அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. (அதாவது நான் கேட்டேன்.) அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் (ஹதீஸ்)மீது உமக் கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என நான் எண்ணி யிருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார் எனில், உளப்பூர்வமாக தூய எண்ணத்துடன் யார் ‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தான்” என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள்.23 இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு சமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(நாங்கள் தங்களை அணுகி விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்க ளிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை நீங்களே ஒதுக்குங்கள்” எனக் கேட்டுக் கொண் டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக்) கட்டளைகளை வலியுறுத்தினார்கள். பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னவற்றில் இதுவும் அடங்கும்: “உங்களில் எந்தப் பெண் (தனது மரணத்திற்கு) முன்பாகத் தன் குழந்தைகளில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி, ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) இரண்டு, குழந்தைகளை இழந்து விட்டாலும்தான்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்து விட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்)” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 103 — Sahih al Bukhari 3:45
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ إِلاَّ رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حُوسِبَ عُذِّبَ ". قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَ لَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} قَالَتْ فَقَالَ " إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ، وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ ".
இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால், அதை அவர்கள் (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யார் (மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் (குர்ஆனில்) “வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச்சீட்டு வழங்கப் பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:7,8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன்) சமர்ப்பிக் கப்படுவதுதான். ஆனால், துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்துபோவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரங்களை வெட்டுவதோ அனுமதிக்கப் படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒரு பகல் பொழுது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை” என்று சொல்லி விடுங்கள். “எனக்குக்கூட (நேற்றைய) பகல் பொழுது மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதியளித்தான். நேற்று இருந்ததைப் போன்றே, இன்று அதன் புனிதம் திரும்ப வந்து விட்டது. (நாம் சொன்ன விஷயங் கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர் கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடிவந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது” என்று அம்ர் கூறினார் என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 105 — Sahih al Bukhari 3:47
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، ذُكِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ " فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ ـ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الْغَائِبَ ". وَكَانَ مُحَمَّدٌ يَقُولُ صَدَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ ذَلِكَ " أَلاَ هَلْ بَلَّغْتُ " مَرَّتَيْنِ.
அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) “...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனித மிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனித மிக்கவை ஆகும். அறிந்துகொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர் களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லி விடட்டும்!” என்று கூறினார்கள். மேலும், “(மக்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்துவிட்டேனா?” என்று இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அபூபக்ரா (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸை செவியுற்ற அவர்களின் புதல்வர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள், “(‘உங்கள் உடைமைகளும்’ என்பதற்கு அடுத்து) ‘உங்கள் மானங் களும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே (வந்தவர்கள் வராதவர் களுக்குச் சொல்லும் பணி) நடந்தது” என்று (இந்த நபிமொழியை அறிவித்தபின்) கூறுவது வழக்கம். அத்தியாயம் :
ஹதீஸ் 106 — Sahih al Bukhari 3:48
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் சொல்லாததை நான் சொன்னதாக) என்மீது பொய் உரைக்காதீர்கள். ஏனெனில், என்மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.24 இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(தந்தையே!) உங்களைப் போன்று (நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னவர் இன்னவரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக ஹதீஸ்) அறிவிப்பதைப் போன்று, தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்?” என்று கேட்டேன். அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், “(மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும் பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், ‘என்மீது யார் பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (அதனால்தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை)” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 108 — Sahih al Bukhari 3:50
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ أَنَسٌ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَعَمَّدَ عَلَىَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறியதுதான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துவிட்டது. அத்தியாயம் :