حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ. وَقَالَ لَهَا فِي أَىِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ يَوْمَ الاِثْنَيْنِ. قَالَ فَأَىُّ يَوْمٍ هَذَا قَالَتْ يَوْمُ الاِثْنَيْنِ. قَالَ أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ. فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ كَانَ يُمَرَّضُ فِيهِ، بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ فَقَالَ اغْسِلُوا ثَوْبِي هَذَا، وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ فَكَفِّنُونِي فِيهَا. قُلْتُ إِنَّ هَذَا خَلَقٌ. قَالَ إِنَّ الْحَىَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ الْمَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ. فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்(கள் நோயுற்றிருந்தபோது அவர்)களிடம் நான் சென்றேன். அப்போது “நபி (ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் ‘கஃபன்’ செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் மேலங்கியோ தலைப் பாகையோ இல்லை” என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமை யில் இறந்தார்கள்?”எனக் கேட்டார்கள். நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். “இன்று என்ன கிழமை?” என்று கேட்ட தும், நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். அதற்கு அவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்” என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந் திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந் தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் ‘கஃபன்’ இடுங்கள்” எனக் கூறினார்கள். நான், “இது பழையதாயிற்றே!” என்றேன். அதற்கு அவர்கள் “இறந்த வரைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர்; இ(ந்தக் கஃபனான)து, (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழ் சலத்துக்கு உரியதுதான்” என்றார்கள். பிறகு அன்று மாலைவரை அவர்கள் இறக்கவில்லை. செவ்வாய் இரவில்தான் இறந்தார்கள்; (அன்று) காலை விடிவ தற்குமுன் அடக்கம் செய்யப்பட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1388 — Sahih al Bukhari 23:140
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ. أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ " نَعَمْ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் திடீரென இறந்துவிட்டார். அவர் அப்போது பேசியிருந்தால் தர்மம் (செய்யுமாறு வஸிய்யத்) செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.32 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, “இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று (ஆவலோடு) கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களது உயிரை, எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் சாய்ந்திருந்த நிலையில்) அல்லாஹ் கைப்பற்றினான். எனது வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1390 — Sahih al Bukhari 23:144
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيٌّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، لَمَّا سَقَطَ عَلَيْهِمُ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ، فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا، وَظَنُّوا أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَا وَجَدُوا أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لاَ وَاللَّهِ مَا هِيَ قَدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا هِيَ إِلاَّ قَدَمُ عُمَرَ ـ رضى الله عنه ـ.
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيٌّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، لَمَّا سَقَطَ عَلَيْهِمُ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ، فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا، وَظَنُّوا أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَا وَجَدُوا أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لاَ وَاللَّهِ مَا هِيَ قَدَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا هِيَ إِلاَّ قَدَمُ عُمَرَ ـ رضى الله عنه ـ.
ஹதீஸ் 1391 — Sahih al Bukhari 23:145
وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَوْصَتْ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ لاَ تَدْفِنِّي مَعَهُمْ وَادْفِنِّي مَعَ صَوَاحِبِي بِالْبَقِيعِ، لاَ أُزَكَّى بِهِ أَبَدًا.
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், (தமது மரணத் தறுவாயில்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம், “என்னை நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருடன் (அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்) அடக்கம் செய்ய வேண்டாம்; மாறாக, என்னை நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியருடன் அவர்களின் அடக்கத் தலங்கள் அமைந்துள்ள ‘பகீஉ’ எனும் (பொது மையவாடி) இடத்திலேயே அடக்கிவிடுங்கள். (ஏனெனில்,) அதைக் கொண்டு நான் (மற்றத் துணைவியரைவிட) ஒருபோதும் உயர்வாகக் கருதப்படலாகாது” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை (மரணத் தறுவாயில்) பார்த்தேன். அவர்கள் (தம் புதல்வரிடம்), “அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘உமர் பின் அல்கத்தாப் உங்களுக்கு சலாம் கூறுகிறார்’ என்று சொல்லிவிட்டு என் தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருடன் நானும் அடக்கம் செய்யப் பட வேண்டும் என்பதற்கு அவர்களி டம் அனுமதி கேள்” எனக் கூறி னார்கள். (அவ்வாறே கேட்கப்பட்டதும்,) ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும், இன்று நான் அவருக்காக அதை விட்டுக்கொடுக்கின்றேன்” என்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள் “என்ன பதில் கிடைத்தது?” எனக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அனுமதியளித்துவிட்டார் கள்” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. என் உயிர் கைப்பற்றப் பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மீண்டும்) எனது சலாமைக் கூறி, “உமர் அனுமதி கேட்கிறார்” எனக் கூறுங்கள். அவர்கள் எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது யார்மீது முழு திருப்தி கொண்டிருந்தார்களோ அந்த இக்குழுவினரைவிட வேறு யாரும் இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை ஆட்சித் தலைவராக (கலீஃபா) தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர்தான் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்” எனக் கூறிவிட்டு, உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீதாலிப் (ரலி), தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோரின் பெயர் களைக் குறிப்பிட்டார்கள. அப்போது அன்சாரிகளில் ஓர் இளைஞர் அங்கு வந்து, “இறைநம் பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! இஸ்லாத்தில் உங்களுக்கு உள்ள சிறப்பு என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராகி நீதி செலுத்தினீர்கள். அடுத்து இதற்கெல்லாம் மேலாக வீரமரணமும் (ஷஹாதத்) கிடைத்திருக் கிறது” என்றார். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதர ரின் மகனே! எனது விருப்பமெல்லாம், இந்த ஆட்சிப்பொறுப்பு எனக்கு நன்மை யாகவும் இல்லாமல், தீமையாகவும் இல்லாமல் சரிநிகராக இருந்தாலே போதும் என்பதுதான்” எனக் கூறிவிட்டு, “எனக் குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில் அவர், துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள் விஷயத்தில் நல்லபடி நடந்துகொள்ள வேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அவ்வாறே, அன்சாரிகளிடமும் அவர் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் இந்நகரத்தையும் (மதீனா), இறைநம்பிக்கையையும் சொந்த இடமாக ஆக்கிக்கொண்டவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்(று மதிக்)க வேண்டும்; தவறிழைக்கக்கூடியவர்களை மன்னித்துவிட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிம்களல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரிய வேண்டும். அவர்களது சக்திக்குமேல் அவர்களைச் சிரமப்படுத்தக் கூடாது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1393 — Sahih al Bukhari 23:147
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا ". وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْقُدُّوسِ عَنِ الأَعْمَشِ، وَمُحَمَّدُ بْنُ أَنَسٍ عَنِ الأَعْمَشِ. تَابَعَهُ عَلِيُّ بْنُ الْجَعْدِ وَابْنُ عَرْعَرَةَ وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் தேடிக்கொண்டவற்றின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.33 இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1394 — Sahih al Bukhari 23:148
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو لَهَبٍ ـ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ. فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூலஹப்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவன் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ‘இனி எல்லா நாட்களிலும் உமக்கு நாசம் உண்டாகட்டும்” எனக் கூறினான். அப்போதுதான், “அபூலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்...” என்ற (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அத்தியாயம் :