நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில்தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக்கொள்வதை விரும்பவில்லை. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.24 அத்தியாயம் :
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக்கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘உங்கள் (தலையிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் தலையை மழித்துக்கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாட்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள்” என்றார்கள்.25 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இவற்றில் எதை முதல் குறிப்பிட்டார்கள்” என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில்தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக்கொள்வதை விரும்பவில்லை. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.27 அத்தியாயம் :
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், ‘‘கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள்: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர் களில் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, ‘‘அல்ல. இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.28 அப்போது ‘‘அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடிவானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பிறகு என்னிடம், ‘‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்” எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. (விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘‘நாம்தான் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள்தான் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்” என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘‘அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5706 — Sahih al Bukhari 76:26
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ أَنَّ امْرَأَةً تُوُفِّيَ زَوْجُهَا فَاشْتَكَتْ عَيْنَهَا، فَذَكَرُوهَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرُوا لَهُ الْكُحْلَ، وَأَنَّهُ يُخَافُ عَلَى عَيْنِهَا، فَقَالَ " لَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ تَمْكُثُ فِي بَيْتِهَا فِي شَرِّ أَحْلاَسِهَا ـ أَوْ فِي أَحْلاَسِهَا فِي شَرِّ بَيْتِهَا ـ فَإِذَا مَرَّ كَلْبٌ رَمَتْ بَعْرَةً، فَلاَ، أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ".
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (அதற்காக ‘இத்தா’ இருக்கும் போது) அப்பெண்ணுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்பெண்ணைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டு, ‘‘அவளது கண் பழுதாகிவிடும் அபாய மிருப்பதால் அவள் (கண்ணில் சிகிச்சைக் காக) அஞ்சனம் தீட்டிக்கொள்ளலாமா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அறியாமைக் காலத்தில்) உங்களில் ஒருத்தி (தன் கணவன் இறந்தபின்) ‘மோசமான ஆடை யணிந்தவளாக தன் வீட்டில் தங்கி யிருப்பாள்’ அல்லது ‘மோசமான வீட்டில் சாதாரண ஆடை அணிந்தவளாக (ஆண்டு முழுதும்) தங்கியிருப்பாள்’. (ஓராண்டு கழிந்தபின் அவ்வழியாக) ஏதேனும் ஒரு நாய் கடந்து சென்றால் அதன் மீது ஒட்டகச் சாணத்தை வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) ஆகவே, அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் (கழியும்வரை) அஞ்சனம் இடவேண்டாம்”31 என்று பதில் சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5707 — Sahih al Bukhari 76:27
وَقَالَ عَفَّانُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண் டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிட மிருந்து வெருண்டோடு.33 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :