Qurani·قرآني
தமிழ்

பரிசு மற்றும் அன்பளிப்பு (ஹிபா)

71 ஹதீஸ்கள் · #2566–2636

ஹதீஸ் 2626 — Sahih al Bukhari 51:58
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَنِي النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعُمْرَى جَائِزَةٌ ‏"‏‏.‏ وَقَالَ عَطَاءٌ حَدَّثَنِي جَابِرٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) செல்லும்.29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘‘ஜாபிர் (ரலி) அவர்களும் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2627 — Sahih al Bukhari 51:59
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ فَزَعٌ بِالْمَدِينَةِ فَاسْتَعَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَسًا مِنْ أَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ الْمَنْدُوبُ، فَرَكِبَ فَلَمَّا رَجَعَ قَالَ ‏ "‏ مَا رَأَيْنَا مِنْ شَىْءٍ، وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து யிமன்தூப்’ எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறிச் சென்றார்கள். திரும்பி வந்தபோது, ‘‘(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகவே நாம் இந்தக் குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2628 — Sahih al Bukhari 51:60
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَعَلَيْهَا دِرْعُ قِطْرٍ ثَمَنُ خَمْسَةِ دَرَاهِمَ، فَقَالَتِ ارْفَعْ بَصَرَكَ إِلَى جَارِيَتِي، انْظُرْ إِلَيْهَا فَإِنَّهَا تُزْهَى أَنْ تَلْبَسَهُ فِي الْبَيْتِ، وَقَدْ كَانَ لِي مِنْهُنَّ دِرْعٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمَا كَانَتِ امْرَأَةٌ تُقَيَّنُ بِالْمَدِينَةِ إِلاَّ أَرْسَلَتْ إِلَىَّ تَسْتَعِيرُهُ‏.‏
அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹங்கள் விலையுடைய கெட்டியான பருத்தி அங்கி ஒன்றை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘‘உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள்கூட வீட்டில் இ(ந்த அங்கி போன்ற)தை அணிய (பிடிக்காமல் இன்று) தயங்குகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இந்த அங்கிகளில் ஒன்று என்னிடம் (மட்டும்தான்) இருந் தது. அப்போது மதீனாவில் (மணமகனுக்காக) அலங்காரம் செய்யப்படும் எந்த மணப் பெண்ணும் அந்த அங்கியை இரவல் கேட்டு என்னிடம் ஆள் அனுப்பாமல் இருந்ததில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2629 — Sahih al Bukhari 51:61
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ نِعْمَ الْمَنِيحَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً، وَالشَّاةُ الصَّفِيُّ تَغْدُو بِإِنَاءٍ وَتَرُوحُ بِإِنَاءٍ ‏"‏‏.‏ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَإِسْمَاعِيلُ عَنْ مَالِكٍ قَالَ نِعْمَ الصَّدَقَةُ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகின்ற ஒட்டகம்தான் (அன்பளிப்புகளில்) சிறந்ததாகும். அதிகப் பால் தரும் ஆடும் (அன்பளிப்புகளில்) சிறந்தததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகின்றது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், யிதர்மங்களில் சிறந்ததாகும்’ என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹதீஸ் 2630 — Sahih al Bukhari 51:62
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْمَدِينَةَ مِنْ مَكَّةَ وَلَيْسَ بِأَيْدِيهِمْ ـ يَعْنِي شَيْئًا ـ وَكَانَتِ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ، فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ يُعْطُوهُمْ ثِمَارَ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ وَيَكْفُوهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ، وَكَانَتْ أُمُّهُ أُمُّ أَنَسٍ أُمُّ سُلَيْمٍ كَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، فَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِذَاقًا فَأَعْطَاهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدِ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا فَرَغَ مِنْ قَتْلِ أَهْلِ خَيْبَرَ فَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ، رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى أُمِّهِ عِذَاقَهَا، وَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ‏.‏ وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ أَخْبَرَنَا أَبِي عَنْ يُونُسَ بِهَذَا، وَقَالَ مَكَانَهُنَّ مِنْ خَالِصِهِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனா வுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துகளையும் வைத்திருந் தார்கள். எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களை (ஒரு குறிப்பிட்ட அளவு) தங்களுக்கு முஹாஜிர் கள் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி, முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். என் தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தம் அடிமைப் பெண்ணான, உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘அவற்றுக்குப் பதிலாக தமக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து...› என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2631 — Sahih al Bukhari 51:63
