Qurani·قرآني
தமிழ்

ஜனாஸா (இறுதிச் சடங்குகள்)

158 ஹதீஸ்கள் · #1237–1394

ஹதீஸ் 1247 — Sahih al Bukhari 23:10
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَاتَ إِنْسَانٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ فَمَاتَ بِاللَّيْلِ فَدَفَنُوهُ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ أَخْبَرُوهُ فَقَالَ ‏ "‏ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي ‏"‏‏.‏ قَالُوا كَانَ اللَّيْلُ فَكَرِهْنَا ـ وَكَانَتْ ظُلْمَةٌ ـ أَنْ نَشُقَّ عَلَيْكَ‏.‏ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோயுற்றிருந்த) ஒருவரை நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக நலம் விசாரிப்ப வர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்து விட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும், “இதை அப் போதே எனக்கு நீங்கள் அறிவிக்காத தன் காரணமென்ன?” என்று கேட் டார்கள். அதற்கு மக்கள், “கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரது அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து இறுதித் தொழுகை தொழுவித்தார்கள்.8 அத்தியாயம் :
ஹதீஸ் 1248 — Sahih al Bukhari 23:11
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنَ النَّاسِ مِنْ مُسْلِمٍ يُتَوَفَّى لَهُ ثَلاَثٌ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ، إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: மனிதர்களில் ஒரு முஸ்லிமுக்கு, பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால், அக்குழந்தைகளின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணை யின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.9 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1249 — Sahih al Bukhari #1249
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه أَنَّ النِّسَاءَ، قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ لَنَا يَوْمًا‏.‏ فَوَعَظَهُنَّ، وَقَالَ ‏"‏ أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ ‏"‏‏.‏ قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ‏.‏ قَالَ ‏"‏ وَاثْنَانِ ‏"‏‏.‏ وَقَالَ شَرِيكٌ عَنِ ابْنِ الأَصْبَهَانِيِّ، حَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي، هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَبُو هُرَيْرَةَ ‏"‏ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ‏"‏‏.‏

ஹதீஸ் 1250 — Sahih al Bukhari 23:12

ஹதீஸ் 1251 — Sahih al Bukhari 23:13
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ يَمُوتُ لِمُسْلِمٍ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، فَيَلِجَ النَّارَ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ‏{‏وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا‏}‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந் தைகள் இறந்துவிட்டால், (எல்லாருமே நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற) சத்தியத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நேரம் மட்டுமே தவிர (வேறு சமயத்தில்) அவர் நரகத்தின் பக்கம் செல்லவேமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (சத்தியத்தை நிறைவேற்றல் என்பது,) “உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க இயலாது” (19:71) எனும் வசனத்தைக் குறிக்கிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 1252 — Sahih al Bukhari 23:14
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي فَقَالَ ‏ "‏ اتَّقِي اللَّهَ وَاصْبِرِي ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அடக்கத் தலத்தின் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அல்லாஹ்வைப் பயந்துகொள்; பொறுமையாயிரு” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1253 — Sahih al Bukhari 23:15
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ فَقَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مَنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَعْطَانَا حِقْوَهُ فَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏ تَعْنِي إِزَارَهُ‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி இறந்தபோது எங்களிடம் வந்து, “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து முறை, தேவையெனக் கருதினால் அதற்கு அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங் கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடித்ததும் நபியவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.11 அத்தியாயம் :
ஹதீஸ் 1254 — Sahih al Bukhari 23:16
حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏ فَقَالَ أَيُّوبُ وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ ‏"‏ اغْسِلْنَهَا وِتْرًا ‏"‏‏.‏ وَكَانَ فِيهِ ‏:‏ ‏"‏ ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا ‏"‏‏.‏ وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ ‏"‏ ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا ‏"‏‏.‏ وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அவர்கள், “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங் கள்” எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “ஒற்றைப் படையாக(த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; -மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)- அவரது வலப் புறத்திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “நாங்கள் அவருக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னி னோம்” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 1255 — Sahih al Bukhari 23:17
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَسْلِ ابْنَتِهِ ‏ "‏ ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا ‏"‏‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது மகளை நீராட்டும்போது, “அவரது வலப் புறத் திலிருந்தும் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பி யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1256 — Sahih al Bukhari 23:18
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا غَسَّلْنَا بِنْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَنَا وَنَحْنُ نَغْسِلُهَا ‏ "‏ ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ ‏"‏‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டிருந்தபோது, “சடலத்தின் வலப் புறத்திலிருந்தும் அதன் அங்கத் தூய்மை செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.