ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உறங்க விரும்பினால் “பிஸ்மிக்கல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா” (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர்வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழுகிறபோது, “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ் வுக்கே! அவன் எங்களை இறக்கச்செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)” என்று கூறுவார்கள்.17 அத்தியாயம் :
ஹதீஸ் 6325 — Sahih al Bukhari 80:22
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ " اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ". فَإِذَا اسْتَيْقَظَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ".
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்: உயிர்வாழவும் செய்கிறேன்)” என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) விழிக்கும்போது, “அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டி னான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)” என்று கூறுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 6326 — Sahih al Bukhari 80:23
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي. قَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ ". وَقَالَ عَمْرٌو عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، إِنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم.
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: “தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓதவேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன். வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்பிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங் களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்.)18 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “மேலும், உங்கள் தொழுகையில் உங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடியுங்கள்” எனும் (17:110ஆவது) வசனம் பிரார்த்தனை (துஆ ஓதுவது) குறித்தே அருளப்பெற்றது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் தொழுகையில் (அமர்வில்) “அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்” (அல்லாஹ்வுக்கு சாந்தியுண்டாகட்டும்; இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் எங்களிடம், “நிச்சயமாக அல்லாஹ்வே ‘சலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால், “அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிப் பாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்” (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் வளமும் உண்டாகட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறியதாகும். மேலும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு. வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிகூறுகிறேன்)” என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம் என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் (சிலர்), “அல்லாஹ்வின் தூதரே! வசதி படைத்தோர் (உயர்) தகுதிகளையும் (சொர்க்கத்தின்) நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டுபோய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது எவ்வாறு?” என்று கேட்டார்கள். “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். (அறவழியில்) நாங்கள் போரிடுவதைப் போன்றே அவர்களும் போரிடுகின்றனர். தங்களது அதிகப்படியான செல்வங்களை (நல்வழியில்) செலவிடுகின்றனர். ஆனால், (அவ்வாறு செலவிட) எங்களிடம் பொருள்களேதும் இல்லையே?” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்பவரைத் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்,) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்து முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், பத்து முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், பத்து முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும் கூறுங்கள்” என்று சொன்னார்கள்.20 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப் யான் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சலாம் கொடுத்த வுடன் (பின்வருமாறு) கூறுவார்கள்: லா இலாஹ இல்லல்லாஹு. வஹ்தஹு. லா ஷரீக்க லஹு. லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த. வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது.)21 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரரிடம்), “ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடிக்காட்டமாட்டீர்களா?” என்று கூறினார். உடனே (கவிஞர்) ஆமிர் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காக (பின்வரும் ஈரிசைச்சீர் வகைக் கவிதைகளைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லையென்றால் நாங்கள் நல்வழி பெற்றிருக்கமாட்டோம்...” என்று (தொடங்கும் பாடல்களைப்) பாடினார்கள். -அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் இஃதல்லாத மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டார்கள். ஆனால், நான் அதை மனனம் செய்யவில்லை.- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டகவோட்டி?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அவர் (நீண்ட காலம் உயிர்வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார். பிறகு மக்கள் அணிவகுத்து நின்று எதிரிகளுடன் போரிட்டனர். அப்போது தமது வாளின் மேற்பகுதியினாலேயே (முழங்காலில்) காயமேற்பட்டு ஆமிர் (ரலி) அவர்கள் இறந்துபோனார்கள். (கைபர் வெற்றி கொள்ளப்பட்ட அன்று) மாலையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டியி ருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக் கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைச் சமைப்ப தற்காக” என்று மக்கள் பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பாத்திரங்களில் உள்ளவற் றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங் களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! பாத்திரங்களில் உள்ளவற்றைக் கொட்டி விட்டுப் பாத்திரங்களைக் கழுவி(வைத்து)க்கொள்ளலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 6332 — Sahih al Bukhari 80:29
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةٍ قَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ ". فَأَتَاهُ أَبِي فَقَالَ " اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى ".
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால், “இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள்) தமது ஸகாத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஅவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.24 அத்தியாயம் :
ஹதீஸ் 6333 — Sahih al Bukhari 80:30
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جَرِيرًا، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ ". وَهْوَ نُصُبٌ كَانُوا يَعْبُدُونَهُ يُسَمَّى الْكَعْبَةَ الْيَمَانِيَةَ. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَصَكَّ فِي صَدْرِي فَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ". قَالَ فَخَرَجْتُ فِي خَمْسِينَ مِنْ أَحْمَسَ مِنْ قَوْمِي ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ فَانْطَلَقْتُ فِي عُصْبَةٍ مِنْ قَوْمِي ـ فَأَتَيْتُهَا فَأَحْرَقْتُهَا، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا أَتَيْتُكَ حَتَّى تَرَكْتُهَا مِثْلَ الْجَمَلِ الأَجْرَبِ. فَدَعَا لأَحْمَسَ وَخَيْلِهَا.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம், “துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார் கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்த) ஒரு பலிபீடமாகும். அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அது ‘யமன் நாட்டு கஅபா’ என அழைக் கப்பட்டுவந்தது. நான், “அல்லாஹ்வின் தூதரே! குதிரையில் நான் சரியாக உட்கார முடியாதவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்துவிட்டு, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். இதையடுத்து என் சமுதாயத்தாரான ‘அஹ்மஸ்’ குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்.- பிறகு, நான் ‘துல்கலஸா’ சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்குபிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளம் வேண்டிப்) பிரார்த்தித் தார்கள்.25 அத்தியாயம் :