ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் ‘தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கூற வேண்டும் எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம். எங்கள் இருவரில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது வீட்டில்) தேன் அருந்தினேன். ஆனால், இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். அப்போது, “நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கும் (66:1ஆவது) வசனம் அருளப்பெற்றது. (66:4ஆவது வசனத்தில்) “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...” என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர் களையும் குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) “நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசிய மாகச் சொல்லியிருந்தார்” என்பது, “இல்லை; நான் தேன்தான் அருந்தினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் குறிக்கிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் யூசுஃப் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்ராஹீம் பின் மூசா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “நபி (ஸல்) அவர்கள், இனிமேல் நான் ஒரு போதும் இவ்வாறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். இதை யாரிடமும் தெரிவித்துவிடாதே!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.92 அத்தியாயம் :
ஹதீஸ் 6692 — Sahih al Bukhari 83:69
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَوَلَمْ يُنْهَوْا عَنِ النَّذْرِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ النَّذْرَ لاَ يُقَدِّمُ شَيْئًا، وَلاَ يُؤَخِّرُ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنَ الْبَخِيلِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நேர்த்திக்கடன் செய்ய வேண்டா மென அவர்களுக்குத் தடை விதிக் கப்படவில்லையா? நபி (ஸல்) அவர்கள் “நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது” என்று கூறினார்கள்.93 அத்தியாயம் :
ஹதீஸ் 6693 — Sahih al Bukhari 83:70
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ النَّذْرِ وَقَالَ " إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَلَكِنَّهُ يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித் தார்கள். மேலும், “நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன் னார்கள்.94 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டுவந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டுசெல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்குமுன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.95 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப் பாளரான இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தலைமுறையினரைக் குறிப் பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறை யினரைக் கூறினார்களா? என்பது எனக்குத் தெரியாது.- என்று கூறினார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்துகொள்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96 அத்தியாயம் :
ஹதீஸ் 6696 — Sahih al Bukhari 83:73
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் கீழ்ப்படியட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறுசெய்திட வேண்டாம். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு ‘இஃதிகாஃப்’ இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.97 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.98 அத்தியாயம் :
ஹதீஸ் 6699 — Sahih al Bukhari 83:76
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ ". قَالَ نَعَمْ. قَالَ " فَاقْضِ اللَّهَ، فَهْوَ أَحَقُّ بِالْقَضَاءِ ".
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறை வேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.99 அத்தியாயம் :
ஹதீஸ் 6700 — Sahih al Bukhari 83:77
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் கீழ்ப்படியட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறுசெய்திட வேண்டாம். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100 அத்தியாயம் :