கடன், கடன் தீர்த்தல், சொத்து முடக்கம், திவாலு (கர்ள்)
25 ஹதீஸ்கள் · #2385–2409
ஹதீஸ் 2385 — Sahih al Bukhari 43:1
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كَيْفَ تَرَى بَعِيرَكَ أَتَبِيعُنِيهِ ". قُلْتُ نَعَمْ. فَبِعْتُهُ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ غَدَوْتُ إِلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம் (விற்றுவிடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கே அதை விற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 2386 — Sahih al Bukhari 43:2
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகம் (சலம்) செய்யும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவ தாகக்) கூறி உணவு தானியத்தை விலைக்கு வாங்கினார்கள். அவரிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2387 — Sahih al Bukhari 43:3
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, ‘‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்குமேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற் பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள், யிஇப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன்பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், ‘‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘‘நீ இங்கேயே இரு” என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் (நபி (ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு” என்று கூறியது என் நினைவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்ட குரல் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ‘‘உம்முடைய சமுதாயத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று கூறினார்கள். நான், ‘‘இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும் திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஆம், (அவரும்தான் சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2389 — Sahih al Bukhari 43:5
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا، مَا يَسُرُّنِي أَنْ لاَ يَمُرَّ عَلَىَّ ثَلاَثٌ وَعِنْدِي مِنْهُ شَىْءٌ، إِلاَّ شَىْءٌ أُرْصِدُهُ لِدَيْنٍ ". رَوَاهُ صَالِحٌ وَعُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2390 — Sahih al Bukhari 43:6
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، بِبَيْتِنَا يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ أَصْحَابُهُ، فَقَالَ " دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَاشْتَرُوا لَهُ بَعِيرًا، فَأَعْطُوهُ إِيَّاهُ ". وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ. قَالَ " اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்குத் தாம் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி,) ‘‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2391 — Sahih al Bukhari 43:7
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَاتَ رَجُلٌ، فَقِيلَ لَهُ قَالَ كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَأَتَجَوَّزُ عَنِ الْمُوسِرِ، وَأُخَفِّفُ عَنِ الْمُعْسِرِ، فَغُفِرَ لَهُ ". قَالَ أَبُو مَسْعُودٍ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு மனிதர் மரணித்துவிட்டார். அவரிடம் (அடக்கத் தலத்தில் வைத்து), ‘‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து)வந்தாய்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து)வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களி டம் தாம் கேட்டதாக அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2392 — Sahih al Bukhari 43:8
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ بَعِيرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطُوهُ ". فَقَالُوا مَا نَجِدُ إِلاَّ سِنًّا أَفْضَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ الرَّجُلُ أَوْفَيْتَنِي أَوْفَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطُوهُ فَإِنَّ مِنْ خِيَارِ النَّاسِ أَحْسَنَهُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு நீங்கள் அளித்தீர்கள் என்றால், அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், எவர் (தாம் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்து கிறாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2393 — Sahih al Bukhari 43:9
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ صلى الله عليه وسلم " أَعْطُوهُ ". فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ " أَعْطُوهُ ". فَقَالَ أَوْفَيْتَنِي، وَفَّى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒருமுறை) அம்மனிதர் தமது ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிறந்தவர், தாம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2394 — Sahih al Bukhari 43:10
حَدَّثَنَا خَلاَّدٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ " صَلِّ رَكْعَتَيْنِ ". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். லிஞீமுற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீ ராக!” என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்தபின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள். அத்தியாயம் :