Qurani·قرآني
தமிழ்

ஜனாஸா (இறுதிச் சடங்குகள்)

158 ஹதீஸ்கள் · #1237–1394

ஹதீஸ் 1287 — Sahih al Bukhari #1287
حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ تُوُفِّيَتِ ابْنَةٌ لِعُثْمَانَ ـ رضى الله عنه ـ بِمَكَّةَ وَجِئْنَا لِنَشْهَدَهَا، وَحَضَرَهَا ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا ـ أَوْ قَالَ جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا‏.‏ ثُمَّ جَاءَ الآخَرُ، فَجَلَسَ إِلَى جَنْبِي فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمَرَ ـ رضى الله عنهما ـ لِعَمْرِو بْنِ عُثْمَانَ أَلاَ تَنْهَى عَنِ الْبُكَاءِ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ‏"‏‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ كَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَقُولُ بَعْضَ ذَلِكَ، ثُمَّ حَدَّثَ قَالَ صَدَرْتُ مَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ، إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ سَمُرَةٍ فَقَالَ اذْهَبْ، فَانْظُرْ مَنْ هَؤُلاَءِ الرَّكْبُ قَالَ فَنَظَرْتُ فَإِذَا صُهَيْبٌ، فَأَخْبَرْتُهُ فَقَالَ ادْعُهُ لِي‏.‏ فَرَجَعْتُ إِلَى صُهَيْبٍ فَقُلْتُ ارْتَحِلْ فَالْحَقْ أَمِيرَ الْمُؤْمِنِينَ‏.‏ فَلَمَّا أُصِيبَ عُمَرُ دَخَلَ صُهَيْبٌ يَبْكِي يَقُولُ وَاأَخَاهُ، وَاصَاحِبَاهُ‏.‏ فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَا صُهَيْبُ أَتَبْكِي عَلَىَّ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ‏"‏‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما فَلَمَّا مَاتَ عُمَرُ ـ رضى الله عنه ـ ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ رَحِمَ اللَّهُ عُمَرَ، وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ لَيُعَذِّبُ الْمُؤْمِنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ‏.‏ وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ لَيَزِيدُ الْكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ‏"‏‏.‏ وَقَالَتْ حَسْبُكُمُ الْقُرْآنُ ‏{‏وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى‏}‏‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عِنْدَ ذَلِكَ وَاللَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى‏.‏ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ وَاللَّهِ مَا قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ شَيْئًا‏.‏
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்காவில் உஸ்மான் (ரலி) அவர் களுடைய மகள் (உம்மு அபான்) இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் ‘அவர்களிருவருக் கும் நடுவில்’ அல்லது ‘அவர்களில் ஒருவருக்கு அருகில்’ அமர்ந்திருந்தேன். பிறகு மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரஹ்) அவர்களிடம், “(சப்த மிட்டு) அழுபவர்களை நீர் தடுக்க வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்’ எனக் கூறியுள்ளார்கள்” என்றார்கள். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் ‘பைதா’ எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு பயணக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். அப்போது “நீர் சென்று அப்பயணக் கூட்டம் யாரெனப் பார்த்து வாரீர்’ என உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள். நான் அங்கு (சென்று) பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். “அவரை என்னிடம் அழைத்து வாரீர்” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் முஃமினீன்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்” எனக் கூறினேன். பின்னர் (சிறிது காலம் கழித்து) உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது, ‘சகோதரரே! நண்பரே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத் தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் களல்லவா?” என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்தபோது, (அவர்கள்) இறப்பதற்குமுன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (முஃமின்) அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை. மாறாக, ‘குடும்பத்தார் (சப்தமிட்டு) அழுவதன் காரணத்தால் இறைமறுப்பாளருக்கு அல்லாஹ் நிச்சயமாக வேதனையை அதிகமாக்குகிறான்’ என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, ‘பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை” (6:164) எனும் இறைவசனம் உங்களுக்குப் போதுமே” என்றும் கூறினார்கள். இதைக் கூறி முடித்த பொழுது “சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவ னும் அவனே” (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இச் சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை” என்று இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறி னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1288 — Sahih al Bukhari 23:46

