حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ ". قَالَ سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي سَالِمٌ عَنْ أَبِيهِ قَالَ أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. زَادَ الْحُمَيْدِيُّ " حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிரேதத்தைக் கண்டால், அது உங்களைக் கடந்து செல்லும்வரை எழுந்து நில்லுங்கள். இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைதீ (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “உங்களைக் கடக்கும்வரை, அல்லது (கீழே) பிரேதம் வைக்கப்படும் வரை (நில்லுங்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1308 — Sahih al Bukhari 23:66
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَأَى أَحَدُكُمْ جَنَازَةً فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا فَلْيَقُمْ حَتَّى يُخَلِّفَهَا، أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: உங்களில் ஒருவர் பிரேதத்தைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால், அவர் அதைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவரைக் கடந்து செல்லும்வரை, அல்லது அது அவருக்கு முன்னால் (கீழே) வைக்கப்படும்வரை எழுந்து நிற்கட்டும்! இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1309 — Sahih al Bukhari 23:67
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فَأَخَذَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ ـ رضى الله عنه ـ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ فَقَالَ قُمْ فَوَاللَّهِ لَقَدْ عَلِمَ هَذَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَانَا عَنْ ذَلِكَ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ.
அபூசயீத் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு நல்லடக்கத்தில் பங்கேற்றோம். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், (மதீனாவின் ஆட்சியராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்களின் கையைப் பற்றினார். பிறகு பிரேதம் (தரையில்) இறக்கி வைக்கப்படுவதற்குமுன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள். அப்போது அங்கு வந்த அபூசயீத் (ரலி) அவர்கள், மர்வானின் கையைப் பிடித்து, “எழுந்திரும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இ(வ்வாறு அமர்வ)தைத் தடுத்துள்ளார்கள் என்பதை இவர் (அபூஹுரைரா) நன்கு அறிந்துள்ளார்” எனக் கூறினார்கள். உடனே “அபூசயீத் சொன்னது உண்மை தான்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1310 — Sahih al Bukhari 23:68
حَدَّثَنَا مُسْلِمٌ ـ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ ـ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின் தொடர்ந்து செல்பவர், (அது கீழே) வைக்கப்படும்வரை உட்கார வேண்டாம். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1311 — Sahih al Bukhari 23:69
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ مَرَّ بِنَا جَنَازَةٌ فَقَامَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقُمْنَا بِهِ. فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ. قَالَ " إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا ".
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்துசென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யூதரின் பிரேதம்” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள். அத்தியாயம் :
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார் கள்?” என்று கூறும். இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1315 — Sahih al Bukhari 23:72
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا {إِلَيْهِ}، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: பிரேதத்தைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (பிரேதம்) நல்லறங்கள் புரிந்ததாயிருந் தால், அந்த நன்மையின்பால் அதை விரைந்து கொண்டுசெல்கிறீர்கள், அது வேறுவிதமாக இருந்தால், ஒரு தீங்கை (விரைவில்) உங்கள் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1316 — Sahih al Bukhari 23:73
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا وُضِعَتِ الْجِنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ لأَهْلِهَا يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَ الإِنْسَانُ لَصَعِقَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், “நாசமே! என்னை எங்கே கொண்டுசெல்கிறார்கள்?” என்று கூறும். இவ்வாறு அது கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :