Qurani·قرآني
தமிழ்

ஜனாஸா (இறுதிச் சடங்குகள்)

158 ஹதீஸ்கள் · #1237–1394

ஹதீஸ் 1257 — Sahih al Bukhari 23:19
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ بِنْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَنَا ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَنَزَعَ مِنْ حِقْوِهِ إِزَارَهُ وَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகள் இறந்த தும் அவர்கள், “அவரை மூன்று, அல்லது ஐந்து, அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிக மான தடவைகள் நீராட்டுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று எங்களிடம் கூறினார்கள். நீராட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து, “இதை அவரது உடம்பில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1258 — Sahih al Bukhari #1258
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ، فَقَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ قَالَتْ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ فَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏ وَعَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنهما ـ بِنَحْوِهِ وَقَالَتْ إِنَّهُ قَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ‏"‏‏.‏ قَالَتْ حَفْصَةُ قَالَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ وَجَعَلْنَا رَأْسَهَا ثَلاَثَةَ قُرُونٍ‏.‏

ஹதீஸ் 1259 — Sahih al Bukhari 23:20

ஹதீஸ் 1260 — Sahih al Bukhari 23:21
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَيُّوبُ وَسَمِعْتُ حَفْصَةَ بِنْتَ سِيرِينَ، قَالَتْ حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ ثُمَّ غَسَلْنَهُ ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் சடலத்திற்குத் தலை (முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற் றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1261 — Sahih al Bukhari 23:22
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ جَاءَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللاَّتِي بَايَعْنَ، قَدِمَتِ الْبِصْرَةَ، تُبَادِرُ ابْنًا لَهَا فَلَمْ تُدْرِكْهُ ـ فَحَدَّثَتْنَا قَالَتْ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ قَالَتْ فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏ وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَىُّ بَنَاتِهِ‏.‏ وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ الْفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ وَلاَ تُؤْزَرَ‏.‏
இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதி மொழிப் பிரமாணம் அளித்திருந்த அன் சாரிப் பெண்மணி உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் தம் மகனைக் காண்பதற் காக பஸ்ராவுக்கு வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக்கொண்டி ருந்தபோது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், “சடலத்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவி யுங்கள்” எனக் கூறினார்கள். நீராட்டி முடித்ததும் எங்களிடம் தமது கீழாடையைத் தந்து, “இதை அவரது உடலில் சுற்றுங்கள்” என்று கூறி னார்கள். இதற்கு அதிகமாக இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் எதையும் அறிவிக்கவில்லை. (அவருடைய சகோதரி ஹஃப்ஸா, இதைவிடக் கூடுதல் தகவல் அறிவித்துள்ளார்.) “நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் இவர் யார் என்பது எனக்குத் தெரிய வில்லை” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மேலும், ‘உடலில் சுற்றுதல்’ என்பதே (மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘இஷ்ஆர்’ என்பதன் பொருளாகும் என்று அய்யூப் (ரஹ்) அவர்கள் கருதுகிறார்கள். பெண் சடலத்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும், (உடம்பில்) சுற்ற வேண்டும் என்றே இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1262 — Sahih al Bukhari 23:23
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أُمِّ الْهُذَيْلِ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ ضَفَرْنَا شَعَرَ بِنْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ تَعْنِي ثَلاَثَةَ قُرُونٍ‏.‏ وَقَالَ وَكِيعٌ قَالَ سُفْيَانُ نَاصِيَتَهَا وَقَرْنَيْهَا‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம். “மூன்று சடைகள் என்பது முன் நெற்றிப்பகுதியில் ஒன்றும் தலையின் இரு ஓரங்களில் இரண்டும் ஆகும்” என சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1263 — Sahih al Bukhari 23:24
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، قَالَ حَدَّثَتْنَا حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ اغْسِلْنَهَا بِالسِّدْرِ وِتْرًا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَضَفَرْنَا شَعَرَهَا ثَلاَثَةَ قُرُونٍ وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள். கடைசி யில் ‘கற்பூரத்தை’ அல்லது ‘கற்பூரத்தில் சிறிதளவை’ச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்கள். நீராட்டி முடித்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்காக) எங்களிடம் தந்தார்கள். மேலும், நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதைச் சடலத்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம். அத்தியாயம் :
ஹதீஸ் 1264 — Sahih al Bukhari 23:25
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யமன் தேசத்தின் பருத்தியாலான வெண் ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் இடப்பட்டார்கள். அம்மூன்றில் மேலங் கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1265 — Sahih al Bukhari 23:26
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டிய) ஒருவர் ‘அரஃபா’ மைதானத்தில் தங்கியிருந்தார். திடீரென அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்து(க் கொன்று)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி, இரு ஆடைகளால் சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1266 — Sahih al Bukhari 23:27
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْصَعَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தங்கியிருந்தார். திடீரென அவர், தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரது கழுத்தை மிதித்து முறித்துவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடை களால் சவக்கோடி (கஃபன்) அணி வியுங்கள்; (மற்றவர்களுக்குப் பூசுவதைப் போன்று) அவரது உடலுக்கு வாசனைத் தூள் போடவேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில், (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் மறுமை நாளில் ‘தல்பியா’ (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...) சொன்னவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.