன்று குழந்தை கள் இறந்துவிட்டால், அக்குழந்தை களின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணையின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.31 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1382 — Sahih al Bukhari 23:134
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ ".
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1383 — Sahih al Bukhari 23:135
حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَوْلاَدِ الْمُشْرِكِينَ فَقَالَ " اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பாளர்களின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1384 — Sahih al Bukhari 23:136
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ فَقَالَ " اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பாளர்களின் குழந்தை கள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார் கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1385 — Sahih al Bukhari 23:137
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக் கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர் களாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வைகறை தொழுகை) தொழுது முடித்ததும் எங்களை முன்னோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?” என்று கேட்பார் கள். யாரேனும் கனவுகண்டிருந்தால், அதை விவரிப்பார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் கூறு வார்கள். இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘இல்லை’ என்றோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் (வானவர்) இருவர் என்னிடம் வந்து என் கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கே ஒருவர் உட்கார்ந் திருந்தார். நின்றுகொண்டிருந்த இன் னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த் தாடையின் ஒருபுறம் குத்த அது அவரு டைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி சீராகிவிட்டது. பின்பு அவர் மறுபடியும் அவ்வாறே (தொடர்ந்து) செய்கிறார். உடனே நான் “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். அவ்வாறே நடந்து ஒரு மனிதரிடம் வந்தோம். அவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டில் பெரிய கற்பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைக்கிறார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை சீராகி பழைய நிலைக்கு மாறிவிடுகிறது. மீண்டும் வந்து உடைத்தார். அப்போது “இவர் யார்?” என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். அவ்வாறே நடந்து, அடுப்பு போன்ற ஒரு பொந்தை அடைந்தோம். அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார் கள். நான் “இவர்கள் யார்?” எனக் கேட் டேன். அதற்கும் அவர்கள் ‘நடங்கள்’ என்றார்கள். அவ்வாறே நடந்து, ஓர் இரத்த ஆற்றுக்கு வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுகொண்டி ருந்தார். ஆற்றின் கரையில் மற்றொருவர் நின்றார். அவருக்கு முன்னால் கற்கள் (குவிக்கப்பட்டுள்ளன). ஆற்றுக்குள் இருக் கும் மனிதர் முன்னேறி ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது, கரையில் நிற்பவர், அவரது வாயில் கல்லை எறிந்து, பழைய இடத்துக்கே அவரைத் தள்ளிவிடுகிறார். இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே செல்கிறார். அப்போது நான் “என்ன இது?” எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். அவ்வாறே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு முதியவரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவர் தமக்கு முன்னால் தீ மூட்டிக்கொண்டிருந்தார். பிறகு அவ்விரு(வான)வரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டுபோய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் ஆண்கள், வயோதிகர்கள், இளைஞர் கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதாக வும் சிறப்பானதாகவும் இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும், “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு இருவரும், “ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீர் களே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவர் வழியாக உலகின் நாலா பாகங்களையும் அடையும். நீங்கள் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீர்களே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே, அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீர்களே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீர்களே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த முதியவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். அவரைச் சுற்றியிருந்த சிறுவர் கள், மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தவர் நரகத்தின் காவலாளியான (வானவர்) மாலிக் (அலை). நீங்கள் நுழைந்த முதல் மாளிகை பொதுவான இறைநம்பிக்கை யாளர்களின் வீடாகும். இதோ இந்த மாளிகை உயிர்த்தியாகிகளின் இல்ல மாகும். நான் (வானவர்) ஜிப்ரீல். இவர் (வானவர்) மீக்காயீல்” என்று கூறிவிட்டு, “இப்போது உங்கள் தலையை உயர்த் துங்கள்” என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம்போல் இருந்தது. அவர்கள் இருவரும் “இதுவே (மறுமை யில்) உங்கள் இருப்பிடம்” என்றதும் நான், “எனது இருப்பிடத்தில் நுழைய என்னை விடுங்களேன்” என்றேன். அதற்கு இருவரும் “உங்கள் வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதை நீங்கள் பூர்த்தி செய்ததும் உமது இருப்பிடம் வருவீர்கள்” என்றனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :