حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ، فَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي أَوِ الثَّالِثِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசையில் நின்றிருந்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1318 — Sahih al Bukhari 23:75
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَعَى النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أَصْحَابِهِ النَّجَاشِيَّ، ثُمَّ تَقَدَّمَ فَصَفُّوا خَلْفَهُ فَكَبَّرَ أَرْبَعًا.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு, பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள், நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1319 — Sahih al Bukhari 23:76
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُ أَتَى عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَفَّهُمْ وَكَبَّرَ أَرْبَعًا. قُلْتُ مَنْ حَدَّثَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما.
சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள், தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்தின் அருகில் வந்து தோழர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி (இறுதித் தொழுகை நடத்தி)னார்கள் என்று நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் கூறினார்” என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் “அம்ரின் தந்தை (ஷஅபீ)யே! உமக்குக் கூறிய (அ)வர் யார்?” எனக் கேட்டதும் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1320 — Sahih al Bukhari 23:77
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ تُوُفِّيَ الْيَوْمَ رَجُلٌ صَالِحٌ مِنَ الْحَبَشِ فَهَلُمَّ فَصَلُّوا عَلَيْهِ ". قَالَ فَصَفَفْنَا فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ وَنَحْنُ صُفُوفٌ. قَالَ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ كُنْتُ فِي الصَّفِّ الثَّانِي.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் அபிசீனியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் (மன்னர் நஜாஷீ) இறந்துவிட்டார். எனவே, வாருங்கள்; அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுங்கள்” என கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது நான் இரண்டாவது வரிசை யில் நின்றிருந்தேன். அத்தியாயம் :
ஹதீஸ் 1321 — Sahih al Bukhari 23:78
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِقَبْرٍ قَدْ دُفِنَ لَيْلاً فَقَالَ " مَتَى دُفِنَ هَذَا ". قَالُوا الْبَارِحَةَ. قَالَ " أَفَلاَ آذَنْتُمُونِي ". قَالُوا دَفَنَّاهُ فِي ظُلْمَةِ اللَّيْلِ فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ. فَقَامَ فَصَفَفْنَا خَلْفَهُ. قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَنَا فِيهِمْ فَصَلَّى عَلَيْهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இரவில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் அடக்கத் தலத்தைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எப்போது அடக்கம் செய்யப்பட்டது?” எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவுதான்’ என்றதும், “எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அதை நாங்கள் இருள் படர்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச்செய்ய விரும்பவில்லை” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் (தொழத் தயாராக) எழுந்து நின்றார்கள். (சிறுவனாக இருந்த) நான் உட்பட அனைவரும் அவர்களுக் குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1322 — Sahih al Bukhari 23:79
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّنَا فَصَفَفْنَا خَلْفَهُ. فَقُلْنَا يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما.
சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்தைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அங்கு எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம்” என நபி (ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் “அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ)யே! உங்களுக்கு அதை அறிவித்த வர் யார்?” எனக் கேட்டதற்கு, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1323 — Sahih al Bukhari #1323
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ حُدِّثَ ابْنُ عُمَرَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنهم ـ يَقُولُ مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ. فَقَالَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا. فَصَدَّقَتْ ـ يَعْنِي عَائِشَةَ ـ أَبَا هُرَيْرَةَ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ. فَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ. {فَرَّطْتُ} ضَيَّعْتُ مِنْ أَمْرِ اللَّهِ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நபிமொழிகளை) அதிகமாக அறிவிக்கிறார்” என்றார்கள்.24 ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) அறிவிப்பை உறுதிப்படுத்தியதுடன், நானும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன் என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நாம் அதிக மான ‘கீராத்’களைப் பாழ்படுத்தி விட்டோமே!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1324 — Sahih al Bukhari 23:80
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ حُدِّثَ ابْنُ عُمَرَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنهم ـ يَقُولُ مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ. فَقَالَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا. فَصَدَّقَتْ ـ يَعْنِي عَائِشَةَ ـ أَبَا هُرَيْرَةَ وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ. فَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ. {فَرَّطْتُ} ضَيَّعْتُ مِنْ أَمْرِ اللَّهِ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நபிமொழிகளை) அதிகமாக அறிவிக்கிறார்” என்றார்கள்.24 ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) அறிவிப்பை உறுதிப்படுத்தியதுடன், நானும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன் என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நாம் அதிக மான ‘கீராத்’களைப் பாழ்படுத்தி விட்டோமே!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1325 — Sahih al Bukhari 23:81
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ قَرَأْتُ عَلَى ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الأَعْرَجُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ ". قِيلَ وَمَا الْقِيرَاطَانِ قَالَ " مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறாரோ அவருக்கு ஒரு ‘கீராத்’ நன்மை உண்டு; அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கீராத்’கள் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இரண்டு கீராத்கள் என்றால் என்ன?” என வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1326 — Sahih al Bukhari 23:82
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْرًا، فَقَالُوا هَذَا دُفِنَ، أَوْ دُفِنَتِ الْبَارِحَةَ. قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَصَفَّنَا خَلْفَهُ ثُمَّ صَلَّى عَلَيْهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அடக்கத் தலத்திற்கு வந்தார்கள். அப்போது “இ(ப் பிரேதமான)து, நேற்றிரவு தான் அடக்கம் செய்யப்பட்டது” என்று மக்கள் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். (அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.) அத்தியாயம் :