ஹதீஸ் 1289 — Sahih al Bukhari 23:47
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا فَقَالَ ‏ "‏ إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள், அவளோ சவக்குழியில் வேதனை செய்யப்படுகி றாள்” என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத் தார் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைநம்பிக்கை யாளர்கள் தொடர்பாக இவ்வாறு கூறவில்லை). அத்தியாயம் :
ஹதீஸ் 1290 — Sahih al Bukhari 23:48
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ ـ وَهْوَ الشَّيْبَانِيُّ ـ عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا أُصِيبَ عُمَرُ ـ رضى الله عنه ـ جَعَلَ صُهَيْبٌ يَقُولُ وَاأَخَاهُ‏.‏ فَقَالَ عُمَرُ أَمَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ ‏"‏‏.‏
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (கத்தியால் குத்தப்பட்டு) காயமுற்றிருந்தபோது, ‘சகோதரரே’ எனக் கூறியவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (சப்தமிட்டு) அழத் தொடங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உயிரோடிருப்பவர்கள் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 1291 — Sahih al Bukhari 23:49
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنِ الْمُغِيرَةِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّ كَذِبًا عَلَىَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ مَنْ نِيحَ عَلَيْهِ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர்மீது கூறும் பொய்யைப் போன்ற தன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப் பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட் டும்: மேலும், யாருக்காக ஒப்பாரிவைக்கப் படுகிறதோ அவர் அதனால் (மறுமை நாளில்) வேதனை செய்யப்படுவார். இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1292 — Sahih al Bukhari 23:50
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ ‏"‏‏.‏ تَابَعَهُ عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ‏.‏ وَقَالَ آدَمُ عَنْ شُعْبَةَ ‏"‏ الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ عَلَيْهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒப்பாரிவைக்கப்படுவதால், இறந்தவர் அடக்கத் தலத்தில் வேதனை செய்யப் படுகிறார். இதை உமர் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆதம் பின் இயாஸ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஷுஅபா (ரஹ்) அவர் களின் அறிவிப்பில், “உயிருள்ளவர்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படு கின்றார்” எனக் காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 1293 — Sahih al Bukhari 23:51
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ جِيءَ بِأَبِي يَوْمَ أُحُدٍ، قَدْ مُثِّلَ بِهِ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ سُجِّيَ ثَوْبًا فَذَهَبْتُ أُرِيدُ أَنْ أَكْشِفَ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، ثُمَّ ذَهَبْتُ أَكْشِفُ عَنْهُ فَنَهَانِي قَوْمِي، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُفِعَ فَسَمِعَ صَوْتَ صَائِحَةٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذِهِ ‏"‏‏.‏ فَقَالُوا ابْنَةُ عَمْرٍو أَوْ أُخْتُ عَمْرٍو‏.‏ قَالَ ‏"‏ فَلِمَ تَبْكِي أَوْ لاَ تَبْكِي فَمَا زَالَتِ الْمَلاَئِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رُفِعَ ‏"‏‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் தினத்தன்று உறுப் புகள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல்மீது ஒரு துணி போர்த்தப் பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தை யை)ப் பார்க்க விரும்பினேன். எனினும், என் சமூகத்தார் என்னைத் தடுத்து விட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் சமூகத்தார் என்னைத் தடுத்துவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரேதத்தைத் தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார்கள். ‘அம்ர் (பின் ஹராம்) அவர்களின் மகள்’ என்றோ அல்லது ‘அம்ருடைய சகோதரி’ என்றோ (கூடியிருந்தோர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘நீ ஏன் அழு கிறாய்?’ அல்லது ‘நீ அழ வேண்டாம்’ என்று கூறிவிட்டு, “பிரேதம் தூக்கப் படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1294 — Sahih al Bukhari 23:52
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ الْيَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (துன்பத்தில்) கன்னங்களில் அறைந்து கொள்பவரும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.19 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1295 — Sahih al Bukhari 23:53
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي عَامَ حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي فَقُلْتُ إِنِّي قَدْ بَلَغَ بِي مِنَ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَقُلْتُ بِالشَّطْرِ فَقَالَ ‏"‏ لاَ ‏"‏ ثُمَّ قَالَ ‏"‏ الثُّلُثُ وَالثُّلْثُ كَبِيرٌ ـ أَوْ كَثِيرٌ ـ إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ بِهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ ‏"‏ إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً صَالِحًا إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً، ثُمَّ لَعَلَّكَ أَنْ تُخَلَّفَ حَتَّى يَنْتَفِعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ، اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ، وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ، لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ، يَرْثِي لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ مَاتَ بِمَكَّةَ ‏"‏‏.‏
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டுவிட்டது. நான் தனவந்தன்; ஒரு மகளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசுக்காரர்கள் இல்லை: எனவே, எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகம் நான் தர்மம் செய்துவிடட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள். பின்னர் நான், “பாதியை(க் கொடுக் கட்டுமா)?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பாகம் வேண்டுமானால் தர்மம் செய்வீராக! அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசு களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. அல்லாஹ்வின் அன்பை வேண்டி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை; நீர் உம்முடைய மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட (உமக்கு நன்மையுண்டு)” என்று கூறினார்கள். நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாரும் மதீனாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனே!” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால், உமது தகுதியும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனக் கூறிவிட்டு, “உம்மை வைத்துச் சில கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.20 பின்னர் “இறைவா! என் தோழர் களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்கு வாயாக! அவர்களைத் தம் கால் சுவடு களின் வழியே (முந்திய மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியாயிருந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக “பாவம் சஅத் பின் கவ்லா (அவர் நினைத்தது நடக்க வில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 1296 — Sahih al Bukhari 23:54
وَقَالَ الْحَكَمُ بْنُ مُوسَى حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرٍ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًا فَغُشِيَ عَلَيْهِ، وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا، فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَرِئَ مِنَ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ‏.‏
அபூபுர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் தமது கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது, “நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித் துக்கொள்ளும் பெண்ணைவிட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். எவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.