Qurani·قرآني
தமிழ்

கடன், கடன் தீர்த்தல், சொத்து முடக்கம், திவாலு (கர்ள்)

25 ஹதீஸ்கள் · #2385–2409

ஹதீஸ் 2395 — Sahih al Bukhari 43:11
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم حَائِطِي، وَقَالَ ‏ "‏ سَنَغْدُو عَلَيْكَ ‏"‏‏.‏ فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதி யிருந்தன. அத்தியாயம் :
ஹதீஸ் 2396 — Sahih al Bukhari 43:12
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ تُوُفِّيَ، وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ فَأَبَى، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ ‏"‏ جُدَّ لَهُ فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ ‏"‏‏.‏ فَجَدَّهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ، فَوَجَدَهُ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالْفَضْلِ، فَقَالَ ‏"‏ أَخْبِرْ ذَلِكَ ابْنَ الْخَطَّابِ ‏"‏‏.‏ فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ، فَأَخْبَرَهُ‏.‏ فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارَكَنَّ فِيهَا‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில் வீர) மரணம் அடைந்தார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக) முப்பது வஸ்க்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.3 அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் அளிக்கும்படி நான் அந்த யூதரிடம் கேட்டேன். அவர் எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதையும் அந்த யூதர் மறுத்துவிட்டார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபிறகு, நான் பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸ்க்குளையும் (நிறைவாகக்) கொடுத்துவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸ்க்குகள் (அளவுக் குப் பேரீச்சங் கனிகள்) மீதியிருந்தன. பின்னர் நான் நடந்ததைத் தெரிவிப்ப தற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்ப தைக் கண்டேன். அவர்கள் (சலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதியிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் செய்தியை கத்தாபின் புதல்வரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள். எனவே, நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்சமரங்களுக் கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் யிபரக்கத்’ (அருள் வளம்) வழங்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2397 — Sahih al Bukhari 43:13
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ ‏"‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ‏"‏‏.‏ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ ‏"‏ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது, ‘‘இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புக் கோருவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2398 — Sahih al Bukhari 43:14
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلاًّ فَإِلَيْنَا ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒருவர் (இறக்கும்போது) ஒரு செல் வத்தை விட்டுச்சென்றால், அது அவரு டைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2399 — Sahih al Bukhari 43:15
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَا مِنْ مُؤْمِنٍ إِلاَّ وَأَنَا أَوْلَى بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏{‏النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ‏}‏ فَأَيُّمَا مُؤْمِنٍ مَاتَ وَتَرَكَ مَالاً فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَلْيَأْتِنِي فَأَنَا مَوْلاَهُ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இந்த உலகிலும் மறுவுலகிலும் நானே மிக நெருக்கமான (உரிமையுடைய) வன் ஆவேன். நீங்கள் விரும்பினால், யிதிண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட நபிதான் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்’ (33:6) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி) மரணித்து ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தைவழி உறவினர்கள் லி அவர்கள் எவ்வகையினராயினும் சரிலி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறாரோ அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குக் காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2400 — Sahih al Bukhari 43:16
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதியுள்ளவர் (தமது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாய மாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 2401 — Sahih al Bukhari 43:17
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ‏.‏ فَقَالَ ‏ "‏ دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், தாம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். (இதைப் புரிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(க் கடுமையாக)ப் பேச உரிமையுண்டு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2402 — Sahih al Bukhari 43:18
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ أَوْ إِنْسَانٍ قَدْ أَفْلَسَ، فَهْوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ ‏"‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தமது பொருளை அப்படியே (கொடுத்த போது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள மற்ற கடன் காரர்களைவிட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2403 — Sahih al Bukhari 43:19
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَعْتَقَ رَجُلٌ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ يَشْتَرِيهِ مِنِّي ‏"‏‏.‏ فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، فَأَخَذَ ثَمَنَهُ، فَدَفَعَهُ إِلَيْهِ‏.‏
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தம்முடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்வது?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அவ்வடிமையை வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார் கள்.9 அத்தியாயம் :
ஹதீஸ் 2404 — Sahih al Bukhari 43:20
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிக் கூறினார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்... என்று முழு ஹதீஸையும் கூறினார்கள்.10 அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.