حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " انْطَلِقُوا إِلَى يَهُودَ ". فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ الْمِدْرَاسِ فَقَالَ " أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلاَّ فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (தமது அறை’லிருந்து) வெளியே வந்து, ‘‘யூதர்களை நோக்கி நடங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று யிபைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம்.15 அப்போது நபியவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும், பூமி அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு, (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்றுவிடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்துவிடும் அளவுக்கு அழுதார்கள். நான், ‘‘இப்னு அப் பாஸ் (ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(அன்றுதான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை கடுமையானது. அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தோள்பட்டை எலும்பு ஒன்றைக் கொண்டுவாருங்கள். உங்க ளுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள்.17 ஆனால், ஓர் இறைத்தூதர் அருகில் சச்சரவிட்டுக்கொள்ளல் தகாத செயலாகும். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்களா? அவர் களிடமே (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது” என்று கூறிவிட்டு மூன்று விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்: (அந்த மூன்று விஷயங்களாவன:) இணைவைப்பாளர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றிவிடுங்கள். நான் (வெளிநாட்டிலிருந்து வரும்) தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கிவாருங்கள்.18 (அறிவிப்பாளர்தொடர்ந்து கூறுகிறார்:) மூன்றாவது கட்டளை ஒன்று, நபி (ஸல்) அவர்கள் சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டிருக்க வேண்டும்; அல்லது அதை அவர்கள் கூறி (இந்நிகழ்ச்சியை எனக்கு அறிவித்தவரும் கூறி) நான் அதை மறந்துவிட்டிருக்க வேண்டும். (எப்படியாயினும், மூன்றாவதும்) ஒரு நல்ல விஷயம் தான். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘இப்படிச் சொன்ன அறிவிப்பாளர், சுலைமான் பின் அபில்முஸ்லிம் அல் அஹ்வல் (ரஹ்) அவர்கள்தான்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3169 — Sahih al Bukhari 58:11
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم شَاةٌ فِيهَا سُمٌّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اجْمَعُوا إِلَىَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ ". فَجُمِعُوا لَهُ فَقَالَ " إِنِّي سَائِلُكُمْ عَنْ شَىْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ ". فَقَالُوا نَعَمْ. قَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ أَبُوكُمْ ". قَالُوا فُلاَنٌ. فَقَالَ " كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ ". قَالُوا صَدَقْتَ. قَالَ " فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ " فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا. فَقَالَ لَهُمْ " مَنْ أَهْلُ النَّارِ ". قَالُوا نَكُونُ فِيهَا يَسِيرًا ثُمَّ تَخْلُفُونَا فِيهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا ـ ثُمَّ قَالَ ـ هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَىْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ ". فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ " هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا ". قَالُوا نَعَمْ. قَالَ " مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ ". قَالُوا أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப் பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.19 (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயுள்ள யூதர்களை எனக்காக ஒன்றுகூட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்றுகூட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், ‘‘சரி (உண்மை சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘நீங்கள் சொன்னது உண்மைதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே அதையும் அறிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நரகவாசிகள் யார்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் நுழைவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்குப் பதிலாக ஒருபோதும் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி, அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 3170 — Sahih al Bukhari 58:12
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ الْقُنُوتِ. قَالَ قَبْلَ الرُّكُوعِ. فَقُلْتُ إِنَّ فُلاَنًا يَزْعُمُ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ، فَقَالَ كَذَبَ. ثُمَّ حَدَّثَنَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ ـ قَالَ ـ بَعَثَ أَرْبَعِينَ أَوْ سَبْعِينَ ـ يَشُكُّ فِيهِ ـ مِنَ الْقُرَّاءِ إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، فَعَرَضَ لَهُمْ هَؤُلاَءِ فَقَتَلُوهُمْ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَهْدٌ، فَمَا رَأَيْتُهُ وَجَدَ عَلَى أَحَدٍ مَا وَجَدَ عَلَيْهِمْ.
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் ஓதப்படும்) யிகுனூத்’ எனும் சிறப்பு துஆ பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)” என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறித்து, ‘‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளை’ன ருக்கு எதிராக ஒரு மாதம் ருகூஉக்குப் பின் யிகுனூத்’ ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைப்பாளர்கள் சிலரிடம் அனுப்பிவைத்தார்கள் லிஎன்று (அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்லி அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். அப்போது பனூ சுலைம் குலத்தாருக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஆகவே, அவர்கள்மீது கோபமடைந்ததைப் போன்று வேறெவர்மீதும் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்த தில்லை.21 அத்தியாயம் :
உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)22 அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘யார் அது?” என்று கேட்டார் கள். நான், ‘‘அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், ‘‘உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)” என்று சொன்னார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரைலி ஹுபைராவின் மகனான இன்னாரைலி தாம் கொல்லப்போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.23 அத்தியாயம் :
யஸீத் பின் ஷரீக் அத் தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, நாங்கள் வாசிக்கின்ற புத்தகம் வேறெதுவும் எங்களிடம் இல்லை. இந்த ஏட்டில் காயங் களுக்கான பழிவாங்கல்கள் (ஸகாத்தாகவும் உயிரீட்டுத் தொகையாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. ‘‘மேலும், (அதில் கூறப்பட்டுள்ள தாவது:) மதீனா நகரம் ‘அய்ர்’ மலைக்கும் (உஹுத் மலை அமைந்துள்ள) இன்ன இடத்திற்கும் இடையிலுள்ள பகுதிவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறாரோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்குப் புகலிடம் கொடுக்கின்றாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடோ கூடுதல் வழிபாடோ எதுவும் ஏற்கப்படாது. ‘‘விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த) எஜமானர்கள் அல்லாத வேறொருவரை எஜமானர்களாக்கிக்கொண்டால், அவன் மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும். முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கின்றானோ அவன்மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும்.24 அத்தியாயம் :
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்களான) அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அவர்களிடம் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். பிறகு மதீனா வந்தார்கள். அப்போது (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (அவருடைய சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பெரியவர்களைப் பேச விடு. பெரியவர் களைப் பேச விடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை இன்னார்தான் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்துப் பழிவாங்கிக்கொள்ளும்) உரிமை பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்? நாங்கள் அங்கே (கொலை நடந்த இடத்தில்) இருக்கவில்லை; கொலை செய்தவனை (கொலை செய்யும்போது) பார்க்கவும் இல்லையே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், யூதர்கள் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்பதற்கு) ஐம்பது பேர் சத்தியம்செய்து உங்களிடம் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கட்டும்!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘இறைமறுப்பாளரான சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) எடுத்துக்கொள்வது?” என்று கேட்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், தாமே (அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான) உயிரீட்டுத் தொகையை (அவரது சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் பின் ஹர்ப் அவர்கள், (தாம் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு) ஷாம் (சிரியா) நாட்டிற்கு குறைஷியரின் வணிகக் குழு ஒன்றில் சென்றிருந்தபோது (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ் தமக்கு ஆளனுப்பி தமது அவைக்கு வரச் சொன்னதாகவும், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷி இறை மறுப்பாளர்கள் தொடர்பாகத் தம்முடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடந்ததாகவும் அறிவித் தார்கள்.29 அத்தியாயம் :
ஹதீஸ் 3175 — Sahih al Bukhari 58:17
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُحِرَ حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு தடவை) சூனியம் செய்யப்பட்டது. அதன் வாயி லாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்ததாக அவர்கள் எண்ணிக்கொள்ளும் படி அவர்களுக்குப் பிரமையூட்டப்பட் டது.30 அத்தியாயம் :
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக்கொள்” என்றார்கள்: 1. எனது மரணம். 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு ஏற்படும் (ஒரு வகை) நோயைப் போன்ற கொள்ளை நோய் உங்களைப் பீடித்தல். (அதனால் ஏராளமானவர்கள் இறந்துபோய் விடுவார்கள்.) 4. பிறகு செல்வம் பெருகி வழியும். எந்த அளவுக்கென்றால் ஒரு வருக்கு நூறு பொற்காசுகள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 6. பிறகு உங்களுக்கும் (கிழக்கு ரோமானியரான) மஞ்சள் நிறத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்துவிடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.31 அத்தியாயம் :