Qurani·قرآني
தமிழ்

ஜனாஸா (இறுதிச் சடங்குகள்)

158 ஹதீஸ்கள் · #1237–1394

ஹதீஸ் 1297 — Sahih al Bukhari 23:55
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துகொள்பவரும் சட்டைப்பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1298 — Sahih al Bukhari 23:56
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (துன்பத்தின்போது) கன்னங்களில் அறைந்துகொள்பவரும், சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்பு கின்றவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1299 — Sahih al Bukhari 23:57
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ ـ شَقِّ الْبَابِ ـ فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ، وَذَكَرَ بُكَاءَهُنَّ، فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، لَمْ يُطِعْنَهُ فَقَالَ انْهَهُنَّ‏.‏ فَأَتَاهُ الثَّالِثَةَ قَالَ وَاللَّهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ ‏ "‏ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ ‏"‏‏.‏ فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத் தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவிடுக்கில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளை யிட்டார்கள். அவர் சென்றுவிட்டு மீண்டும் வந்து, அவர்கள் (தமது சொல்லுக்குக்) கட்டுப்படவில்லை என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “நீர் (சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” எனக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று விட்டு மூன்றாம் முறையாக வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களை (அப்பெண் கள்) மிகைத்துவிட்டனர்” என்றார். “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்கவ்வச் செய்வானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை; இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1300 — Sahih al Bukhari 23:58
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا حِينَ قُتِلَ الْقُرَّاءُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَزِنَ حُزْنًا قَطُّ أَشَدَّ مِنْهُ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்ஆன் (மனனம் செய்து அதை முறைப்படி ஓதத் தெரிந்திருந்த எழுபது) அறிஞர்கள் (வஞ்சித்துக்) கொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து தொழுகையில்) ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இந்தத் தருணத்தைவிட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1301 — Sahih al Bukhari 23:59
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ اشْتَكَى ابْنٌ لأَبِي طَلْحَةَ ـ قَالَ ـ فَمَاتَ وَأَبُو طَلْحَةَ خَارِجٌ، فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا وَنَحَّتْهُ فِي جَانِبِ الْبَيْتِ، فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ كَيْفَ الْغُلاَمُ قَالَتْ قَدْ هَدَأَتْ نَفْسُهُ، وَأَرْجُو أَنْ يَكُونَ قَدِ اسْتَرَاحَ‏.‏ وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ، قَالَ فَبَاتَ، فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ، فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَا كَانَ مِنْهُمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا ‏"‏‏.‏ قَالَ سُفْيَانُ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلاَدٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ الْقُرْآنَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியவதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை ஒன்று நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அக் குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணை வியார் உடனே சிறிது (உணவைத்) தயார் செய்தார். பிறகு குழந்தையின் பிரே தத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பியவுடன், “மகன் எவ்வாறுள்ளான்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவருடைய மனைவி, “அமைதியாகிவிட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்றுவிட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு” எனப் பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதி யுடன் தம் மனைவியோடு) இரவைக் கழித்தார். பொழுது விடிந்து நீராடிவிட்டு (தொழுகைக்காக) வெளியே செல்ல அபூதல்ஹா (ரலி) அவர்கள் நாடியபோது, மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது இல்லத்தில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள்வளம் செய்யக்கூடும்” என்றார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த் தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 1302 — Sahih al Bukhari 23:60
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல்கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்.22 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1303 — Sahih al Bukhari 23:61
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ ـ هُوَ ابْنُ حَيَّانَ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي سَيْفٍ الْقَيْنِ ـ وَكَانَ ظِئْرًا لإِبْرَاهِيمَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِبْرَاهِيمَ فَقَبَّلَهُ وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ، وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَذْرِفَانِ‏.‏ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ رضى الله عنه ـ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏"‏ يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ‏"‏‏.‏ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الْعَيْنَ تَدْمَعُ، وَالْقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلاَّ مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ ‏"‏‏.‏ رَوَاهُ مُوسَى عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை இப்ராஹீம் வளர்ந்துவந்த) ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாரு டைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை நாங்கள் அவரது வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்ஃபின் புதல்வரே! இது கருணை (யின் வெளிப்பாடு)” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண் அழுகின்றது; உள்ளம் வருந்துகின்றது. நம் இறைவன் விரும்புவதைத் தவிர வேறு எதையும் நாம் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாம் உம(து பிரிவு)க்காகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1304 — Sahih al Bukhari 23:62
حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنهم ـ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ فَقَالَ ‏"‏ قَدْ قَضَى ‏"‏‏.‏ قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَبَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَكَوْا فَقَالَ ‏"‏ أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ، وَلاَ بِحُزْنِ الْقَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا ـ وَأَشَارَ إِلَى لِسَانِهِ ـ أَوْ يَرْحَمُ وَإِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ‏"‏‏.‏ وَكَانَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَضْرِبُ فِيهِ بِالْعَصَا، وَيَرْمِي بِالْحِجَارَةِ وَيَحْثِي بِالتُّرَابِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகி யோருடன் நலம் விசாரிக்கச் சென்றார் கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தார் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், “என்ன? இறந்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) நீங்கள் (செவிசாய்த்துக்) கேட்கமாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வ தாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை -பின்பு தமது நாவைச் சுட்டிக்காட்டி- எனினும், இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்கு கிறான். நிச்சயமாகக் குடும்பத்தார் (ஒப்பாரிவைத்து) அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால், தடியால் அடிப்பார்கள்; கல் எறிவார்கள்; மண் வாரி தூற்றுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1305 — Sahih al Bukhari 23:63
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ، قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ لَمَّا جَاءَ قَتْلُ زَيْدِ بْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ، جَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَطَّلِعُ مِنْ شَقِّ الْبَابِ، فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ بِأَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ الرَّجُلُ ثُمَّ أَتَى فَقَالَ قَدْ نَهَيْتُهُنَّ، وَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ، فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ، ثُمَّ أَتَى، فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنِي أَوْ غَلَبْنَنَا الشَّكُّ مِنْ مُحَمَّدِ بْنِ حَوْشَبٍ ـ فَزَعَمَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ ‏"‏‏.‏ فَقُلْتُ أَرْغَمَ اللَّهُ أَنْفَكَ، فَوَاللَّهِ مَا أَنْتَ بِفَاعِلٍ وَمَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْعَنَاءِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : (மூத்தா போரில்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி), ஐஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப் பட்ட செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளியில் நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜஅஃபர் (ரலி) அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரிவைத்து) அழுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவர் சென்று திரும்பிவந்து, “நான் தடுத்தேன்: அவர்கள் எனது சொல்லுக்குக் கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “(நீர் சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்துவீராக!” என இரண்டாவது முறையாகக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்றுவிட்டு வந்து, “அல்லாஹ் வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணை யாக! ‘என்னை (அப்பெண்கள்) மிஞ்சி விட்டனர்’ அல்லது ‘நம்மை அவர்கள் மிஞ்சிவிட்டனர்’ என்றார். அப்போது “அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் (கடிந்து) கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் அவரை நோக்கி, “அல்லாஹ் உமது மூக்கை மண்ணைக் கவ்வச்செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம் மால் செய்ய முடியவில்லை: நபியவர் களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1306 — Sahih al Bukhari 23:64
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَخَذَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ الْبَيْعَةِ أَنْ لاَ نَنُوحَ، فَمَا وَفَتْ مِنَّا امْرَأَةٌ غَيْرَ خَمْسِ نِسْوَةٍ أُمِّ سُلَيْمٍ وَأُمِّ الْعَلاَءِ وَابْنَةِ أَبِي سَبْرَةَ امْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَتَيْنِ أَوِ ابْنَةِ أَبِي سَبْرَةَ وَامْرَأَةِ مُعَاذٍ وَامْرَأَةٍ أُخْرَى‏.‏
உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒப்பாரிவைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். எனினும். இந்த உறுதிமொழியை எங்களில் ஐந்து பெண் களைத் தவிர வேறு யாரும் நிறை வேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), ‘முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூஸப்ராவின் மகள் மேலும் இரண்டு பெண்கள்’ அல்லது ‘அபூஸப்ராவின் மகள், முஆத் (ரலி) உடைய மனைவி, இன்னும் ஒரு பெண்’ ஆகியோர் ஆவர். (அறிவிப்பாளர்களில் ஒருவர் இவ்வாறு ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்.) அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.