Qurani·قرآني
தமிழ்

மாதவிடாய் (ஹைள்)

40 ஹதீஸ்கள் · #294–333

ஹதீஸ் 314 — Sahih al Bukhari 6:19
حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ قَالَ ‏"‏ خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرِي بِهَا ‏"‏‏.‏ قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ قَالَ ‏"‏ تَطَهَّرِي بِهَا ‏"‏‏.‏ قَالَتْ كَيْفَ قَالَ ‏"‏ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي ‏"‏‏.‏ فَاجْتَبَذْتُهَا إِلَىَّ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயி-ருந்து (தூய்மை அடைய) எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், குளிக்கும் முறையைக் கூறினார்கள். “கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள். அந்தப் பெண்மணி, “அதனால் நான் எவ்வாறு தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எவ்வாறு (தூய்மைப்படுத்த வேண்டும்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்ட வாறு) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள் என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் என்ன சொல்லவருகி றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக” என்று கூறினேன். அத்தியாயம் :
ஹதீஸ் 315 — Sahih al Bukhari 6:20
حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم كَيْفَ أَغْتَسِلُ مِنَ الْمَحِيضِ قَالَ ‏"‏ خُذِي فِرْصَةً مُمَسَّكَةً، فَتَوَضَّئِي ثَلاَثًا ‏"‏‏.‏ ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَحْيَا فَأَعْرَضَ بِوَجْهِهِ أَوْ قَالَ ‏"‏ تَوَضَّئِي بِهَا ‏"‏ فَأَخَذْتُهَا فَجَذَبْتُهَا فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “மாதவிடாயி -ருந்து (தூய்மையாகிக்கொள்ள) நான் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, ‘மூன்று முறை சுத்தம் செய்’ என்றோ அல்லது ‘அதன் மூலம் சுத்தம் செய்’ என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து, நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிச் சொன்னேன். அத்தியாயம் :
ஹதீஸ் 316 — Sahih al Bukhari 6:21
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَهْلَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَكُنْتُ مِمَّنْ تَمَتَّعَ، وَلَمْ يَسُقِ الْهَدْىَ، فَزَعَمَتْ أَنَّهَا حَاضَتْ، وَلَمْ تَطْهُرْ حَتَّى دَخَلَتْ لَيْلَةُ عَرَفَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ لَيْلَةُ عَرَفَةَ، وَإِنَّمَا كُنْتُ تَمَتَّعْتُ بِعُمْرَةٍ‏.‏ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ انْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي، وَأَمْسِكِي عَنْ عُمْرَتِكِ ‏"‏‏.‏ فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْتُ الْحَجَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ لَيْلَةَ الْحَصْبَةِ فَأَعْمَرَنِي مِنَ التَّنْعِيمِ مَكَانَ عُمْرَتِي الَّتِي نَسَكْتُ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ‘இஹ்ராம்’ கட்டினேன். அப்போது நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராத ‘தமத்துஉ’ வகை இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ‘அரஃபா’வுடைய இரவு (துல்ஹஜ் எட்டாம் நாள் பின்னேரம்) வரும்வரை நான் தூய்மையாகவில்லை. (மாதவிடாயி-ருந்து நீங்கிய அந்த இரவு) நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது ‘அரஃபா’ வுடைய இரவு; நான் ‘உம்ரா’ செய்துவிட்டுத் திரும்பி, ‘இஹ்ராம்’ கட்டி ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன். (ஆனால், என்னால் உம்ரா செய்ய முடியாமல் போய்விட்டது)” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். உம்ரா செய்வதை நிறுத்திவிடு (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!)” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்தபோது (மதீனா செல்லும் வழியில்) முஹஸ்ஸப்’ (எனுமிடத்தில் நாங்கள்) இரவில் (தங்கியிருந்தபோது என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா (மாதவிடாயினால் செய்ய முடியாமற்போன) அந்த உம்ராவுக்குப் பதிலாக அமைந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 317 — Sahih al Bukhari 6:22
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهْلِلْ، فَإِنِّي لَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ ‏"‏‏.‏ فَأَهَلَّ بَعْضُهُمْ بِعُمْرَةٍ، وَأَهَلَّ بَعْضُهُمْ بِحَجٍّ، وَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِحَجٍّ ‏"‏‏.‏ فَفَعَلْتُ حَتَّى إِذَا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي أَخِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَخَرَجْتُ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي‏.‏ قَالَ هِشَامٌ وَلَمْ يَكُنْ فِي شَىْءٍ مِنْ ذَلِكَ هَدْىٌ وَلاَ صَوْمٌ وَلاَ صَدَقَةٌ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் (மதீனாவி-ருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளலாம். ஏனெனில், குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்திருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்று கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (எனவே, என்னால் முத-ல் எண்ணி யிருந்த உம்ராவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு; உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன். ‘அல்ஹஸ்பா’ (முஹஸ்ஸப்) எனும் இடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவருடன்) நான் ‘தன்ஈம்’ என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன். ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தானதர்மங்கள் செய்வதோ இருக்க வில்லை.6 அத்தியாயம் :
ஹதீஸ் 318 — Sahih al Bukhari 6:23
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ‏.‏ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ ‏"‏‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பெண்ணின்) கருப்பைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக்கொண்டிருப்பார். அதை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா, அல்லது பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ் வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போதே எழுதப்படும். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 319 — Sahih al Bukhari 6:24
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ، وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ بِنَحْرِ هَدْيِهِ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ ‏"‏‏.‏ قَالَتْ فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ، وَلَمْ أُهْلِلْ إِلاَّ بِعُمْرَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ، وَأُهِلَّ بِحَجٍّ، وَأَتْرُكَ الْعُمْرَةَ، فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي، فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنَ التَّنْعِيمِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென் றோம். எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களில்) யார் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமி-ருந்து விலகிக்கொள்ளலாம். யார் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை தமது இஹ்ராமி-ருந்து விலக வேண்டாம். (உங்களில்) யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள். (இந்நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும்வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும்படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளு மாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நிறைவுசெய்தேன். பின்னர் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ரா வுக்காக உம்ரா செய்துகொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 320 — Sahih al Bukhari 6:25
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي ‏"‏‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவராக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது, “இது இரத்தக் குழா(யி-ருந்து வெளிவருவதே)யாகும்; மாத விடாயன்று. எனவே, மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 321 — Sahih al Bukhari 6:26
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَتْنِي مُعَاذَةُ، أَنَّ امْرَأَةً، قَالَتْ لِعَائِشَةَ أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلاَ يَأْمُرُنَا بِهِ‏.‏ أَوْ قَالَتْ فَلاَ نَفْعَلُهُ‏.‏
முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “பெண்களாகிய நாங்கள் மாதவிடாயி-ருந்து தூய்மையானதற்குப் பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? (அல்லது மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நீ (காரிஜிய்யா கூட்டத்தாரின் பிறப்பிடமான ‘கூஃபா’ நகருக்கு அருகிலுள்ள) ‘ஹரூரா’ எனும் இடத்தைச் சேர்ந்தவளா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்ட தொழுகைகளைத் தொழுமாறு ‘எங்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்கமாட்டார்கள்’ அல்லது ‘அத்தொழுகைகளை நாங்கள் தொழமாட்டோம்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 322 — Sahih al Bukhari 6:27
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ قَالَتْ حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي الْخَمِيلَةِ، فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَنُفِسْتِ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ، فَدَعَانِي فَأَدْخَلَنِي مَعَهُ فِي الْخَمِيلَةِ‏.‏ قَالَتْ وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ‏.‏
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் அதிலிருந்து மெல்ல நழுவி(ச் சென்று), மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுத்து அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை அழைத்து, அந்தப் போர்வைக்குள் என்னை நுழைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடு வார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளி) பெருந்துடக்கின் குளியலை நிறைவேற்றுவோம். அத்தியாயம் :
ஹதீஸ் 323 — Sahih al Bukhari 6:28
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيلَةٍ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ ‏ "‏ أَنُفِسْتِ ‏"‏‏.‏ فَقُلْتُ نَعَمْ‏.‏ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ‏.‏
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே (அதிலிருந்து) நழுவி(ச் சென்று), மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தமக் கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.