حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي الْعِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشَرَةَ، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ. قَالَتْ كُنَّا نُدَاوِي الْكَلْمَى، وَنَقُومُ عَلَى الْمَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صلى الله عليه وسلم أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ قَالَ " لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَلْتَشْهَدِ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ ". فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ بِأَبِي نَعَمْ ـ وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلاَّ قَالَتْ بِأَبِي ـ سَمِعْتُهُ يَقُولُ " يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ، أَوِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى ". قَالَتْ حَفْصَةُ فَقُلْتُ الْحُيَّضُ فَقَالَتْ أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ وَكَذَا وَكَذَا
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு பெருநாட்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டுவரக் கூடாதென எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ர-) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். -என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா-ர-) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.- என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்) காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்துக்கொள்வோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எங்களில் ஒரு பெண்ணுக்குத் துப்பட்டா இல்லா விட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டா ஒன்றை அவளுக்கு அணியக்கொடுக் கட்டும்! அவள் நன்மையான காரியங் களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனை களிலும் கலந்துகொள்ளட்டும்!” என்று சொன்னார்கள். ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் “என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். (நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்)” என்று சொன்னார்கள். -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் “நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்” என்பதையும் சேர்த்தே கூறுவார். நபி (ஸல்) அவர்கள், “இளம் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரார்த்தனைகளிலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள்” என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா. (இதை அறிவித்த உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடம்) நான், “மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்த-ஃபா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கிறேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் தூய்மை அடைவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை (தொழுகையை விட்டுவிடாதே. உனக்கு ஏற்பட்டுள்ள) இது, இரத்தக் குழா(யி-ருந்து வருவதே)யாகும், (மாதவிடாயன்று). ஆயினும், (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவுக்குத் தொழுகையை விட்டுவிடு. பிறகு குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் ‘உளூ’ செய்து) தொழுதுகொள்” என்றார்கள். அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிப்படும்) மஞ்சள் நிற நீர்மத்ûயும் கலங்கல் நிற நீர்மத்தையும் நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) மாதவிடா யாகக் கருதியதில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 327 — Sahih al Bukhari 6:32
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ أُمَّ حَبِيبَةَ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَسَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ فَقَالَ " هَذَا عِرْقٌ ". فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ.
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்தது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளித்து (விட்டுத் தொழுது)கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரோ ஒவ்வொரு தொழுகைகளுக்கும் குளித்துவந்தார். பிறகு “இது இரத்த நாள நோயாகும் (மாதவிடாயன்று)” என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 328 — Sahih al Bukhari 6:33
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ قَدْ حَاضَتْ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَعَلَّهَا تَحْبِسُنَا، أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ ". فَقَالُوا بَلَى. قَالَ " فَاخْرُجِي ".
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நம்மை (ஊருக்குச்) செல்ல விடாமல் தடுத்துவிடுவார் போ-ருக்கிறதே!” என்று கூறிவிட்டு “அவர் உங்களுடன் ‘தவாஃப் (அல்இஃபாளா)’ செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தோர், “ஆம் (தவாஃப் செய்தார்)” என்று பதிலளித்தார் கள். “அப்படியானால் புறப்படு! (போகலாம்)” என்றார்கள். அத்தியாயம் :
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களிடம்), “மாதவிடாய் ஏற்படும்போது, தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டு (அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 332 — Sahih al Bukhari 6:36
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، قَالَ أَخْبَرَنَا شَبَابَةُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ امْرَأَةً، مَاتَتْ فِي بَطْنٍ، فَصَلَّى عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَامَ وَسَطَهَا.
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மகப்பேறு இரத்தப்போக்கால் ஒரு பெண் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் பிரேதத்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 333 — Sahih al Bukhari 6:37
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ ـ اسْمُهُ الْوَضَّاحُ ـ مِنْ كِتَابِهِ قَالَ أَخْبَرَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ خَالَتِي، مَيْمُونَةَ ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا كَانَتْ تَكُونُ حَائِضًا لاَ تُصَلِّي، وَهْىَ مُفْتَرِشَةٌ بِحِذَاءِ مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُصَلِّي عَلَى خُمْرَتِهِ، إِذَا سَجَدَ أَصَابَنِي بَعْضُ ثَوْبِهِ.
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு நான் தொழாமல் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்திற்கு அருகில் படுத்திருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப் பட்ட) தமது தொழுகை விரிப்பில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது, அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என்மீது படும். இதை அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், தம் தாயின் சகோதரியான மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :