حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ " دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَقَالَ اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهَا إِيَّاهُ ". فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلاَّ سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ. قَالَ " فَاشْتَرُوهَا فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைத் தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு” என்று கூறிவிட்டு, ‘‘அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின்) சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் யார் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
மர்வான் பின் அல் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகி யோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் யிஹவாஸின்’ தூதுக்குழுவினர் முஸ்லிம்களாக வந்த போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதி களையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும் படி கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமான தாகும். (உங்கள்) போர்க் கைதிகள், அல்லது (உங்கள்) செல்வம் ஆகிய இரண் டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத் துக்கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர் பார்த்துக் காத்திருந்தேன்” என்று கூறி னார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தி லிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள், அல்லது போர்க் கைதிகள் ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக் குத் தெளிவாகிவிட்டபோது, ‘‘நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களி டையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘இறைவாழ்த்துக்குப்பின்! (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளைத் திரும்பக் கொடுத்துவிடலாமென நான் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்.) எவர் நமக்கு (இனி) அல்லாஹ் முதன் முதலாக வழங்கவிருக்கும் செல்வத் திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்ற வரை தமது பங்கைத் தாமே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ, அவர் அவ்வாறே செய்யட்டும்; (அதுவரை தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்)” என்று கூறினார்கள். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளைத் திருப்பித்) தந்துவிடுகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவர் சம்மதிக்கிறார்; எவர் சம்மதிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது. ஆகையால், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) நம்மிடம் தெரிவிக்கட் டும்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்ப தாகத் தெரிவித்தார்கள். அத்தியாயம் :

ஹதீஸ் 2609 — Sahih al Bukhari 51:42
حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أَخَذَ سِنًّا فَجَاءَ صَاحِبُهُ يَتَقَاضَاهُ فَقَالَ " إِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ". ثُمَّ قَضَاهُ أَفْضَلَ مِنْ سِنِّهِ وَقَالَ " أَفْضَلُكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து (கடனாகப்) பெற்றார்கள். கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் சற்று கடுமையாகப் பேசினார். ஆகவே, தோழர் கள் அவரைத் தண்டிக்க விரும்பி னார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), ‘‘கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமை உண்டு” என்று கூறினார்கள். பிறகு, அவரது இளம் வயது ஒட்டகத்தைவிடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத் தார்கள். மேலும், ‘‘உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கி றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2610 — Sahih al Bukhari 51:43
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكَانَ عَلَى بَكْرٍ لِعُمَرَ صَعْبٍ، فَكَانَ يَتَقَدَّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَيَقُولُ أَبُوهُ يَا عَبْدَ اللَّهِ لاَ يَتَقَدَّمِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَحَدٌ. فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِعْنِيهِ ". فَقَالَ عُمَرُ هُوَ لَكَ. فَاشْتَرَاهُ ثُمَّ قَالَ " هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ، فَاصْنَعْ بِهِ مَا شِئْتَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் பயணம் செய்துகொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக்கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்துல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், ‘‘அதை எனக்கு விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘அது உங்களுக்குத்தான்” என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். பிறகு (என்னிடம்) ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது. நீர் விரும்பியபடி இதைப் பயன்படுத்திக்கொள்க!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2611 — Sahih al Bukhari 51:44
وَقَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعُمَرَ " بِعْنِيهِ ". فَابْتَاعَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், ‘‘இதை எனக்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாம லேயே), ‘‘அப்துல்லாஹ்வே! இது உமக் குரியது” என்று என்னிடம் கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே (விற்கப்பட்ட) பட்டு அங்கியைக் கண்டார் கள். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, வெள்ளிக்கிழமை யிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும்போதும் அணிந்துகொண் டால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்” என்று கூறினார்கள். பிறகு சில பட்டு அங்கிகள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) வந்தன. அவற்றில் ஓர் அங்கியை அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களா? யிஉ(த்)தாரிக்’ அங்கி தொடர்பாக நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் உங்களுக்குத் தரவில்லை” என்று பதிலளித்தார்கள்.23 ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் (பால்குடி) சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2613 — Sahih al Bukhari 51:46
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ فَذَكَرَتْ لَهُ ذَلِكَ فَذَكَرَهُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا ". فَقَالَ " مَا لِي وَلِلدُّنْيَا ". فَأَتَاهَا عَلِيٌّ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ. قَالَ تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ. أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு (ஒருமுறை) வந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, ‘‘நான் ஃபாத்திமா வின் வீட்டு வாசலில் பல வண்ணக் கோடுகள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘‘அந்தத் திரைச் சீலையை என்ன செய்ய வேண்டும் என்று தாம் விரும்புவதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்துகொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பிவிடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2614 — Sahih al Bukhari 51:47
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَهْدَى إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم حُلَّةً سِيَرَاءَ فَلَبِسْتُهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَقْتُهَا بَيْنَ نِسَائِي.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி னார்கள். அதை நான் அணிந்துகொண் டேன். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர் களின் முகத்தில் கோபத்தைக் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.24 அத்தியாயம் :
ஹதீஸ் 2615 — Sahih al Bukhari #2615
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا فَقَالَ " وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا ". وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، إِنَّ أُكَيْدِرَ دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்துவந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்திய மாக! சொர்க்கத்தில் (தோழர்) சஅத் பின் முஆதுக்கு கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் இதைவிட அழகானவையாக இருக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :