உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்துவந்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (வஹீ) உள்ளிட்ட அன்றைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டுவந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அவ்வாறே, அவர் சென்று வரும் போதும் அதைப் போன்றே செய்வார். (ஒரு நாள்) தம்முடைய முறை வந்தபோது, என் அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி னார். “அவர் (உமர்) அங்கே இருக்கி றாரா?” என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி வெளியே வந்தேன். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) “ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டிருக்கிறது” என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுதுகொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “எனக்குத் தெரியவில்லை” என்றார். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “நீங்கள் உங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று நின்றுகொண்டே கேட்டேன். நபியவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உடனே நான் ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக்கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையை அடைந்துகொள்ள முடிவதில்லை” என்று கூறினார். (இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) முன் எப்போதும் நான் கண்டிராத அளவுக்குக் கடும் கோபத்தை அன்றைய உரையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் கண்டேன். (அவ்வுரையில்) “மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாகவே உள்ளீர்கள். யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினா லும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க் கட்டும். ஏனெனில், (தொழவந்த) மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் முடிச்சை’ அல்லது ‘அதன் பையையும் அதன் உறையையும்’ (அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி (மக்களுக்கு) அறிவிப்புச் செய். அதற்குப் பிறகு அதை நீ பயன் படுத்திக்கொள். அதன் உரிமையாளர் வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு” என்றார்கள். “அப்படியானால் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)?” என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக் கென்றால், ‘அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு, “அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர் பையும் அதன் கால் குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்குச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்துகொள்கிறது. எனவே, அதை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும்வரை (அதன் போக்கில்) விட்டுவிடு” என்று கூறினார்கள். “அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது உனக்கு உரியது; அல்லது (உரிமை யாளரோ மற்றவரோ அதைப் பிடித்தால் அது) உம்முடைய அந்தச் சகோதரருக் குரியது. (அவ்வாறு யாருமே அதைப் பிடித்துச் செல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. இவ்வாறு அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர்கள் கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் “நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உன் தந்தை” என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து “என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்க, “உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த ‘சாலிம்’ தான்” என்றார்கள். (இம்மாதிரியான கேள்விகளால்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய் யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகி றோம்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 93 — Sahih al Bukhari 3:35
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ مَنْ أَبِي فَقَالَ " أَبُوكَ حُذَافَةُ ". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ " سَلُونِي ". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا، فَسَكَتَ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது, (மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்படும் விதத்தில் கேள்விக்குமேல் கேள்வி கேட்டனர். அப்போது) அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார். “ஹுதாஃபாதான் உன் தந்தை” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு “என்னிடம் கேளுங்கள்” என்று அடிக்கடி கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) முழங்கால்களில் மண்டியிட்டு அமர்ந்து, “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 94 — Sahih al Bukhari 3:36
حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினால், மூன்று முறை கூறுவார்கள்; ஒரு விஷயத்தைச் சொன்னால், அதை மூன்று முறை (திரும்பச்) சொல்வார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத் தைச் சொன்னால், தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற் காக மும்முறை அதைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை முகமன் (சலாம்) சொல்வார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து)கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “குதிகால்க(ளைச் சரியாகக் கழுவாதவர்க)ளுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 97 — Sahih al Bukhari 3:39
أَخْبَرَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا صَالِحُ بْنُ حَيَّانَ، قَالَ قَالَ عَامِرٌ الشَّعْبِيُّ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ، وَآمَنَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ {يَطَؤُهَا} فَأَدَّبَهَا، فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ ". ثُمَّ قَالَ عَامِرٌ أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَىْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத் தில்) இரட்டை நன்மைகள் கிடைக்கும். 1. வேதக்காரர்களில் ஒருவர், தம் (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதர்மீதும் (இறுதித் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார். 2. ஓர் அடிமை, அல்லாஹ்வின் கடமைகளையும் தம் உரிமையாளரின் கடமைகளையும் நிறைவேற்றினான். 3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து, அவளை அவரே மணந்தும்கொண்டார். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.) இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த ‘குராசான்’வாசி ஒருவரிடம்), “(சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நாம் உங்களுக்கு வழங்கியிருக் கிறோம். இதைவிடச் சிறிய பிரச்சினை களுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டது உண்டு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 98 — Sahih al Bukhari 3:40
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ. وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றி விட்டு) பெண்கள் செவியுறும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்கள் இருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார் கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நான் உறுதியளிக்கிறேன்’ என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா, அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘நான் உறுதியளிக்கி றேன்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப் பட்டுள்ளது. அத்தியாயம் :