حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ اللَّيْثِيَّ،، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارَ وَحْشٍ وَهْوَ بِالأَبْوَاءِ ـ أَوْ بِوَدَّانَ ـ وَهْوَ مُحْرِمٌ فَرَدَّهُ، قَالَ صَعْبٌ فَلَمَّا عَرَفَ فِي وَجْهِي رَدَّهُ هَدِيَّتِي قَالَ " لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ ".
நபித்தோழர் ஸஅப் பின் ஜஸ் ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் அல்லது யிவத்தான்’ என்னும் இடத்தில் இருந்தபோது, ஒரு காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாக வழங்கினேன். (அது நான் வேட்டையாடியதாகும்.) அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். அதனால், அதை ஏற்க மறுத்துவிட் டார்கள். அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்துவிட்டதால் என் முகத்தில் தோன் றிய கவலையைக் கண்டபோது, ‘‘நாமாக உமது அன்பளிப்பை மறுக்கவில்லை; மாறாக, நாம் யிஇஹ்ராம்’ கட்டியுள்ளோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் யிஇப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப் பட்டுவந்தார். அவர் (ஸகாத் வசூலித் துக்கொண்டு) வந்தபோது, ‘‘இது உங்களுக் குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் (அதில்) ஒன்றை (முறைகேடாக)ப் பெற்றிருந்தால், அதை அவர் தமது பிடரியில் சுமந்துகொண்டு மறுமை நாளன்று வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் அக் குள்களின் வெண்மையை நாங்கள் பார்க் கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, ‘‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2598 — Sahih al Bukhari 51:32
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا ثَلاَثًا ". فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَدَنِي. فَحَثَى لِي ثَلاَثًا.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் உனக்கு இவ்வளவு (இவ்வளவு) தருவேன்” என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அந்த நிதி வந்து சேரவில்லை. பிறகு (ஆட்சித் தலைவரான) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்” என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பொதுஅறிவிப்பாளருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள், எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2599 — Sahih al Bukhari 51:33
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبِيَةً، وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ مِنْهَا شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ يَا بُنَىَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ مَعَهُ، فَقَالَ ادْخُلْ فَادْعُهُ لِي. قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ، وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ " خَبَأْنَا هَذَا لَكَ ". قَالَ فَنَظَرَ إِلَيْهِ، فَقَالَ رَضِيَ مَخْرَمَةُ.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள்; ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், ‘‘என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வா!” என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை, ‘‘நீ போய், எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு” என்று கூற, நான் நபி (ஸல்) அவர்களை என் தந்தைக்காக அழைத்தேன்; நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள்மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், ‘‘நாம் உமக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தோம்” என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, ‘யிமக்ரமா திருப்தியடைந் தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘நான் அழிந்து விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர் ‘‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் (விடுதலை செய்ய) அடிமை எவரும் உண்டா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘இல்லை” என்று கூறினார். ‘‘இரு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க உன்னால் முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவர், ‘‘முடியாது” என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், ‘அரக்’ ஒன்றைக் கொண்டுவந்தார். ‘அரக்’ என்பது பேரீச்சம்பழக் கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், ‘‘இதை எடுத்துச் சென்று தர்மம் செய்துவிடு” என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட அதிகத் தேவை உடையவர்களுக்கா நான் இதைத் தர்மம் செய்ய வேண்டும்! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடைய வீட்டார் யாரு மில்லை” என்று கூறினார்; அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘போ! (போய்) உன் வீட்டாருக்கே இதை உண்ணக் கொடு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2601 — Sahih al Bukhari 51:35
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمْتُهُ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَائِطِي، وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَلَكِنْ قَالَ " سَأَغْدُو عَلَيْكَ ". فَغَدَا عَلَيْنَا حَتَّى أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهِ بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا، فَقَضَيْتُهُمْ حُقُوقَهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ ثَمَرِهَا بَقِيَّةٌ، ثُمَّ جِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ جَالِسٌ، فَأَخْبَرْتُهُ بِذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعُمَرَ " اسْمَعْ ـ وَهْوَ جَالِسٌ ـ يَا عُمَرُ ". فَقَالَ أَلاَّ يَكُونُ قَدْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ، وَاللَّهِ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது தியாகியாகக் கொல்லப்பட்டார்கள். கடன் காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமையாக நடந்துகொண்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது பற்றிப்) பேசினேன். என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொண்டு, (மீதியுள்ள கடனை மன்னித்து) விமோசனம் அளிக்கும்படி நபியவர் கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை; கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நான் உன்னிடம் நாளை வருவேன்” என்று கூறினார்கள். அவ்வாறே, (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் வளம் உண்டாகப் பிரார்த்தித்தார்கள். நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர் களின் உரிமைகளை நிறைவேற்றினேன். அதன் பழங்களில் சிறிதளவு எங்களுக்கு எஞ்சியது. பிறகு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபொழுது அவர்களிடம் வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்களிடம், ‘‘உமரே! கேளுங்கள்” என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2602 — Sahih al Bukhari 51:36
حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ فَقَالَ لِلْغُلاَمِ " إِنْ أَذِنْتَ لِي أَعْطَيْتُ هَؤُلاَءِ ". فَقَالَ مَا كُنْتُ لأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ يَا رَسُولَ اللَّهِ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப் பக்கத்தில் முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (இந்த முதியவர்களுக்கு) இதைக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். அந்தச் சிறுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக்கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந் தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2604 — Sahih al Bukhari 51:38
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ بِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعِيرًا فِي سَفَرٍ، فَلَمَّا أَتَيْنَا الْمَدِينَةَ قَالَ " ائْتِ الْمَسْجِدَ فَصَلِّ رَكْعَتَيْنِ ". فَوَزَنَ ـ قَالَ شُعْبَةُ أُرَاهُ فَوَزَنَ لِي فَأَرْجَحَ، فَمَا زَالَ مِنْهَا شَىْءٌ حَتَّى أَصَابَهَا أَهْلُ الشَّأْمِ يَوْمَ الْحَرَّةِ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிர யாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழு” என்று கூறினார்கள். பிறகு நிறுத்(துத் தந்)தார்கள்; சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஹர்ரா’ நாளில் அதை எடுத்துக்கொள்ளும்வரை அதிலி ருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்துவந்தது.22 அத்தியாயம் :
ஹதீஸ் 2605 — Sahih al Bukhari 51:39
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِشَرَابٍ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ أَشْيَاخٌ، فَقَالَ لِلْغُلاَمِ " أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ ". فَقَالَ الْغُلاَمُ لاَ، وَاللَّهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا. فَتَلَّهُ فِي يَدِهِ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது; அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, ‘‘இவர்களுக்கு (இந்தப் பாலைக்) கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தரு கிறாயா?” என்று கேட்டார்கள். அச்சிறுவர், ‘‘மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய (நற்)பேற்றை வேறெ வருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பானத்தைச் சிறுவரின் கையிலேயே வைத்தார்கள். அத்தியாயம் :