حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ أَنَّ رَجُلاً، وَقَصَهُ بَعِيرُهُ، وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُمِسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّدًا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தோம். அப்போது இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரை, அவரது ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்று விட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்). அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளால் ‘கஃபன்’ இடுங்கள்; நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மூடவும் வேண்டாம்; ஏனெனில், அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) சொன்னவராக எழுப்புவான்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1268 — Sahih al Bukhari 23:29
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، وَأَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ كَانَ رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ فَوَقَعَ عَنْ رَاحِلَتِهِ ـ قَالَ أَيُّوبُ فَوَقَصَتْهُ، وَقَالَ عَمْرٌو فَأَقْصَعَتْهُ ـ فَمَاتَ فَقَالَ " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ أَيُّوبُ يُلَبِّي، وَقَالَ عَمْرٌو ـ مُلَبِّيًا ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். -அது அவரது கழுத்தை முறித்துவிட்டது என அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். அது அவரைக் கால்களால் மிதித்துக் கொன்றுவிட்டது என அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- எனவே, அவர் இறந்து விட்டார். நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளில் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங் கள்; அவருக்கு வாசனைத் தூள் போட வேண்டாம்; அவரது தலையை மறைக் கவும் வேண்டாம்; ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்...) கூறியவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1269 — Sahih al Bukhari 23:30
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عَبْدَ، اللَّهِ بْنَ أُبَىٍّ لَمَّا تُوُفِّيَ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَمِيصَهُ فَقَالَ " آذِنِّي أُصَلِّي عَلَيْهِ ". فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ ـ رضى الله عنه ـ فَقَالَ أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ " أَنَا بَيْنَ خِيرَتَيْنِ قَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} ". فَصَلَّى عَلَيْهِ فَنَزَلَتْ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا}
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துபோனார். அப்போது அவரது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மேலங்கியைத் தாருங்கள்; அவருக்கு அதில் சவக்கோடி (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும், நீங்கள் அவருக்கு இறுதித் தொழுகை நடத்தி, அவருக்காகப் பாவமன்னிப்பும் கோர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அவருக்குக் கொடுத்து விட்டு, “(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் அவருக்குத் தொழுவிக்கிறேன்” என்றார்கள். அவ்வாறே அவர் அறிவித்ததும் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வுக்கு இறுதித் தொழுகை நடத்த நாடியபோது, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு நீங்கள் இறுதித் தொழுகை நடத்தக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (பாவமன்னிப்புக் கோரல், கோராமலிருத்தல் ஆகிய) இரு விருப்ப உரிமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிவிட்டு, “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்; அல்லது பாவமன்னிப்புக் கேராமல் இரும்; நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்” (9:80) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். பிறகு அவருக்கு (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
ஹதீஸ் 1270 — Sahih al Bukhari 23:31
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا دُفِنَ فَأَخْرَجَهُ، فَنَفَثَ فِيهِ مِنْ رِيقِهِ وَأَلْبَسَهُ قَمِيصَهُ.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் சடலம் சவக் குழிக்குள் வைக்கப்பட்டபின் அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், அவரது உடலை வெளியிலெடுக்கச் செய்து, அதில் தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித் தார்கள்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 1271 — Sahih al Bukhari 23:32
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُفِّنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابِ سَحُولَ كُرْسُفٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மூன்று வெண் ணிறப் பருத்தி ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டார்கள்; அவற்றில் மேலங் கியோ தலைப்பாகையோ இருக்க வில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1272 — Sahih al Bukhari 23:33
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு மூன்று துணிகளால் ‘கஃபன்’ இடப் பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1273 — Sahih al Bukhari 23:34
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் உடலுக்கு (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. அத்தியாயம் :
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவர்களது உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. உடனே அவர்கள், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, -அவர் என்னைவிடச் சிறந்தவ ராக இருந்தார்- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப் பட்டபோது, -அன்னாரும் என்னைவிடச் சிறந்தவரே- அவருக்கு ‘கஃபன்’ இடுவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே, நன்மை(களுக்கான பிரதி பலன்)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக் கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சு கிறேன்” எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.13 அத்தியாயம் :
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நோன்பாளியாக இருந்த (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், “என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அவரது உடலுக்கு ஒரு சால்வையால் ‘கஃபன்’ இடப்பட்டது. அப்போது அவரின் தலை மறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது. மேலும், ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அவரும் என்னைவிடச் சிறந்தவர்தான் (அவரும் அது போலவே பற்றாக்குறையான சிறிய சால்வையாலேயே கஃபன் இடப்பட்டார்கள்.) பிறகு ‘(அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கி றீர்களே) இந்த அளவு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப் பட்டன’ அல்லது ‘இந்த உலக(ச் செல்வ)த் திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவு நமக்குத் தரப்பட்டது.’ நாம் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை உண்ணாமல் (அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1276 — Sahih al Bukhari 23:37
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، حَدَّثَنَا خَبَّابٌ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَلْتَمِسُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا. قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ نَجِدْ مَا نُكَفِّنُهُ إِلاَّ بُرْدَةً إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَأَنْ نَجْعَلَ عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ.
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடி நபி (ஸல்) அவர்களுடன் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பானது. எங்களில் சிலர் தமது பிரதிபலன் எதையும் (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் இறந்துவிட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். எங்களில் வேறு சிலருக்கு (ஹிஜ்ரத்தின்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க்கொண்டிருக்கிறார்கள். முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டார் கள். அன்னாருக்கு ‘கஃபன்’ அணிவிக்க ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு அவரது தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு, அவருடைய கால்களை ‘இத்கிர்’ என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :