அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில ளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும், அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினர். வேறுசிலர், “நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மை பாழ்படுத்தப் பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்க்கலாம்” என்று சொன்னார்கள். அவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களை விடப் பிந்தி வந்துகொண்டிருந்தார்கள். (அஸ்ர்) தொழுகையின் நேரம் எங்களை அடைந்துவிட்ட நிலையில், நாங்கள் அங்கத்தூய்மை (உளூ) செய்துகொண்டி ருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களை(ச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி) தட(வுவதைப் போன்று கழு)வலானோம். (அதைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்கள், “குதிகால்(களைச் சரியாகக் கழுவாதவர்)களுக்கு நாசம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைத் தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங்கள் (ஹத்திஸூனீ)?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங் களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால், (மூத்தவர் கள் அமைதியாய் இருக்கும் அந்த அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்டுக்கொண்டு (மௌனமாக) இருந்துவிட்டேன். பின்னர் மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் (ஹத் திஸ்னா), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பேரீச்ச மரம்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங் கள்? (ஹத்திஸூனீ)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்ச மரம்தான் என்று என் மனதில் பட்டது. பின்னர் மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் (ஹத்திஸ்னா), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 63 — Sahih al Bukhari 3:5
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ ـ هُوَ الْمَقْبُرِيُّ ـ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ. فَقُلْنَا هَذَا الرَّجُلُ الأَبْيَضُ الْمُتَّكِئُ. فَقَالَ لَهُ الرَّجُلُ ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " قَدْ أَجَبْتُكَ ". فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ فَلاَ تَجِدْ عَلَىَّ فِي نَفْسِكَ. فَقَالَ " سَلْ عَمَّا بَدَا لَكَ ". فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ، آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ " اللَّهُمَّ نَعَمْ ". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ " اللَّهُمَّ نَعَمْ ". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ قَالَ " اللَّهُمَّ نَعَمْ ". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اللَّهُمَّ نَعَمْ ". فَقَالَ الرَّجُلُ آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. رَوَاهُ مُوسَى وَعَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنْ سُلَيْمَانَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந் திருந்தபோது, ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளிவாச(லின் வாயி)லில் ஒட்டகத் தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங் காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?” என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர்தான்” என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ‘அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்று அழைத்தார். அதற்கு நபியவர்கள் “உமது அழைப்பை ஏற்றேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்; கேள்வியில் கடுமை காட்டப்போகிறேன். அதற்கு நீங்கள் என்மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உமது மனதில் பட்டதைக் கேளும்” என்றார்கள். அப்போது அம்மனிதர், “உம்முடைய, உமக்குமுன் இருந்தவர்களுடைய இறைவன்மீது ஆணையாகக் கேட்கி றேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பி னானா?” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள். அடுத்து அவர் “அல்லாஹ்வை முன் வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகை களை நாம் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டி ருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள். அவர் “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த (ரமளான்) மாதத்தில் நாம் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள். அவர், “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்களில் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர், “நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டுவந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு, “நான், என் கூட்டத்தாரில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவன் ஆவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரில் ஒருவரான ளிமாம் பின் ஸஅலபா” என்றும் கூறினார். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 64 — Sahih al Bukhari 3:6
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بِكِتَابِهِ رَجُلاً، وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ. فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيَّبِ قَالَ فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு) தாம் எழுதிய கடிதத்தை ஒரு மனிதர் மூலம் அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அம் மனிதர் பஹ்ரைன் ஆளுநரிடம் ஒப்படைத்தார்.) அவர் அதை கிஸ்ரா (குஸ்ரூ) இடம் ஒப்படைத்தார். அதைக் கிஸ்ரா படித்ததும் (கோபப்பட்டு) (துண்டு துண்டாகக்) கிழித்துப் போட்டுவிட்டான். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “(இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக் கெதிராகப் பிரார்தித்தார்கள்” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானிய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து) கடிதம் ஒன்றை ‘எழுதச் சொன்னார்கள்’ அல்லது ‘எழுத விரும்பினார்கள்’. அப்போது “அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள்” என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித் துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களது கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. (இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (எனக்கு இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடம், “அ(ந்த மோதிரத்)தில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று பொறிக்கப்பட்டிருந்ததாக (தங்க ளிடம்) யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அனஸ் (ரலி) அவர்கள் தான்’ என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 66 — Sahih al Bukhari 3:8
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ".
அபூவாக்கித் (ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ - ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் அமர்ந்திருந்தபோது, மூன்று பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிவாசலுக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது, அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்: இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே, அல்லாஹ் வும் அவரிடம் வெட்கப்பட்டுக்கொண் டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான். அத்தியாயம் :
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல் ஹாரிஸ்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களைப் பற்றிக் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது ‘மினா’வில் துல்ஹஜ் பத்தாம் நாள்) ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். நபி (ஸல்) அவர்கள், “உங்களது புனித மிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ, அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் பொருட்களும் உங்கள் மானங்களும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்” என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில், இங்கு வந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக்கூடும்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 68 — Sahih al Bukhari 3:10
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சி (தொடர்ச்சியாக இல்லாமல்) பல்வேறு நாட்களில் (விட்டு விட்டு) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந் தார்கள். அத்தியாயம் :