حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்க ளைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப் பேற்றிடாதீர்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறிவந் தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “உங்களைச் சலிப்படை யச் செய்துவிடுவேனோ என்று நான் அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நாங்கள் சலிப்படை வதை அஞ்சி (நிலைமை அறிந்து) பக்குவ மாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறிவந்ததைப் போன்றே, உங்களுக்கும் பக்குமாக நான் அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தார் (இடையே ஒரு குழுவினர்) இறைக் கட்டளைமீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மாறு செய்வோர் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. (அவர்கள் இதே நிலையில் இருக்க) அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.10 இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 72 — Sahih al Bukhari 3:14
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ لِي ابْنُ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْمَدِينَةِ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ حَدِيثًا وَاحِدًا، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُتِيَ بِجُمَّارٍ فَقَالَ " إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً مَثَلُهَا كَمَثَلِ الْمُسْلِمِ ". فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ فَسَكَتُّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هِيَ النَّخْلَةُ ".
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் மதீனாவரை சென்றேன். (அப்பய ணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை; ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:) (ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்ச மரக் குருத்தொன்று கொண்டுவரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “மரங்களில் ஒரு வகை மரம் உள்ளது; அது முஸ்லிமுக்கு உதாரணமாகும் (அது என்ன மரம்?)” என்று கேட்டார்கள். “அது பேரீச்ச மரம்தான்” என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்துவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள்.11 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; இன்னொரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும் (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.13 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மூசா (அலை) அவர்கள் (சந்தித்த அந்த) நண்பர் யார் என்பது தொடர்பாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல் ஃபஸாரீ (ரலி) அவர்களும் விவாதித்துக் கொண்டனர். “அவர் ‘களிர்’ (அலை) அவர்கள்தான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் வேறொரு மனிதர் என்றார்கள்.) அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எந்த நண்பரைச் சந்திக்க (அல்லாஹ்விடம்) வழி கேட்டார்களோ அந்த நண்பர் (யார் என்பது) தொடர்பாக) விவாதித்துக் கொண்டோம். அவர் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் எதுவும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தாரின் (பிரமுகர் கள்) கூட்டம் ஒன்றில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், “உங்களை விட அதிகமாக அறிந்தவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “(அப்படி யாரும் இருப்பதாக) எனக்குத் தெரிய வில்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ், “அப்படியல்ல; நம் அடியார் ‘களிர்’ (உங்களைவிட அறிந்தவராக) இருக்கிறார்” என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக் கும் வழி என்னவென்று (அல்லாஹ்விடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், மூசா (அலை) அவர்களுக்கு மீனை அடையாளமாக்கி னான். “இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும். அங்கு அவரை நீர் சந்திப்பீர்” என்று சொல்லப்பட்டது. அவ்வாறே, மூசா (அலை) அவர்கள் கடலில் மீன் (தொலைந்து போனபின் அதன்) சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள். அதாவது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர், “நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தோம் பார்த்தீர்களா? அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவற விட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் (பாதச்) சுவடுகளைத் தேடித் திரும்பிச் சென்றார்கள்; அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது வேதத்தில் (18:60-82) எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்தியாயம் :
ஹதீஸ் 75 — Sahih al Bukhari 3:17
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து, “இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் (போன்ற தடுப்பு) எதை யும் முன்னோக்காதவர்களாக (திறந்த வெளியில் மக்களுக்கு)த் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன். -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதிக்கு முன்னால் நான் கடந்து சென்று, கழுதையை மேய விட்டுவிட்டு, (தொழுவோரின்) வரிசையில் நானும் நின்றுகொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையைக் கடந்துசென்ற)தற்காக என்மீது ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 77 — Sahih al Bukhari 3:19
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ عَقَلْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ.
மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஐந்து வயது சிறுவனாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து சேந்திய) ஒரு வாளியிலி ருந்து (தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன். அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல் ஃபஸாரீ (ரலி) அவர்களும் மூசா (அலை) அவர்கள் (சந்தித்த அந்த) நண்பர் யார் என்பது தொடர்பாக விவாதித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எந்த நண்பரைச் சந்திக்க (அல்லாஹ்விடம்) வழி கேட்டார்களோ அந்த நண்பர் (யார் என்பது) தொடர்பாக விவாதித்துக்கொண் டோம். அவர் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதுவும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “ஆம்; நபி (ஸல்) அவர்கள் அவர் தொடர்பாக (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தாரின் (பிரமு கர்கள்) கூட்டம் ஒன்றில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், “உங்களைவிட அதிகமாக அறிந்தவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள் “(அப்படி யாரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ் “அப்படியல்ல; நம் அடியார் ‘களிர்’ (உங்களைவிட அறிந்தவராய்) இருக்கிறார்” என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று (இறைவனிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு மீனை அடையாளமாக்கினான். “இந்த மீனை எங்கே தொலைத்துவிடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும். அங்கு அவரை நீர் சந்திப்பீர்” என்று சொல்லப்பட்டது. அவ்வாறே, மூசா (அலை) அவர்கள் கடலில் மீன் (தொலைந்து போனபின் அதன்) சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள். அதாவது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர், “நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தோமல்லவா? அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதைக் கூற விடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதைத்தான் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் தம் (பாதச்) சுவடுகளைத் தேடித் திரும்பிச் சென்றார் கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு அல்லாஹ் தனது வேதத்தில் (18:60-82) எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.16 அத்தியாயம் :