நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோதுதான் அப்தில் மக் பின் உமைர் (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு நான் வந்தேன்.36 அத்தியாயம் :
ஹதீஸ் 5709 — Sahih al Bukhari #5709
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ مَيِّتٌ. قَالَ وَقَالَتْ عَائِشَةُ لَدَدْنَاهُ فِي مَرَضِهِ، فَجَعَلَ يُشِيرُ إِلَيْنَا، أَنْ لاَ تَلُدُّونِي. فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ. فَلَمَّا أَفَاقَ قَالَ " أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّونِي ". قُلْنَا كَرَاهِيَةَ الْمَرِيضِ لِلدَّوَاءِ. فَقَالَ " لاَ يَبْقَى فِي الْبَيْتِ أَحَدٌ إِلاَّ لُدَّ ـ وَأَنَا أَنْظُرُ ـ إِلاَّ الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள்.37 அத்தியாயம் :
ஹதீஸ் 5710 — Sahih al Bukhari #5710
ஹதீஸ் 5711 — Sahih al Bukhari #5711
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களது வாய் ஓரத்தில் மருந்தூற்றி னோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள். ‘‘நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக் கிறார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்óக்கொண்டோம். அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமையாகத்) தெளிந்தபோது, ‘‘என் வாயில் மருந்து ஊற்ற வேண்டாமென்று நான் உங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். நாங்கள், ‘‘ஆம். ஆனால், நோயாளி மருந்தை வெறுப்பது போன்று தான் (நீங்களும் வெறுக்கிறீர்கள் என நினைத்தோம்)” என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒருவர் பாக்கி இல்லாமல் வீட்டிலுள்ள அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும். அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில், (வாயில் மருந்து ஊற்றும்போது) உங்க ளுடன் அவர் இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.38 அத்தியாயம் :
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.39 (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத்தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்” என்று கூறினார்கள்.40 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஏழில்) இரண்டை (மட்டும்) நமக்கு விவரித்தார்கள். (மீதி) ஐந்தை விவரிக்கவில்லை” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டேன்.41 அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஃப்யான் (ரஹ்) அவர்கள், குழந்தை யின் அண்ணத்தை விரலால் அழுத்துவது குறித்து விவரிக்கையில், தமது விரலை மேல்வாயின் உட்புறத்தில் நுழைத்து அழுத்திக் காட்டினார்கள். (இதுதான் நோக்கமே தவிர, மூலத்தில் ‘இஃலாக்’ எனும் சொல் இடம்பெற்றிருப்பதற்காகத்) தொண்டையில் எதையும் மாட்டுவது நோக்கமாகாது. அத்தியாயம் :
ஹதீஸ் 5714 — Sahih al Bukhari 76:31
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاشْتَدَّ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ بَيْنَ عَبَّاسٍ وَآخَرَ. فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ هَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيٌّ. قَالَتْ عَائِشَةُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ مَا دَخَلَ بَيْتَهَا وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ " هَرِيقُوا عَلَىَّ مِنْ سَبْعِ قِرَبٍ لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ ". قَالَتْ فَأَجْلَسْنَاهُ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ مِنْ تِلْكَ الْقِرَبِ، حَتَّى جَعَلَ يُشِيرُ إِلَيْنَا أَنْ قَدْ فَعَلْتُنَّ. قَالَتْ وَخَرَجَ إِلَى النَّاسِ فَصَلَّى لَهُمْ وَخَطَبَهُمْ.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களுக்கு வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே தொங்கியபடி (எனது வீட்டிற்குப்) புறப்பட்டார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான் ‘‘இல்லை (தெரியாது)” என்று சொன்னேன். அவர்கள், ‘‘அவர் அலீ (ரலி) அவர்கள் தான்” என்று கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து நோய் கடுமையாகிவிட்டபோது, ‘‘வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் இறுதி உபதேசம் செய்யக்கூடும்” என்று சொன்னார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய (இன்னொரு) துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தில் அவர்களை அமரச் செய்து, அவர்கள்மீது அந்தத் தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றலானோம். அவர்கள் இறுதியில் எங்களை நோக்கி, ‘‘(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று சைகை காட்டலானார்கள். பிறகு மக்களை நோக்கி (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று மக்களுக்கு தொழுகை நடத்தி உரையும் நிகழ்த்தினார்கள்.42 அத்தியாயம் :
ஹதீஸ் 5715 — Sahih al Bukhari 76:32
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ الأَسَدِيَّةَ ـ أَسَدَ خُزَيْمَةَ، وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِي بَايَعْنَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْىَ أُخْتُ عُكَّاشَةَ ـ أَخْبَرَتْهُ أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِابْنٍ لَهَا، قَدْ أَعْلَقَتْ عَلَيْهِ مِنَ الْعُذْرَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى مَا تَدْغَرْنَ أَوْلاَدَكُنَّ بِهَذَا الْعِلاَقِ عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ مِنْهَا ذَاتُ الْجَنْبِ ". يُرِيدُ الْكُسْتَ، وَهْوَ الْعُودُ الْهِنْدِيُّ. وَقَالَ يُونُسُ وَإِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنِ الزُّهْرِيِّ عَلَّقَتْ عَلَيْهِ.
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குஸைமா குலத்து ‘அசத்’ கிளையைச் சேர்ந்த உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல்அசதிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக்கால முஹாஜிர் (புலம்பெயர்ந்த) பெண்களில் ஒருவர் ஆவார். அவர் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரி ஆவார். அவர் கூறினார்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டுசென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன் படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்” என்று கூறினார்கள். ‘குஸ்த்’ எனும் கோஷ்டமே ‘இந்தியக் குச்சி’ எனப்படுகிறது.43 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘என் சகோதரருக்குத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்துவருகிறது” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவரும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். பிறகு அவர் வந்து, ‘‘என் சகோதரருக்குத் தேன் ஊட்டினேன்; ஆனால், அது அவருக்கு வயிற்றுப்போக்கை அதிகமாக்கவே செய்தது” எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உண்மை சொன்னான். உன் சகோதரரின் வயிறுதான் பொய் பேசியது” என்று பதில் சொன்னார்கள்.45 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தொற்று நோய் கிடையாது. ‘ஸஃபர்’ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை)மணல் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களி டம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்ற னவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் முதல் (முதல் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச்செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.47 அத்தியாயம் :