حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும். இதை சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக்கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற) எனது குறிப்புப்பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக்கொள்ளாதீர்கள். கனவில் யார் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும், என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ் - ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம், “(நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களி டம் எழுதப்பட்ட ஏடு ஏதேனும் உள்ளதா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “(குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் வேதத்தையும், (குர்ஆனி லிருந்து) ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, வேறு எதுவும் (எங்களிடம்) இல்லை” என்றார்கள். நான் “இந்த ஏட்டில் என்ன இருக் கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டங்கள்), போர்க் கைதிகளை (எதிரியிட மிருந்து) விடுவித்தல், இறைமறுப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது (என்பவை இதில் உள்ளன)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில்) தம் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரை ‘குஸாஆ’ குலத்தார் கொலை செய்துவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது ஊர்தியில் ஏறி (அமர்ந்து), உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “இந்த(ப் புனித மக்கா) நகரைவிட்டு ‘யானைப் படையை’ அல்லது ‘கொலையை’ அல்லாஹ் தடுத்துவிட்டான். மக்காவாசிகள்மீது அல்லாஹ் தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக் கும் அதிகாரம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்ட தில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போர் புரியவே அனுமதி கிடைத்தது. எச்சரிக்கை! இங்கு போர் செய்வது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப் படக் கூடாது; இங்குள்ள மரம் வெட்டப் படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) அறிவிப்புச் செய்பவரைத் தவிர (வேறு யாரும்) எடுக்கக் கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப் பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரு யோசனைகளில் சிறந்ததைத் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித்தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக்கொடுங்கள்” என்றார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லுக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘இத்கிர் புல்லைத் தவிர’ என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்தில் சில பிரதிகளில் உள்ள ‘அய்யுஃபாத’ எனும் சொல்) ‘அய்யுகாத’ என்றும் வாசிக்கப்படுகிறது. என்னிடம், “(அபூஷாஹ் எனும்) அவருக்கு எதை எழுதிக்கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?” என்று கேட்கப்பட்டது. நான், “நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரையைத்தான் (எழுதித் தரச்சொன்னார்கள்)” என்று பதிலளித்தேன். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாரும் என்னைவிட அதிகமான நபி மொழிகளை அறிவிக்கவில்லை; அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களி டம் இருந்த (அதிகமான) நபிமொழி களைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக்கொள்வார் கள். நான் (நினைவில் வைத்துக்கொள் வேனே தவிர) எழுதி வைத்துக்கொண்ட தில்லை. இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 114 — Sahih al Bukhari 3:56
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَجَعُهُ قَالَ " ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبُ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ ". قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ. قَالَ " قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ ". فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ كِتَابِهِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (இறப்பு நெருங்கி, நோயின்) வேதனை அதிகமான போது, “என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவேமாட்டீர்கள்” என்றார்கள். (நபி அவர்களின் வேதனையை அறிந்த) உமர் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; (அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.) நம்மிடம்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும்” என்றார்கள். உடனே (அங்கிருந்த மக்கள்) கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது” என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான உபைதுல் லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் மத்தி யில் குறுக்கீடு ஏற்பட்டதே சோதனையி லும் பெரும் சோதனையாகும்” என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித் தெழுந்து, “அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தான் என்ன! (இன்றிரவு) திறந்து விடப்பட்ட கருவூலங்கள்தான் என்ன!” என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை கருத்தில் கொண்டு) “இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள். (அவர்கள் அல்லாஹ்வை வழிபடட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளின் இறுதிக் காலத்தில் (ஒரு நாள்) எங்களுக்கு இஷா தொழுகை நடத்தி னார்கள். சலாம் கொடுத்து முடித்ததும் எழுந்து நின்று, “உங்களது இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றி லிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின்மேல் இருக்கக்கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.26 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 117 — Sahih al Bukhari 3:59
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ، ثُمَّ جَاءَ إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ " نَامَ الْغُلَيِّمُ ". أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ـ أَوْ خَطِيطَهُ ـ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர் களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷா தொழுவித்துவிட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (தம் குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு) உறங்கினார்கள். பின்னர் எழுந்து “சின்னப் பையன் தூங்கிவிட்டானா?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு, மீண்டும் (தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன். உடனே என்னை தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு, (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். பிறகு அவர்களின் குறட்டை சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பிறகு (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அபூஹுரைரா அதிகமாக நபிமொழி களை அறிவிக்கிறார்” என்று மக்கள் (குறையாகக்) கூறுகிறார்கள். அல்லாஹ் வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையாயின், நான் ஒரு நபி மொழியைக்கூட அறிவித்திருக்கமாட் டேன். அந்த வசனங்கள் வருமாறு: நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகு அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர். எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணை யாளனும் ஆவேன். (2:159,160) நம் முஹாஜிர் (மக்கா) சகோதரர்களின் கவனத்தை, கடைவீதிகளில் அவர்கள் செய்துவந்த வியாபாரம் ஈர்த்துக்கொண்டது. நம் அன்சாரி (மதீனா) சகோதரர்களின் கவனத்தை, அவர்களின் (விளைநிலம் போன்ற) செல்வங்களைப் பராமரிக்கும் பணி ஈர்த்துக்கொண்டது. ஆனால், (இந்த) அபூஹுரைராவோ வயிறு நிரம்பினால் போதுமென்ற திருப்தி யுடன் (வேறு அலுவல்களில் கவனம் செலுத்தாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டி ருந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மற்றவர்கள் ஆஜராகாத இடங்களிலெல்லாம் நான் ஆஜராகி விடுவேன்; மற்றவர்கள் மனனம் செய்யாத வற்றையெல்லாம் நான் மனனம் செய்து கொண்டிருந்தேன். அத்தியாயம் :