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرْبَعُونَ خَصْلَةً أَعْلاَهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ، مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ ‏"‏‏.‏ قَالَ حَسَّانُ فَعَدَدْنَا مَا دُونَ مَنِيحَةِ الْعَنْزِ مِنْ رَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ وَنَحْوِهِ، فَمَا اسْتَطَعْنَا أَنْ نَبْلُغَ خَمْسَ عَشْرَةَ خَصْلَةً‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்செயல்கள் நாற்பது உள்ளன. அவற் றில் ஒன்றை, அதன் நன்மையை எதிர் பார்த்தும், அதற்கென வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் செய்துவந்தால், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிக்காமல் இருப்பதில்லை. அவற்றில் மிக உயர்ந்தது, பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஹஸ்ஸான் பின் அ(த்)திய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவது நீங்கலாக (மற்ற நற்செயல்களை) நாங்கள் கணக்கெடுத்துப் பார்த்ததில், முகமனுக்கு (சலாமுக்கு) பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாங்கள் கண்டோம். ஆனால், இவ்வாறு பதினைந்து நற்செயல்களைக் கூட எங்களால் கணக்கில் காட்ட முடியவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 2632 — Sahih al Bukhari 51:64
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ لِرِجَالٍ مِنَّا فُضُولُ أَرَضِينَ فَقَالُوا نُؤَاجِرُهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالنِّصْفِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ ‏"‏‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘‘நாம் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘யிவிளைச்சல் நிலம் வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தமது நிலத்தைத் தம்மிடமே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :
ஹதீஸ் 2633 — Sahih al Bukhari 51:65
وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ ‏"‏ وَيْحَكَ إِنَّ الْهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَتُعْطِي صَدَقَتَهَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَهَلْ تَمْنَحُ مِنْهَا شَيْئًا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَتَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا ‏"‏‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கிராமவாசி ஒருவர் வந்து புலம் பெயர்தல் (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘யிஉனக்குக் கேடுதான்! ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்” என்று கூறினார். ‘‘அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம், (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். ‘‘(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக்கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (கொடுக்கிறேன்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கற(ந்து ஏழைகளுக்குக் கொடு)க்கின்றாயா?” என்று கேட்க அவர், ‘யிஆம்” என்று பதிலளித்தார். ‘‘அப்படி யாயின், ஊர்களுக்கு அப்பால் சென்று (கூட) நீ நற்செயல் புரியலாம். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று கூறினார்கள்.32 அத்தியாயம் :
ஹதீஸ் 2634 — Sahih al Bukhari 51:66
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ حَدَّثَنِي أَعْلَمُهُمْ، بِذَاكَ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى أَرْضٍ تَهْتَزُّ زَرْعًا فَقَالَ ‏"‏ لِمَنْ هَذِهِ ‏"‏‏.‏ فَقَالُوا اكْتَرَاهَا فُلاَنٌ‏.‏ فَقَالَ ‏"‏ أَمَا إِنَّهُ لَوْ مَنَحَهَا إِيَّاهُ كَانَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக்கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘‘இது யாருடைய நிலம்?” என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாட கையை (குத்தகையை) அவர் பெற்றுக் கொள்வதைவிட குத்தகைக்கு எடுத்த வருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி) இரவலாக (மனீஹா) கொடுத்துவிட்டிருந்தால், அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2635 — Sahih al Bukhari 51:67
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ، فَأَعْطَوْهَا آجَرَ، فَرَجَعَتْ فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً ‏"‏‏.‏ وَقَالَ ابْنُ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ فَأَخْدَمَهَا هَاجَرَ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். (எகிப்து நாட்டு மன்னனின்) ஆட்கள், சாராவுக்கு ஆஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். சாரா திரும்பிவந்து, ‘‘அல்லாஹ், அந்த இறைமறுப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘எகிப்து நாட்டு மன்னன், சாராவுக்கு ஆஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.