ஹதீஸ் 2636 — Sahih al Bukhari 51:68
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَسْأَلُ زَيْدَ بْنَ أَسْلَمَ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ".
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்தக் குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (‘‘அதை வாங்கலாமா?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :